என் மலர்
நீங்கள் தேடியது "வாலி"
- சிவபெருமான் அருளியபடி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு அஞ்சனை என்று பெயரிட்டனர்.
- ஆஞ்சனைக்கும் நீண்ட நாட்களாகக் குழந்தை பிறக்கவில்லை.
கேசரி என்ற சிவபக்தர் ஒருவர் திரேதா யுகத்தில் வாழ்ந்து வந்தார்.
அவருக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை.
அதனால் அவர் சிவபெருமானை நோக்கித் தவம் இருந்தார்.
சிவபெருமான் கேசரி முன் காட்சித் தந்தார். அவரிடம் கேசரி தனக்கு பிள்ளை வரம் வேண்டும் என்றார்.
அதற்கு சிவபெருமான் "பக்தா... உனக்கு மகன் பிறக்க பாக்கியமில்லை. ஒரு மகள் பிறக்கவே பாக்கியம் உள்ளது.
அந்த மகளுக்கு ஒரு மகன் பிறப்பான். அந்த மகன் வலிமையும், வீரமும் பெற்று மரணம் இல்லாதவனாகச் சிறப்பாக திகழ்வான் எனக் கூறி விட்டு மறைந்து போனார்.
சிவபெருமான் அருளியபடி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு அஞ்சனை என்று பெயரிட்டனர்.
அஞ்சனைக்கு திருமண வயது வந்ததும் அவளை வானர வீரன் ஒருவனுக்கு கேசரி மணமுடித்து வைத்தார்.
ஆஞ்சனைக்கும் நீண்ட நாட்களாகக் குழந்தை பிறக்கவில்லை.
இச்சமயத்தில் தரும தேவதை பெண் வடிவில் தோன்றி திருவேங்கட மலைக்கு கணவனுடன் சென்று பெருமாளை வணங்கி வந்தால் ஆண்மகன் பிறப்பான் எனக் கூறினாள்.
- தான் தவம் இருந்தபோது கருவுற்றதை அறிந்து அஞ்சனாதேவி வேதனைப்பட்டாள்.
- அஞ்சனாதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு அனுமன் எனப் பெயரிட்டனர்.
அஞ்சனாதேவி கணவருடன் சென்று பெருமாளை வணங்கினாள். அதன் பிறகு காற்றையே எந்த நேரமும் உணவாகக் கொண்டு இறைவனைக் குறித்து கடும் தவம் இருந்தாள்.
இதன் காரணமாய் வாயு பகவானின் அருளினால் ஒரு கரு அவள் வயிற்றில் வளர்ந்தது.
தான் தவம் இருந்தபோது கருவுற்றதை அறிந்து அஞ்சனாதேவி வேதனைப்பட்டாள்.
அப்போது அசரிரியாய் ஒரு குரல் வந்தது.
மகேஸ்வரனின் கருணையால், வாயுதேவனின் உருவமே உன் கருவில் இருப்பதால் பிறக்கும் குழந்தைக்கு "வாயு புத்திரன்" எனப் பெயரிடு, அவன் சகல சக்திகளும் பெற்றவனாய் என்றும் சிரஞ்சீவியாய் வாழ்வான் என அந்தக் குரல் கூறியது.
அதன்படி அஞ்சனாதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அனுமன் எனப் பெயரிட்டனர்.
அனுமன் வேதங்கள் புராணங்களையெல்லாம் எல்லாம் கற்று மிகுந்த ஆற்றல் கொண்டவராக விளங்கினார்.
அஞ்சனா தேவி தன் மகனின் திறமையைக் கண்டு வியந்து கிஷ்கிந்தைக்கு அழைத்துச் சென்று சுக்ரீவனிடத்தில் அறிமுகம் செய்து வைத்தாள்.
சுக்ரிவன் தனது ஆட்சிப் பொறுப்பை அனுமனிடம் ஒப்படைத்தார்.
- இலங்கைக்குப் போகும் வல்லமை படைத்தவன் அனுமனே என முடிவு செய்தார்கள்.
- அனுமன் புயல் காற்றைப் போல ஆகாயத்தில் போய்க் கொண்டிருந்தார்.
