என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மோதகம்"
- இவருக்கு முற்காலத்தில் தேசி விநாயகர் என்றே பெயரே வழங்கி வந்திருக்கிறது.
- தினமும் இவருக்கு 108 மோதகங்கள் படைக்கின்றனர்.
வேறு எந்த தலத்திற்கும் இல்லாத பல சிறப்புகளைக் கொண்டவராக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வீற்றிருக்கிறார்.
மற்ற விநாயகரின் உருவத்தில் இருந்து பிள்ளையார்பட்டி விநாயகர் முற்றிலும் மாறுபட்டவர்.
குடை வரைக் கோவிலாக உள்ள இக்கோவிலில் புடைப்பு சிற்பமாக விநாயகர் வடிவம் அமைந்துள்ளது.
இரு கைகளுடன், பாச அங்குசம் போன்ற படைக்கலன்களின்றி காணப்படுகிறார்.
கால்களை மடக்கிய நிலையில் அமர்ந்த கோலத்தில், கையில் சிவலிங்கத்தை தாங்கிக் கொண்டு வீற்றிருக்கிறார்.
உலக நன்மைக்காக சிவதியானத்தில் ஆழ்ந்திருக்கிறார்.
கிரீடம் இல்லாமல் சடை முடி தாங்கி எளிமையானவராக உள்ளார்.
இவருக்கு முற்காலத்தில் தேசி விநாயகர் என்றே பெயரே வழங்கி வந்திருக்கிறது.
தினமும் இவருக்கு 108 மோதகங்கள் படைக்கின்றனர்.
விநாயகர் சதுர்த்தியன்று முக்குருணி அளவில் (சுமார் 24 கிலோ அரிசியால் செய்த கொழுக்கட்டை) ஒரே மோதகத்தைப் படைக்கின்றனர்.
- ஒவ்வொரு தமிழ் மாதப் பவுர்ணமியும், பெரும்பாலும் ஒரு நட்சத்திரத்தை ஒட்டி வரும்.
- ஆருத்ரம் என்பது அக்னி பூர்வமான ருத்ர சக்திகளை ஜீவன்கள் தரிசிக்கும் நிலையாகும்.
ஒவ்வொரு தமிழ் மாதப் பவுர்ணமியும், பெரும்பாலும் ஒரு நட்சத்திரத்தை ஒட்டி வரும்.
மார்கழி மாதத்தின் பவுர்ணமி திருவாதிரையை ஒட்டி வருவதால், ஆருத்ரா அபிஷேக நாளாக முதல் நாளும், ஆருத்ரா தரிசனமாக மறுநாளும் அமையும்.
ஆருத்ரம் என்பது அக்னி பூர்வமான ருத்ர சக்திகளை ஜீவன்கள் தரிசிக்கும் நிலையாகும்.
மேலும், ஆருத்ரத்தில்தான் வேத பீஜ கோஷ சக்திகள் ஜீவன்களை வந்தடையும் வண்ணம் நன்கு பரிமளிக்கின்றன.
திருவாதிரை தினத்தன்று வலது உள்ளங்கையை தலைச் சுழியின் மேல் வைத்து அதில் ஒருவிதமான ஆகர்ஷண ஓட்டமும், மிதமான உஷ்ணமும் தோன்றுவதை நன்கு உணரலாம்.
கபாலீஸ்வரர், குடுமீஸ்வரர் (குடுமியான்மலை), அபிமுகேஸ்வரர் (கும்பகோணம்), கூந்தலூரில் ஸ்ரீரோம மகரிஷி போன்ற கபால சக்தி நிறைந்த ஆலயங்களில் திருவாதிரை நட்சத்திர தினங்களில் வழிபடுதல் கபால நாளங்களை நன்கு ஆக்கப்படுத்தும்.
மேலும், எந்த ஆலயத்தில் சுவாமிக்கோ மூல லிங்கத்திற்கோ குவளை, கிரீடம், தலைப் பாகை சார்த்தப்படுகின்றதோ, இத்தகைய ஆலயங்களில் கபாலக் கனி என்று அழைக்கப்படும் தேங்காய்கள், பன்னிரெண்டால் ஆன மாலைகள் சார்த்தி வழிபடுதல் விசேஷமானது.
