என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உரிமைத் தொகை"
- பற்று அட்டைகள் விணியோகம்
- கலெக்டர் வழங்கினார்
குடியாத்தம்:
தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தி ல் முதற்கட்டமாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பயன்பெற்றனர்.
இதில், வேலூர் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 79 ஆயிரத்து 443 பெண் களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
அதே சமயம், இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிலுவையில் வைக்கப்பட்டிருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதில், தேர்வு செய்யப்பட்ட 7.35 லட்சம் புதிய பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை பெறு வதற்கான பற்று அட்டைகள் (டெபிட் கார்டுகள்) வழங்குவதை தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக, மாவட்டங்களில் நடைபெற்ற நிகழ்ச்சி களில் பயனாளி களிடம் பற்று அட்டைகள் வழங்கப் பட்டன.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை பெறு வதற்கான அட்டைகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.
வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக 14 ஆயிரத்து 384 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார், அமலு விஜயன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். மாவட்ட வருவாய் அலு வலர் மாலதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, நகராட்சி மன்றத் தலைவர்கள் சவுந்தர ராஜன் (குடியாத்தம்), பிரேமா (பேரணாம்பட்டு), ஒன்றிய குழு தலைவர்கள் சத்யானந்தன், பாஸ்கரன், சித்ரா ஜனார்த் தனன், மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- இதனைத் தொடர்ந்து விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார்.
- சப்-கலெக்டர், கோட்டாட்சியர் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்:
தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரம் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவினை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், விழுப்புரம் சேர்மன் தமிழ்செல்வி பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் பொன்முடி 22 ஆயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகைக்கான பற்று அட்டையை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், சப்-கலெக்டர், கோட்டாட்சியர் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உரிமைத்தொகை ரூ.1,000 பெற்றதால் மகளிர்கள் தமிழக முதல்-அமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
- 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசிற்கு வரப்பெற்றதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது.
ராமநாதபுரம்
தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் முன்னேற்றத் திற்காக பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து அதன் மூலம் பெண்கள் முன்னேற்றம் காணும் வகை யில் திட்டங்களை செயல்ப டுத்தி வருகிறார்.
அந்த வரிசையில் குடும் பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை யாக வழங்கப்படும் என அறிவித்து இருந்தார். மேலும் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த திட்டம் கலை ஞரின் நூற்றாண்டான இந்த ஆண்டில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி வைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதில் இணைத்துக் கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசிற்கு வரப்பெற்றதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளான 15.09.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்ததைத்தொ டர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத்தொழில்கள் வாரி யத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் குடும்பத்தலை விகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பற்று அட்டைகளை வழங்கினார்.
கலைஞர் மகளிர் உரி மைத்திட்டத்தில் பயன் பெற்ற பயனாளி கூறியதா வது:-
எனது பெயர் நாகவள்ளி (வயது 58). நான் கூலி வேலை செய்து வருகின் றேன். தினசரி கூலி வேலை செய்தால்தான் எனக்கு அன்றாட தேவைகளை பார்த்துக்கொள்ள முடியும். வயதான காலத்தில் எனது நிலைமையை கண்டு அக் கம்பக்கத்தினர் உதவி புரி வார்கள். அவர்களிடம் அடிக்கடி தொந்தரவு செய்ய முடியாது. எனக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இந்நி லையில் தான் முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரி மைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப் படும் என அறிவித்திருந்தார்.
இந்த திட்டத்தில் நான் பயன்பெறமுடியுமா என சந்தேகத்தில் இருந்து வந் தேன். அந்த நிலையில் என்னுடைய விண்ணப்பத் தினை அருகில் நடைபெற்ற முகாமில் அளித்தேன். எனது விண்ண ப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு எனக்கு ரூ.1000 என்னு டைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட் டதை கண்டு எண்ணிலடங்கா மகிழ்ச்சி அடைந்தேன். என்னைப் போன்ற மகளிர் நிலையை கருத்தில் கொண்டு திட்டங்களை தீட்டி செயல்ப டுத்திவரும் தமிழ்நாடு முத லமைச்சருக்கு என் சார்பாகவும், என் னைப்போன்ற மகளிர்கள் சார்பாகவும் என் நெஞ் சார்ந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன் என்றார்.
மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நா.விஜயகுமார் ஆகியோர் தொகுத்து அளித்துள்ளனர்.
- பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகையை தி.மு.க. அரசு வழங்குகிறது.
- வருகிற நாடாளு மன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளை அ.தி.மு.க.வுக்கு வழங்கி வெற்றிபெறசெய்ய வேண்டும்.
மதுரை
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மாநகர் அ.தி.மு.க. சார்பில் டி.எம்.கோர்ட் பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
இந்த நாட்டின் பொதுக்களத்தில் நிற்கும் உரிமை மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்கள் அண்ணா, பெரியார். பெண்கள் பொது வாழ்க்கையில் வரவும் வித்திட்டவர்கள் இவர்கள்தான். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மாற்றத்தை உருவாக்கியவர் அண்ணா. தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று பெயர் பெற்றவர். தி.மு.க. அண்ணாவால் உருவாக்கப்பட்டது. ஐம்பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்டது தி.மு.க.