ராமனும், லக்குவனும் கிஷ்கிந்தை வருவதை அறிந்த சுக்ரீவனும், அனுமனும் வானரப் படைகளுடன் ராமனைச் சந்தித்தார்கள்.
தான் வந்த காரணமும் சீதையை ராவணன் கடத்தி சென்றதையும் ராமன் விளக்கினார்.
இலங்கையில் தான் சீதை இருக்கிறாள் என்பதை அறிந்த அனுமன் யாரை இலங்கைக்கு அனுப்பி சீதையைக் கண்டுபிடிப்பது என யோசனையில் மூழ்கினார்.
கடலைத் தாண்டி இலங்கைக்குப் போய்த் திரும்பி வரும் திறமை யாருக்கு உண்டு என்பதை வானர வீரர்களும் யோசித்தார்கள்.
நீலன், அங்கதன், சாம்பவான் போன்றோர் தங்கள் இயலாமையைக் கூறி வருந்தினர்.
இலங்கைக்குப் போகும் வல்லமை படைத்தவன் அனுமனே என முடிவு செய்தார்கள். இலங்கைக்குப் புறப்பட்டார் அனுமன்.
அனுமன் புயல் காற்றைப் போல ஆகாயத்தில் போய்க் கொண்டிருந்தார்.
அவரை எதிர்க்க வந்த சரசை என்னும் அரக்கியை வென்று மேலும் பறந்து சென்றார்.
எமதர்மன் போல அங்காரதாரை என்ற ராட்சசி குறுக்கே நின்றாள். அவளையும் கொன்றார்.
மாலை நேரம் அனுமன் இலங்கையில் வந்து இறங்கினார்.
- கணையாழியைக் கண்டதும் சீதை மகிழ்ந்து உள்ளம் நெகிழ்ந்து போனாள்.
- தன் ஆடையிலிருந்து சூடா மணியை அனுமனிடம் சீதை கொடுத்தாள்.
அசோகவனத்தில் சீதை காணப்பட்டாள். சீதையைக் கண்டதும் அனுமன் ஆடினார், பாடினார், மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்.
"உயிர் விடும் தருணத்தில் ராம நாமம் சொல்லி என்னைக் காப்பாற்றிய வீரா நீ யார்?" எனக்கேட்டாள். சீதை.
"அன்னையே நான் ராம தூதன். என் பெயர் அனுமன். ராமபிரான் உங்கள் நினைவாகவே எப்போதும் இருக்கிறார்.
உங்களுடைய நகைகளைப் பார்த்து ஆறுதல் அடைந்து வருகிறார் என்றார்.
ராமர் கொடுத்தனுப்பிய கணையாழியை சீதையிடம் கொடுத்தார் ஆஞ்சநேயர்.
கணையாழியைக் கண்டதும் சீதை மகிழ்ந்து உள்ளம் நெகிழ்ந்து போனாள்.
"தாயே நான் திரும்பிப் போய் ராமனிடம் சொல்ல வேண்டிய செய்தி யாது?" எனப் பணிவுடன் கேட்டார் ஆஞ்சநேயர்.
அதற்கு சீதை, "நான் இன்னும் ஒரு மாத காலம்தான் உயிர் வைத்திருப்பேன்! இதை என் நாயகன் ராமன் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன்.
ஒரு மாதத்திற்குள் ராமன் வந்து என்னை மீட்காவிட்டால் நான் இறந்து போவது நிச்சயம் என்று கூறுவாய்" என்றாள் சீதா.
ராமனுக்கு நம்பிக்கை உண்டாக்குமாறு தன் ஆடையிலிருந்து சூடா மணியை அவரிடம் கொடுக்குமாறு அனுமனிடம் சீதை கொடுத்தாள்.
ஆஞ்சயேர் அதைப் பணிவுடன் பெற்றுக் கொண்டு விடை பெற்றார்.
- அனுமார் பெரிய உருவம் எடுத்து, சஞ்சீவி மலையை அப்படியே பெயர்த்தெடுத்து விடுகிறார்.
- ராமர் அனுமாரைத் தனது தம்பிகளில் ஒருவராக அன்போடு அறிவிக்கிறார்.
