search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை ஏர்போர்ட்"

    • சென்னை விமான நிலையம் வந்த நடிகர் விஜய் அங்கிருந்து விமானம் மூலம் துபாய் புறப்பட்டார்.
    • சென்னை விமான நிலையத்தில் தன்னை காண காத்திருந்த குட்டி குழந்தை ஒன்றை பார்த்து விஜய் கையசைத்தார்.

    'ஏஜிஎஸ்' பட நிறுவன தயாரிப்பில் GOAT என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இது விஜய் க்கு 68- வது படமாகும். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

    இந்த படத்தில் பிரசாந்த்,பிரபுதேவா, மோகன், மீனாட்சி சௌத்ரி,சினேகா, லைலா, ஜெயராம்,யோகிபாபு, ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    GOAT படத்தில் நடிகர் விஜய் கதாநாயகன், வில்லன் உள்ளிட்ட இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும் பிரபல நடிகை திரிஷா சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இந்தபடத்தின் 'ஷூட்டிங்' பல கட்டமாக நடந்தது.

    இறுதிகட்ட ஷூட்டிங் ரஷிய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் படமாக்கப்பட இருந்தது. இதற்கான 'ஷூட்டிங்' லொகேஷன் தேர்வு செய்ய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சென்னையில் இருந்து மாஸ்கோவுக்கு கடந்த மாதம் சென்றார். அங்கு சினிமா சூட்டிங் தொடர்பான 'லொகேஷன்' இடங்களை பார்வையிட்டார்.




    மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன் கேரளாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் விஜய் பங்கேற்று நடித்தார். அப்போது விஜய்க்கு கேரள ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில் 'கோட் 'படம் குறித்த முக்கிய 'அப்டேட்' இன்று வெளியானது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில் 'கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக விஜய் தற்போது துபாய் சென்றுள்ளார். இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த நடிகர் விஜய் அங்கிருந்து விமானம் மூலம் துபாய் புறப்பட்டார்.

    முன்னதாக சென்னை விமான நிலையத்தில் தன்னை காண காத்திருந்த குட்டி குழந்தை ஒன்றை பார்த்து விஜய் கையசைத்தார். அந்த குழந்தையுடன் விஜய் கொஞ்சி விளையாடினார்.இந்த வீடியோ இணைய தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விமானத்தில் பயணித்த 156 பேரில், 149 பேர் கடத்தல் காரர்கள் என்ற எதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
    • சிக்கிய கடத்தல் கும்பல் அனைவரும் சென்னையை சேர்ந்தவர்கள்.

    சென்னை விமான நிலையத்திற்கு விமானம் மூலம் கடத்தல் காரர்கள் வந்துள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது.

    இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை ஓமனில் இருந்து வந்த விமானத்தை சோதனை செய்தனர். மேலும், பயணிகள் ஒவ்வொருவரையும் சோதனை செய்தனர்.

    அப்போது, விமானத்தில் பயணித்த 156 பேரில், 149 பேர் கடத்தல் காரர்கள் என்ற எதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

    மொத்தம் 156 பேரில் 7 பேர் மட்டுமே ஒரே குடும்பத்தை சேர்ந்த பயணிகள். மற்ற அனைவரும் கடத்தல் கும்பல் என தெரியவந்துள்ளது.

    சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 149 பேரிடம் இருந்து ரூ.14 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக, ஒரு விமானத்தையே கடத்தல் கும்பல் புக் செய்துள்ளது.

    மேலும், சோதனையில் 13 கிலோ தங்கம், 2500க்கும் மேற்பட்ட செல்போன்கள், குங்குமப்பூ உள்ளிட்டவற்றை கும்பல் கடத்தி வந்துள்ளன. சிக்கிய கடத்தல் கும்பல் அனைவரும் சென்னையை சேர்ந்தவர்கள். கடத்தலின் பின்னணி குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×