ஆருத்ரா அபிஷேக தினத்திற்கு அடுத்த நாள் வரும் ஆருத்ரா தரிசனத் திருநாளன்று திரு ஆதிரைக் களி என்பதாக, ஏழு அல்லது ஏழுக்குமேலான காய்கறிகள் கலந்த கூட்டுடன் இறைவனுக்குப் படைத்தளிக்க வேண்டிய முக்கியமான திருநாள்.
மோதகத்தின் ஒரு வகையான திருவாதிரைக் களி மிகவும் சுவையுடையது. மோதகக் குடும்பத்தைச் சார்ந்த இனிப்பு வகை ஆதலால், பிள்ளையாரின் ஆசீர்வாதமும் சேர்ந்து வருவதாகும்.
ஆருத்ரா தரிசனத்தின் போது கபாலத்தில் தலைச் சுழியில் அபூர்வமான ஆகர்ஷண சக்திகள் எழுகின்றன.
இவற்றை விரயம் செய்து விடாமல் உடல் நாளங்களில் ஈர்த்துக் கொள்ளவே ஆலய வழிபாட்டிற்குப் பிறகு, இல்லத்திலும் பூஜையைத் தொடர்வதாகும்.
உள்ளத்தில் ஆத்ம லிங்கம் ஒளிர்வதால், தினசரி தலைக்கு நீராடுவதையும் கூட ஆத்ம லிங்க அபிஷேகமாக, உத்தமத் தெய்வீக நிலைகளில் போற்றப்படுகின்றது.
- விநாயகப் பெருமானுடைய சிறப்பினை உணர்த்த விநாயகர் புராணம் உள்ளது.
- முதலில் விநாயகர் வணக்கம் செய்யப்படுவது முக்கியமாகும்.
எந்த ஒரு வேலையைச் செய்யத் தொடங்கும் பொழுதும் முதலில் விநாயகர் வணக்கம் செய்யப்படுவது முக்கியமாகும். கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது, யோக சாஸ்திரங்களின்படி, நம் தலையின் இரு பக்கமிருக்கும் அமிர்தமானது சுண்டிவிடப்பட்டு, சுரந்து சுழுமுனாநாடி வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிஷேகமாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்கு மென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது.
விநாயகப்பெருமானுடைய சிறப்பினை உணர்த்த, விநாயகர் புராணம் உள்ளது. சிவபெருமான் வாயிலாக தாம் உணர்ந்த விநாயக புராணத்தை பிரம்மன் வியாசருக்கு உபதேசிக்க, அவர் பிருகு முனிவருக்கு உபதேசிக்க அவர் இப்புராணத்தை 250 பிரிவுகளையுடைய உபாசனா காண்டம், லீலா காண்டம் என இரு காண்டங்களாக அமைத்துப் பன்னிரெண்டாயிரம் சுலோகங்களாக "ஸ்ரீ விநாயகர் புராணம்" பாடினார்.
விநாயகர் புராணத்தில் இரண்டாம் காண்டமாகிய லீலா காண்டத்தில் விநாயகப்பெருமான் எடுத்த பன்னிரண்டு அவதாரங்களும் கூறப்பட்டுள்ளன. அந்த அவதாரங்களில் அவர், வக்கிரதுண்டர், சிந்தாமணி விநாயகர், கஜநாதர், விக்கினராஜர், மயூரேசர், பாலசந்திரர், தூமகேது, கணேசர், கணபதி, மகோத்சுதர், முண்டி விநாயகர் மற்றும் வல்லபை கணேசர் என்ற பெயர்களோடு விளங்கியதாக அப்புராணம் கூறுகிறது.
பார்வதி தேவி மண்ணால் ஒரு உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்து ஸ்ரீ விநாயகராக அவதாரம் செய்வித்தது ஆவணி மாதத்து சதுர்த்தி தினத்தில் தான். அந்த நாளையே ஸ்ரீ விநாயகர் ஜெயந்தியாக, விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடுகின்றோம்.