போரில் ராமனது தம்பி இலக்குவன் காயங்களுடன் மயக்கம் அடைகிறார்.
இலக்குவனைக் காப்பாற்ற சஞ்சீவினி மலையில் இருந்து மூலிகை மருந்தினைக் கொண்டு வருவதற்காக அனுமார் அனுப்பப்படுகிறார்.
இதை அறிந்த ராவணன் அனுமனுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்துகிறான்.
அனுமன் அவற்றைக் கடந்து சஞ்சீவினி மலையை அடைந்தார்.
ஆனால் அங்கு குறிப்பிட்ட மூலிகையினை அவரால் அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை.
அன்றைய தினம் முடிவடையும் முன்பு மூலிகையினை கொண்டு வந்தால்தான் இலக்குவனைக் காப்பாற்ற இயலும் என்ற நிலை உள்ளது.
இதனால் அனுமார் பெரிய உருவம் எடுத்து, சஞ்சீவினி மலையினை அப்படியே அடியோடு பெயர்த்தெடுத்து விடுகிறார்.
பின்னர் வானத்தில் பறந்து போர்க்களத்தினை வந்து அடைகிறார்.
பின்னர் மலையில் இருந்து மூலிகை மருந்து இலக்குவனுக்குத் தரப்பட, இலக்குவன் உயிர் பிழைக்கிறார்.
இதனால் ராமன் பெருமகிழ்ச்சி கொண்டு, அனுமாரை கட்டித் தழுவுகிறார்.
ராமர் அனுமாரைத் தனது தம்பிகளில் ஒருவராக அன்போடு அறிவிக்கிறார்.
அனுமார் சஞ்சீவினி மலையைத் தூக்கிக் கொண்டு அயோத்தி வழியே வானத்தில் பறந்து வருகிறார்.
அப்போது ராமனது தம்பி பரதன் யாரோ அரக்கன் ஒருவன் அயோத்தியை தாக்க வருகிறான் என்று நினைத்துக் கொண்டு அனுமாரை நோக்கி அம்பினைத் தொடுக்கிறார்.
அம்பினில் ராமன் பெயர் இருப்பதைக் கண்டு, அனுமார் அதை தடுக்காமல் இருக்கிறார்.
இதனால் அந்த அம்பு அனுமாரது காலைத் துளைக்கிறது.
உடனே வானத்தில் இருந்து கீழிறங்கி, பரதனிடம், உன் தமையன் இலக்குவனைக் காக்கவே மலையைத் தூக்கிச் செல்வதாகக் கூறினார்.
இதைக் கேட்டதும் பரதன் தன் தவறை நினைத்து வருந்துகிறார்.
பதிலுக்குப் பரதன் தான் ஒரு அம்பினை இலங்கையை நோக்கி செலுத்தினால் அதில் அனுமார் அமர்ந்து எளிதாக இலங்கையை அடையலாமே என்கிறார்.
அனுமாரோ அதை மறுத்துவிட்டு, அடிபட்ட காலுடனே இலங்கையை நோக்கி விரைந்தார்.
- ஏனெனில் இராமர் சீதையை விட அவருக்கு உயர்வானது வேறொன்றுமில்லை.
- மார்பினைத் திறந்து அதில், தன் இதயத்தில் ராமர் சீதை வீற்றிருப்பதைக் காட்டுகிறார்.
ராவண வதம் முடித்து ராமன் முதலானோர் அயோத்தி திரும்பி ராமன் முடி சூட்டிய பின், தனக்கு உதவி செய்தவர்களுக்கு தக்க பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது இராமன் அருகே யாதொரு பரிசினையும் எதிர்பாராத அனுமன் வர,
இராமன் அனுமனை ஆரத் தழுவிக்கொண்டு, அனுமன் செய்த உதவிகளுக்கெல்லாம் எப்பரிசினாலும் ஈடுகட்ட முடியாது எனப் புகழ்கிறார்.
அக்கணம் சீதையோ ஏதாவது ஒரு பரிசினை தங்கள் நினைவாக அனுமனுக்கு தர வேண்டுமன விழைந்து,
தன் கழுத்தில் அணிந்திருந்த இரத்திங்கள் பதித்த விலை உயர்ந்த மாலையைப் பரிசளிக்கிறார்.