அண்ணா இருக்கும் வரை கலைஞரை முன்னி லைப்படுத்தவில்லை. தாய் எப்படி அனைத்து பிள்ளை களையும் ஒரே மாதிரி வளர்ப்பாரோ அதுபோல் தான் அண்ணா அனை வரையும் ஒன்றாக நினைத்தார். பல தலைவர்களை உருவாக்கிய பெருமை அண்ணாவிற்கு உண்டு.
தற்போது அரசியல் தலைவர்கள் நட்சத்திர விடுதிகளில் தங்கி பிரசாரம் செய்கிறார்கள், சுற்றுப் பயணம் செய்கிறார்கள். ஆனால் பட்டினி கிடந்து தொண்டர் வீட்டில் தங்கி கட்சியை வளர்த்தவர் அண்ணா. தி.மு.க.வை வளர்த்தவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து பிரிந்து வந்த பிறகு அ.தி.மு.க.வை உருவாக்கினார். இருப்பினும் அண்ணாவை நினைவு கூறும் வகையில் அ.தி.மு.க.வின் கொடியில் அண்ணா உருவ படத்தை பொறித்தார். இறந்தும் இறைவனாக எம்.ஜி.ஆர். இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
அண்ணா, எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா யாரும் வாரிசு அரசியல் செய்யவில்லை. தன்னுடைய வாரிசுகளை கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. காலத்தில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள் தற்போது தி.மு.க. ஆட்சியில் மூடு விழா கண்டுள்ளது.
மதுரையில் 2 அமைச்சர்கள் இருக்கி றார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
தமிழகத்தில் அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரம் ரூபாய் கொடுத்து இருக்கலாம். 2 ஆண்டுகளுக்கு பிறகு கொடுத்து இருக்கிறார்கள். இன்னும் 6 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. அதற்காகத்தான் கொடுக்கிறார்கள்.
வாக்குறுதிகள் 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். பாராளுமன்ற தேர்தலுக்காகவே பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமையை தொகையை தி.மு.க. அரசு வழங்குகிறது. பொம்மை முதலமைச்சராகவே அவர் இருக்கிறார். பிறர் எழுதிக் கொடுப்பதை பேசுகிறார்.
தி.முக. ஆட்சியை விரைவில் பொதுமக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். வருகிற நாடாளு மன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை யான வாக்குகளை அ.தி.மு.க.வுக்கு வழங்கி வெற்றிபெறசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நேற்று முதல் ரூ.1000 வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
- குறுஞ்செய்தியினைத் தொடர்ந்து ஓ.டி.பி. எண் கேட்பதாக புகார்கள் வரப்பெற்றுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது;- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று முதல் ரூ.1000 வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. உரிமைத் தொகையினை வங்கியிலிருந்து எடுப்பதற்கு உரிமைத் தொகை ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் ஒரு சில மகளிருக்கு வரப்பெற்ற குறுஞ்செய்தியினைத் தொடர்ந்து ஓ.டி.பி. எண் கேட்பதாக புகார்கள் வரப்பெற்றுள்ளது. இத்திட்டத்தில் பயனடைவதற்கு ஓ.டி.பி. எண் ஏதும் நடைமுறையில் இல்லை.
இத்திட்டத்தின் கீழ் ஏ.டி.எம். கார்டு மூலமாகவோ அல்லது வங்கியில் நேரடியாக சென்று தொகை யினை எடுத்துக்கொள்ள லாம். மேலும் ஓ.டி.பி. எண் பகிர எவரேனும் தொலை பேசியில் கேட்கப்பட்டால் அவரது கைபேசி எண்ணை மாவட்ட கலெக்டர்அலு வலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04146-223265 மற்றும் போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 04146-222172 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரி வித்து க்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அமைச்சர் துரைமுருகன் நாளை தொடங்கி வைக்கிறார்
- நிகழ்ச்சியில் கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கே.வி.குப்பம் பஸ் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்க உள்ளார்.
உரிமைத் தொகை
பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செம்மையாக நடைமுறைபடுத்தும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு பணிகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப மானது வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் குடும்ப அட்டை வாரியாக அந்தந்த பகுதியில் உள்ள ரேசன் கடை விற்பனை யாளர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டன. விண்ணப்ப ங்கள் பதிவுசெய்யும் முகாம்கள் நடத்தப்பட்டு விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு நாளை முதல் உரிமைத் தொகை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தினை முதல் - அமைச்சர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.
2 ஆயிரம் பேர்
இதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நாளை காலை 10 மணிக்கு கே.வி.குப்பம் பஸ் நிலையத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்து சுமார் 2000 பயனாளிகளுக்கு உரிமைத் தொகையினை வழங்குகிறார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்