மண்ணில் அமைந்த விநாயகருக்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து, விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி முதலான அனைத்தும் அமைத்து வழிபாடு செய்தல் வேண்டும்.
விநாயக சதுர்த்தி வழிபாட்டினால் 1. தர்மம், 2. பொருள், 3. இன்பம், 4. சௌபாக்கியம், 5. கல்வி, 6. பெருந்தன்மை, 7. நல்வாழ்வுடன் கூடிய மோட்சம்,8. முக லக்ஷணம், 9. வீரம், 10. வெற்றி, 11. .எல்லோரிடமும் அன்பு பெறுதல், 12. நல்ல சந்ததி, 13. நல்ல குடும்பம், 14. நுண்ணறிவு, 15. நற்புகழ், 16. சோகம் இல்லாமை, 17. அசுபங்கள் அகலும், 18. வாக்கு சித்தி, 19. சாந்தம், 20. பில்லி சூனியம் நீங்குதல், 21. அடக்கம் ஆகிய 21 விதமான பேறுகள் கிடைக்கும்.
- பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது.
- விநாயகரை வழிபட்டு வர துன்பங்கள் விலகும்.
பிடித்து வைத்தால் பிள்ளையார்
பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களை செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால் மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணைய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம் (நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும். இதனைத் தான் "பிடித்து வைத்தால் பிள்ளையார்" என்று வேடிக்கைப் பழமொழியாக சொல்கிறார்கள்.
மோதக தத்துவம்
அரிசி மாவுக்குள் பூரணம் வைத்து கொழுக்கட்டை தயாரித்து விநாயகருக்குப் படைக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. அரிசி மாவு சுவையற்றதாக உள்ளது. ஆனால் அதனுள் இருக்கும் பூரணம் சுவையானது. சுவையில்லாத அரிசி மாவு சுவையுள்ள வெல்லத்துடன் சேரும்போது எவ்வாறு விருப்பமுடன் உண்ணும் திண்பண்டமாக மாறுகிறதோ அதுபோல பக்தி கலந்த வாழ்க்கையே சுவையுள்ளதாக இருக்கும் என்று உணர்த்துகிறது இந்த மோதக தத்துவம்.
உருவ தத்துவம்
யானைத்தலையும், பெருவயிறும் மனித, உடலும் ஐந்து கைகளும் கூடிய ஒரு விந்தையான வடிவே பிள்ளையார் வடிவம். அவருக்கு இடையின் கீழ் மனித உடம்பு, இடைக்கு மேலே கழுத்து வரை தேவ உடம்பு, அதற்கு மேலோ விலங்கின் தலை. ஒரு கொம்பு ஆண்தன்மையையும், மற்றொரு கொம்புபெண் தன்மையையும் குறிக்கும். யானைத்தலை அஃறிணை, தெய்வ உடம்பு உயர்திணை. இவற்றை உற்று நோக்கி ஆராய்ந்தால் பிள்ளையார் தேவராய், மனிதராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அஃறிணையாய் விளங்குகிறார் என்ற உண்மை புலப்படும். உலகங்களைத் தன்னுள் அடக்கி இருக்கிறார் என்பதை குறித்திடவே பெருவயிறு அமைந்துள்ளது. துதிக்கை வலது புறம் திரும்பி இருப்பது(வலம்புரி) யோகத்தை குறிக்கிறது.
கடன்கள் தீர்க்கும் ஸ்ரீ ருண மோசன கணபதி
ருணம் என்றால் கடன் என்றுபொருள், மோசனம் என்றால் விடுபடச்செய்தல் என்று பொருளாகும். நம்மை கடன் தொல்லைகளில் இருந்து மீளச்செய்பவரே 'ருணமோசன கணபதி' கோவில்களுக்கு சென்று இம்மூன்று கடன்களையும் தீர்க்க முடியாதவர்கள் ருணமோசன கணபதியை வழிபாடு செய்து கடன்களை தீர்க்கலாம். அவருக்கான ருணஹரகணேச ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்வது கடன்களை தீர்க்க உதவும்.