அதை பெற்றுக்கொண்ட அனுமன், அந்த மாலையில் பதித்திருந்த இரத்தினங்களை வெளியே எடுத்து அதில் ராமர் சீதை தெரிகிறார்களா எனப் பார்க்கிறார்.
ஏனெனில் இராமர் சீதையை விட அவருக்கு உயர்வானது வேறொன்றுமில்லை.
இதை அறியாத ஒரு சிலர் அனுமனைப் பார்த்து நகைக்க,
அனுமனோ அனைவரும் அறியும் வண்ணம் தனது மார்பினைத் திறந்து அதில்,
தன் இதயத்தில் ராமர் சீதை வீற்றிருப்பதைக் காட்டுகிறார்.
- ராவணனின் மாளிகையில் சீதையைத் தேடும்கால் பூனை வடிவினில் தனது உருவினை மாற்றிக் கொள்கிறார்.
- ஒரு பெரிய மலை போல் தன் உருவினை மாற்றித் தனது திறனை சீதைக்கு காட்டுகிறார்.
ராமயணத்தில் பல இடங்களில் அனுமன் தனது உருவினை மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவராக சொல்லப்படுகிறது.
ராவணனின் மாளிகையில் சீதையைத் தேடும்கால் பூனை வடிவினில் தனது உருவினை மாற்றிக் கொள்கிறார்.
பின்னர், சீதையைக் கண்ட பின், ஒரு பெரிய மலை போல் தன் உருவினை மாற்றித் தனது திறனை சீதைக்கு காட்டுகிறார்.
இது போன்று உருவினை மாற்றிக் கொள்ளும் சித்திகளை அனுமன் தனது இளமைப் பிராயத்தில் சூரியக் கடவுளிடம் இருந்து பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
5 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம்
நாமக்கல் அரங்கநாதர் (பெருமாள்) திருவடியும், நாமக்கல் ஆஞ்சநேயர் சிரசும் ஒரே நேர்கோட்டில் உள்ளது.
அமாவாசை நாட்களில் பக்தர்கள் கொண்டு வரும் பால் மற்றும் தயிரை கொண்டு ஆஞ்சநேயருக்கு அபிசேகம் செய்யப்படும்.
கிட்டத்தட்ட 5 ஆயிரம் லிட்டர் பால் வரை அபிஷேகம் செய்யப்படும்.
ஆஞ்சநேயருக்கு பிரசாதமாக புளி சாதம், தயிர்ச சாதம், சர்க்கரை பொங்கல் ஆகியவை படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வினியோகிக்கப்டும்.
- பீமனாலேயே அக்குரங்கின் வாலினை அப்புறப்படுத்த இயலவில்லை.
- தேரில் பறக்கவிடப்பட்டிருந்த கொடியில் அனுமனின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.
ராமயணத்தைப் போல மகாபாரதத்தில் அனுமன் முக்கிய கதைப்பாத்திரம் இல்லை.
ஆனால் பாண்டவர்களில் ஒருவனான பீமனுக்கு ஒரு வகையில் அண்ணன் உறவு வருகிறது.
பாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கும்போது, காட்டு வழியே பீமன் பயணிக்கும்போது, அங்கே வயோதிக குரங்கு ஒன்று படுத்துக்கொண்டிருக்க,
அதன் வாலோ நீண்டு பீமன் நடந்து செல்லும் பாதையை அடைத்துக் கொண்டிருந்தது.
பீமன் அதன் வாலை தள்ளி வைத்து விட்டு செல்லலாம் என எண்ணி, வாலைத் தூக்க யத்தனித்தான்.
ஆனால் சிறந்த பலசாலி எனப்பெயர் பெற்ற பீமனாலேயே அக்குரங்கின் வாலினை அப்புறப்படுத்த இயலவில்லை.
பின்னர் பீமன், அது சாதரணக் குரங்கில்லை என உணர்ந்து, அக்குரங்கிடம் மிகுந்த மரியாதையுடன் யாரென வினவிட, அனுமன் தான் யாரென்பதை பீமன் அறியச் செய்கிறார்.
