என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஐபோன் 15 ப்ரோ"
- ஆப்பிள் நிறுவனத்தின் வொண்டர்லஸ்ட் நிகழ்வில் புதிய ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்கள் அறிமுகம்.
- புதிய ஆப்பிள் சாதனங்கள் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிவிப்பு.
ஆப்பிள் நிறுவனம் வொண்டர்லஸ்ட் நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2, ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்தது. புதிய ஆப்பிள் சாதனங்களில் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலில் ஆப்பிள் எஸ்9 சிப்செட் மூலம் இயங்குகிறது. இதில் உள்ள டபுள் டாப் அம்சம் கொண்டு அழைப்புகளை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலின் பல்வேறு அம்சங்களை டபுள் டேப் மூலம் இயக்கிவிட முடியும். புதிய சீரிஸ் 9 மாடலை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 இந்திய விலை:
புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 அலுமினியம் மாடலின் இந்திய விலை ரூ. 41 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. இதன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வெர்ஷனின் இந்திய விலை ரூ. 70 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 இந்திய முன்பதிவு செப்டம்பர் 15-ம் தேதி துவங்க இருக்கிறது. விற்பனை செப்டம்பர் 22-ம் தேதி துவங்குகிறது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலின் விற்பனையும் செப்டம்பர் 22-ம் தேதி துவங்குகிறது.
ஐபோன் 15 சீரிஸ் இந்திய விலை:
ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களின் இந்திய விலை முறையே ரூ. 79 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 89 ஆயிரத்து 900 என்று துவங்குகின்றன. இந்த விலை இரு மாடல்களின் 128 ஜி.பி. மெமரி கொண்ட வெர்ஷனுக்கானது ஆகும்.
ஐபோன் 15 (256 ஜி.பி. மெமரி) மாடல் விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 15 (512 ஜி.பி. மெமரி) மாடல் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐபோன் 15 பிளஸ் (256 ஜி.பி. மெமரி) மாடல் விலை ரூ. 99 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 15 பிளஸ் (512 ஜி.பி. மெமரி) மாடல் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் இந்திய விலை:
ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் இந்திய விலை முறையே ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. இந்த விலை இவற்றின் 128 ஜி.பி. மாடலுக்கானது ஆகும்.
ஐபோன் 15 ப்ரோ (256 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 15 ப்ரோ (512 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 64 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 15 ப்ரோ (1 டி.பி.) மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 84 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (256 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (512 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 79 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (1 டி.பி.) மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 99 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 15-ம் தேதி துவங்குகிறது. இவற்றின் விற்பனை செப்டம்பர் 22-ம் தேதி துவங்க இருக்கிறது.
- ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்களில் முற்றிலும் புதிய டைட்டானியம் டிசைன் கொண்டுள்ளது.
- ஐபோன் 15 ப்ரோ சீரிசில் உள்ள ஏ17 சிப்செட் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களை தொடர்ந்து ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்கள் டைட்டானியம் டிசைன் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் முற்றிலும் புதிய ஆப்பிள் ஏ17 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிராசஸர் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்களில் முற்றிலும் புதிய யு.எஸ்.பி. டைப் 3 போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யு.எஸ்.பி. 3 போர்ட் அதிகபட்சம் நொடிக்கு 10 ஜி.பி. வரையிலான டேட்டா பரிமாற்றத்தை சாத்தியப்படுத்தும். ஐபோன் 15 ப்ரோ மாடலில் 48MP பிரைமரி கேமரா சென்சார், 12MP 3x டெலிஃபோட்டோ கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் 5x டெலிஃபோட்டோ கேமரா, 120mm ஃபோக்கல் லென்த் வசதி உள்ளது.
ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்களில் ஸ்பேஷியல் வீடியோ பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோக்களை ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டில் பார்த்து ரசிக்க முடியும். புதிய ஐபோன் 15 ப்ரோ விலை 999 டாலர்கள், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விலை 1199 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 15-ம் தேதி துவங்குகிறது. விற்பனை அமெரிக்காவில் செப்டம்பர் 22-ம் தேதி துவங்க இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்