நீரில் ஏன் கரைக்கிறார்கள்?
ஒரு சமயம் பார்வதிதேவி கங்கையில் நீராடியபோது தன் அழுக்கை திரட்டி பொம்மையாக்க, அது யானைத்தலையும் மனித உருக்கொண்டும் அமைந்தது. அதை அன்னை கங்கையில் எறிய பெரிய உருவத்துடன் விநாயகர் வெளிப்பட்டார் அப்போது பார்வதிதேவியும் கங்கையும் அவரை பிள்ளையாக ஏந்திக்கொண்டனர். இக்காரணத்தால் பார்வதி, கங்கை இருவருமே அவருக்கு அன்னை ஆனார்கள். இதனாலேயே சதுர்த்தி முடிந்த தும் பிளளையாரைக் கங்கையில் கரைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
தோப்புக்கரணம் போடும் முறை
விநாயகர் முன் நின்றவுடன் தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடுவது நம் மரபு. ஏன் இப்படித் தோப்புக்கரணம் போடவேண்டும் என்பதற்க்கு புராணக்கதை ஒன்று உள்ளது. ஒருமுறை தவமுனிவரான அகத்தியர் கமண்டலமும் மையுமாக வந்துக் கொண்டிருந்தார். அப்போது காக உருவெடுத்து வந்த விநாயகர் அக்கமண்டல நீரை தட்டிவிட்டு ஓடி விட்டார். காகம் கவிழ்த்த கமண்டல நீர் ஆறாக ஒடியது. காகம் தட்டியதால் விரிந்து பரந்த நீராக ஒடியது என்பதால் "காவிரி" என்று பெயர் அந்நதிக்கு உண்டானது. அகத்தியர் தட்டிவிட்ட காகத்தை திரும்பி பார்த்தார். அதைக் காணவில்லை. காகம் நின்ற இடத்தில் கொழுகொழு என்று ஒரு சிறுவன் நின்றிருந்தான். அவர் தான் கணபதி. செய்த செயலுக்காக முனிவரைப் பார்த்து சிரித்தான்.
கோபமடைந்த அகத்தியர் அச்சிறுவன் தான் கமண்டல நீரைக் கவிழ்த்தவன் என்ற எண்ணத்தில் அவனது தலையில் குட்ட முயன்றார். ஆனால் சிறுவன் விநாயகப் பெருமானாக அகத்தியர் முன் நின்றார். குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர் அப்படியே தன் தலையில் குட்டிக் கொண்டு, மன்னிக்குமாறு வேண்டினார். அது முதல் விநாயகருக்கு தோப்புகரணம் இடும் முறை உண்டானது.
5 தடவை குட்டுங்கள்
எந்த ஒரு விஷயத்துக்கும் ஆரம்பத்தில் `சுக்லாம்பரதம்' சொல்வோம். இதற்கு விநாயகர் அவர் எல்லாமுமாக இருக்கிறார் என்பது பொருள். அந்த சுலோகத்தை சொல்லி பாருங்கள் தெரியும். இந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். தலையில் குட்டிக் கொள்வதால் மருத்துவ நலன்கனைப் பெறலாம். மனித உடலில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞேயம் மற்றும் சகஸ்ரம் என ஏழு சக்கரங்கள் உள்ளன. அவற்றில் சுவாச நடப்பு நடக்கிறது. மேலும் சிரசில் இருக்கும் சஹஸ்ரார கமலத்தில் உள்ள ஆனந்த அமுதம் நாடி நரம்புகளின் வழியே சுவாசத்தோடு பாய்வதற்சாகவே சிரசில் குட்டிக் கொள்கிறோம்.
கேது திசை நாயகன்
ஜாதக ரீதியாக கேது புத்தி, கேது திசை ஆகியவை நடைபெறும் ஜாதகர்கள் விநாயகரை வழிபட்டு வர துன்பங்கள் விலகும். இன்பம் பெருகும். திங்கட்கிழமை தோறும் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் நன்மை பெருகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்