குருசேத்திரப் போரில், அர்ஜூனனின் தேரில் பறக்கவிடப்பட்டிருந்த கொடியில் அனுமனின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.
இது மானசீகமாக தேரின் பலத்தினைக் கூட்டியதாகச் சொல்வார்கள்.
கண்ணன் போர்க்களத்தில் பகவத் கீதையினை அர்ஜூனனுக்கு உபதேசித்தபோது, அனுமனும் கொடி வழியாக கேட்டதாகச் சொல்லப்படுகிறது.
போர் நிறைவடைந்தபின், அர்ஜூனனும், கண்ணனும் தேரில் இருந்து கீழே இறங்கியபின், கண்ணன் அனுமனிடம் இதுவரை தேரின் கொடியாக இருந்தமைக்கு நன்றி சொல்லிட,
உடனே அனுமன் தன் உருவினைக் காட்டி, கண்ணனை வணங்கி விட்டு, கொடியில் இருந்து மறைந்து விடுகிறார்.
அனுமன் மறைந்தவுடனேயே, தேர் எரிந்து சாம்பலாகி விடுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற அர்ஜூனனைப் பார்த்து கண்ணன்,
"அர்ஜூனா, இதுவரை போரினில், இத்தேரின் மேல் வீசப்பட்ட அனைத்து கொடிய பாணங்களையும் தாங்கி நின்றது என்றால், அதற்கு நானும் அனுமனும் இத்தேரினில் இருந்ததுவே காரணம்.
இல்லாவிட்டால், இத்தேர் எப்போதோ அப்பாணங்களின் சக்தியினால் எரிந்து போயிருக்கும்" என்றார்.
- சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் உயரமான ஆஞ்சநேயர் சிலை உள்ளது.
- பீகார் மாநிலம் பாட்னாவிலும், குஜராத் மாநிலம் சாரன்பூரிலும் ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளது.
பஞ்சமுக ஆஞ்சநேயர்
சேலம் உடையாப்பட்டியில் உள்ள கந்தாஸ்ரமத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் உள்ளார்.
சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் உயரமான ஆஞ்சநேயர் சிலை உள்ளது.
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் சனியை பார்த்தவாறு லிங்கத்தை கையில் வைத்தவாறு ஆஞ்சநேயர் சிலை உள்ளது.
பாதாள ஆஞ்சநேயர்
பீகார் மாநிலம் பாட்னாவிலும், குஜராத் மாநிலம் சாரன்பூரிலும் ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தில் தபதி நதிக்கரையில் பாதாள ஆஞ்சநேயர் உள்ளார். பள்ளத்தில் இறங்கி சென்று தான் ஆஞ்சநேயரை தரிசிக்க முடியும்.
விஜயவாடாவில் நரசிம்மர் மற்றும்ஆஞ்சநேயர்
ஆந்திர மாநிலம் விஜயவாடா பஸ் நிலையத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் மங்களபுரி என்ற ஊர் உள்ளது.
இங்கு மலை மேல் நரசிம்மர் கோவில் உள்ளது. நரசிம்மருக்கு நேர் எதிரே ஆஞ்சநேயர் உள்ளார்.
நரசிம்மருக்கு வாயில் பானகம் ஊற்றினால் அந்த பானகம் கீழே வந்து அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.
தங்க ஆஞ்சநேயர்
பெங்களூர் லட்சுமி லே அவுட் பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில் கோபுரம் தங்கத் தகடுகளால் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆஞ்ச நேயருக்கு கிரேனில் ஏறி தான் பூசாரி அபிஷேகம் செய்வார்.
- உடல் மற்றும் மன வலிமையை பெருக்க நினைப்பவர்கள் ஆஞ்ச நேயரை வழிபடலாம்.
- ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம்.
1) ஆஞ்சநேயர் என்றால் பளிங்கு போல் களங்கமற்ற மனம் உடையவன் என்று பொருள்.
பொன் நிறமுடையவன் என்ற பொருளும் அவருக்கு உண்டு.
அஞ்சனை மைந்தன், குண்டலங்களால் ஒளி விடும் முகத்தை உடையவன், கரங்கூப்பி வணங்கி கொண்டு இருப்பவன் என்ற பொருள்களும் உண்டு.
2) ஆஞ்சநேயரை வழிபட்டால் மக்கள் பேறு, புகழ், கல்வி, செல்வம் போன்றவற்றை பெறலாம்.
3) ஆஞ்சநேயரை மனதில் நினைப்பவர்கள் இந்த பிறவியில் சர்வ காரிய சித்தி பெற்று ஆரோக்கியத்துடன் வாழ்வர்.
மறு பிறவியில் ராமன் அருளால் முக்தியும் அடைவார்கள்.
4) உடல் மற்றும் மன வலிமையை பெருக்க நினைப்பவர்கள் ஆஞ்ச நேயரை வழிபடலாம்.
5) ஆஞ்சநேயரின் வாலுக்கு 48 நாட்கள் சந்தனம், குங்குமம் வைத்து வழிபட்டு வந்தால் நன்மைகள் பல அடையலாம்.
ஆஞ்சநேயர் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாக ஒரு ஐதிகம் உள்ளது.
6) படிப்பில் மந்தமான குழந்தைகளை "ஸ்ரீ ராமஜெயம்" 108 முறை அல்லது 1008 முறை எழுத வைத்து
அதை மாலையாக கோர்த்து ஆஞ்சநேயருக்கு அணிவித்தால் அந்த குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
7) "ராம் ராம்" என்ற ராம நாமத்தை தியாகராஜ சுவாமிகள் 96 கோடி தடவை ஜெபித்து ஸ்ரீராமர் தரிசனம் பெற்றார்.
8) தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டும் ஆஞ்ச நேயர் ஜெயந்தியை மார்கழி மாதம் மூல நட்சத்திரமும், அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் கொண்டாடுகிறார்கள்.
மார்கழியில் மூல நட்சத்திரமும், அமாவாசையும் சேர்ந்து வராவிட்டால் அமாவாசையில் ஆஞ்ச நேயர் ஜெயந்தியை கொண்டாடலாம்.
ஆனால் வட மாநிலங்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி வைகாசி மாதத்தில் வளர்பிறையில் வரும் தசமி திதியன்று கொண்டாடப்படுகிறது.
9) ஆஞ்சநேயருக்கு "நைஷ்டிகப் பிரம்மசாரி" என்ற ஒரு பெயரும் உண்டு. அவர் பிரம்மச்சாரி என்றாலும் பெண்களும் அவரை வழிபடலாம்.
10) ஆஞ்சநேயருக்கு "சிறிய திருவடி" என்ற சிறப்பு பெயர் உண்டு. (பெரிய திருவடி& கருடன்)
11) சித்திரையில் ஸ்ரீராம நவமி தினத்திலும், மாதந்தோறும் வரும் கேட்டை நட்சத்திரத்திலும் ஆஞ்ச நேயரை வழிபடலாம்.
12) ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆஞ்சநேயரை வழிபடலாம்.
13) ராகவேந்திர சாமிகள் பிருந்தாவன பிரவேசம் செய்வதற்கு முன்பு பஞ்சமுகியில் ஆஞ்சநேயரை தியானித்தார் என்று வரலாறு கூறுகிறது.
14) வியாசராஜர் 732 இடங்களில் ஆஞ்சநேயர் சிலையை பிரதிஷ்டை செய்து உள்ளார்.
15) புரந்தர தாசர் ஆஞ்சநேயர் பாடல்களை பாடி உள்ளார்.
துளசி ராமாயணத்தில் ஆஞ்சயநேயரைப் பற்றி பாராயணம் உள்ளது.
16) சுந்தர காண்டத்தில் ஆஞ்ச நேயரின் புகழ் பற்றி குறிப்பிப்பட்டு உள்ளது.
17) ஆஞ்சநேயர் கடலை கடந்தது, இலங்கையில் சீதையை மீட்டது,
போர்க்களத்தில் சுருண்டு விழுந்த லட்சுமணன் உள்ளிட்டவர்களுக்கு மூலிகை உள்ள மலையை தூக்கி வந்து மூலிகையால் அவர்களை குணப்படுத்தியது
என்று அவர் செய்த செயல்கள் அனைத்தும் வெற்றியானது.
அதேபோல ஆஞ்சநேயரை வழிபட்டவர்களுக்கு அனைத்து காரியங்களிலும் ஆஞ்ச நேயர் வெற்றியை கொடுப்பார்.
18) ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம்.
19) ஆஞ்சநேயரின் படத்தையும், ராமர் பட்டாபிஷேக படத்தையும் வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.
20) வீட்டு வாசலில் சிலர் வாஸ்து கணபதி படத்தை வைத்து இருப்பார்கள்.
ஆனால் வீட்டு வாசலில் ஆஞ்சநேயர் படத்தை வைக்கக்கூடாது.
- கண் மூடி தியானித்து “ராம், ராம்” என்று சொன்னாலே போதும்! அனுமானுக்கு இதை விட பிரியமானது எதுவும் இல்லை.
- அசைவ (புலால்) உணவை முழுமையாக ஒதுக்குங்கள்.
எந்த நேரமும் தன்னை மறந்து ஸ்ரீராம தியானத்தில் இருக்கும் அனுமானுக்கு, தன்னைத் துதிப்பதை விட தனது இறைவன் ஸ்ரீராமனைத் துதிப்பதே பிடிக்கும்.
எனவே, அனுமானைப் பூஜித்து எவ்வளவு தடவை முடியுமோ, அவ்வளவு தடவைகள் "ஸ்ரீராம், ஜெயராம், ஜெய ஜெயராம்!" என்ற மந்திரத்தை, குரு உபதேசம் பெற்று ஜெயிப்பது நல்லது.
அனுமானை வழிபடுபவர்கள், பூஜை நேரத்திலும் இதர முக்கிய புண்ணிய தினங்களிலும் கண்டிப்பாக, பிரம்மச்சர்ய விரதம் மற்றும் புலனடக்கம் அனுஷ்டிக்க வேண்டும்.
அசைவ (புலால்) உணவை முழுமையாக ஒதுக்குங்கள்.
இதுவும் கண்டிப்பான நிபந்தனை! வடைமாலை மற்றும் வெற்றிலை மாலையை, காரிய சித்திக்காக அனுமானுக்கு சாற்றலாம்.
தினசரி "ஸ்ரீராமஜெயம்" முடிந்தவரை எழுதலாம்.
அனுமானின் வாலுக்கு, 1 மண்டலம் (48 நாட்கள்) சந்தனக் குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டே வந்து இறுதி நாளில், விசேஷ பூஜை செய்து காரிய சித்தி அடையலாம்.
கண் மூடி தியானித்து "ராம், ராம்" என்று சொன்னாலே போதும்! அனுமானுக்கு இதை விட பிரியமானது எதுவும் இல்லை.
தியாகராஜ சுவாமிகள் 96 கோடிகள் இம்மந்திரத்தை ஜெபித்து, ஸ்ரீராமதரிசனம் பெற்றார்!
- நோய்கள் நீங்க தினமும் "ராம ராம" என்று 108 முறை சொல்லலாம்.
- தினமும் 108 முறை கீழ்கண்ட ஆஞ்சநேயர் ஸ்லோகத்தை சொல்லி ஆஞ்சநேயரை வேண்டி கொள்ளலாம்.
நோய்கள் நீங்க தினமும் "ராம ராம" என்று 108 முறை சொல்லலாம். இப்படி மனதளவில் "ராம ராம" என்று சொல்லி ராமரை வேண்டுவது விஷ்ணு சகஸ்ர நாமத்தை முழுவதும் ஒரு முறை கூறுவதற்கு சமமாகும்.
ஆஞ்சநேயர் மந்திரம்
வெற்றிகளை பெற தினமும் 108 முறை கீழ்கண்ட ஆஞ்சநேயர் ஸ்லோகத்தை சொல்லி ஆஞ்சநேயரை மனதில் வேண்டி கொள்ளலாம்.
மந்திரம் வருமாறு:
ஓம் ஆஞ்சநேய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமந் ப்ரசோதயாத்