search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மிக தகவல்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பஞ்சமுக ஹனுமானை வழிடுதல் நல்ல பலனை கொடுக்கும்.
    • ஒரு சிட்டிகை மஞ்சளை தண்ணீரில் கலந்து குளிக்கவும்.

    வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து விஷயங்களிலும் தோல்வியே ஏற்படுகிறது என வருந்துகிறீர்களா அல்லது துரதிருஷ்டம் உங்களை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள சில எளிய பரிகாரங்களை பின்பற்றலாம் குளிக்கும் போது செய்ய வேண்டியவை.

    அதிர்ஷ்டம் உங்களை நீங்காமல் இருக்க, தினமும் காலையில் ஒரு சிட்டிகை மஞ்சளை தண்ணீரில் கலந்து குளிக்க வேண்டும். இதன் மூலம், விஷ்ணு பகவான் மற்றும் பிரஹஸ்பதி தேவைனின் அருள் நீங்காமல் இருக்கும். இதன் காரணமாக உங்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். மாலையில் குளிக்கும் போது, தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். இது அனைத்து எதிர்மறைகளையும் நீக்குகிறது.

     அனுமனை வணங்குதல்

    உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து நிதி அல்லது பிற பிரச்சினைகள் இருந்தால், பஞ்சமுக அனுமானை வழிடுதல் நல்ல பலனை கொடுக்கும். முடிந்தால், தினமும் அல்லது ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் அனுமான் கோவிலுக்குச் சென்று பஞ்சமுக அனுமானின் முன் தீபம் ஏற்றி அனுமன் சாலிசாவை படித்தால், அனுமனின் அருளால் பணம், வேலை, எதிரிகள் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுதலை பெறலாம்.

     துளசிக்கு முன் தீபம் ஏற்றவும்

    தினமும் துளசிக்கு அருகில் தீபம் ஏற்றி வழிபட்டால், அவர் தனது வாழ்வில் இருந்து அனைத்து வகையான எதிர்மறை சக்திகளில் இருந்தும் காப்பாற்றப்படுவார் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் கூட, அதன் பலன்களை உணர்ந்து, இது மிகவும் மங்களகரமான செயல் எனக் கருதுகின்றனர்.

     சங்கு வழிபாடும் பலன் தரும்

    உங்கள் வீட்டின் சில பகுதியில் வாஸ்து குறைபாடுகள் இருப்பதாக உணர்ந்தாலோ அல்லது கண்டாலோ, குறைபாடு அந்த இடத்தில் காலையிலும் மாலையிலும் சங்கு ஊத வேண்டும். வீட்டில் சங்கு இல்லாவிட்டால், அதற்குப் பதிலாக வணங்கிய பின் மணியையும் அடிக்கலாம். வளிமண்டலத்தின் எதிர்மறை ஆற்றல் மணி வெளியிடும் ஒலியால் அழிக்கப்படுகிறது.

    நின்று போன கடிகாரம் வீட்டில் இருக்க கூடாது

    வாஸ்து சாஸ்திரத்தில் இயங்காமல் நின்று போன கடிகாரம் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்  என்று கருதப்படுகிறது. நின்று போன கடிகாரம் உங்கள் அதிர்ஷ்டத்தை நிறுத்துகிறது என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. உங்கள் வீட்டில் நின்று போன கடிகாரம் இருந்தால், அதை உடனடியாக சரிசெய்ய முயற்சிக்கவும் அல்லது வீட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். இது தவிர, காலணிகள்-செருப்புகள் அல்லது ஆடம்பரமான பொருட்களை படுக்கைக்கு அடியில் வைக்கக்கூடாது, ஏனெனில் அது லட்சுமி தேவி வரும் பாதையை தடுக்கிறது என்று நம்பப்படுகிறது.

    • சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது.
    • பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.

    1. மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ள படம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்..

    2. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.

    3. திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.

    4. அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.

    5. கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்து கை, கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.

    6. எலுமிச்சம் பழ தீபம் விளக்கை கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.

    7. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.

    8. சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது.

    9. இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.

    10. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.

    11. திருப்பதி, திருத்தணி, பழனி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.

    12. ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.

    13. கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது.

    14. குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது.

    15. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது.

    16. பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.

    17. செவ்வாய் கிழமை, புதன் கிழமை பகல், வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.

    18. இறந்த முன்னோர்களின் படங்களை (அவர்கள் தெய்வமாகி விட்டிருந்தாலும்) சாமி படங்களுடன் வைத்து வணங்குதல்கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம.

    19. வாழைப்பழம் சாப்பிட்டபின் மோர் சாப்பிடக் கூடாது.

    20. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.

    21. புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.

    22. கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது. சில தகவல் நூல்களிலும் சில தகவல் நன்றாக வாழ்ந்தும், வாழும் தம்பதியர்கள் அனுபவம் அடைந்து சொன்னது.

    23. இறந்தவர்களின் ஆத்மாக்கள் வண்ணத்துப் பூச்சியினுள் புகுந்து இறப்பு ஏற்பட்ட நாளிலிருந்து கொஞ்ச காலம் வரை நம் வீட்டைச் சுற்றி வரும். ஆகவே, மரணம் ஏற்பட்ட ஒரு வீட்டிற்குள் வண்ணத்துப்பூச்சி அடிக்கடி பறந்து வந்து கொண்டிருந்தால் அந்த வீட்டில் அந்த ஆன்மாக்களின் ஆசியால் சந்தோஷம், சுபகாரிய நிகழ்வும், தீர்க்காயுளும் உண்டாகும்.

    24. சிங்கம்,புலி,கரடி ஆகிய கொடிய மிருகங்களின் பொம்மைகளை உங்களுடைய வீடுகளில் வைப்பதின் மூலம் எதிரிகளின் தொல்லை அடங்கும்.

    25. தன்னைப்பற்றி பிறரிடம் சொல்வதன் மூலம் குறைந்து விடும் விஷயங்கள் இரண்டு. அவை பாவமும் புண்ணியமும். நாம் செய்யும் பாவங்களை நாமே பிறரிடம் கூறும் போது அதுவும் குறைந்து கொண்டே வரும்.

    26. முறைப்படி மந்திரங்கள் ஓதி பிறர் மீது ஏவப்பட்ட செய்வினைக்கு 1008 நாட்கள் மட்டுமே சக்தி உண்டு.அதன் பிறகு அது செய்தவனையே திருப்பித்தாக்கும்.தான் செய்த வினையை தாமே அனுபவிப்பார்.

    27. உங்கள் வீட்டில் துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தால் கண்ணூறு தாக்கி இருப்பதாக உறுதி செய்து,உங்கள் வீடு முழுக்க உப்பு கலந்த நீரால் கழுவி விட்டால் கண்ணூரு போய்விடும்.

    28. அடுக்கு அரளி,செம்பருத்தி பூக்களைக் கொண்டு பூஜை செய்வதினால் ஞானம் பெருகும்.தொழில் விருத்தியடையும்.

    29. ஒரு பெண் கர்ப்பமான ஏழாவது மாதத்திலிருந்து அவள் குழந்தை பெற்ற முப்பதாவது நாள் வரை அவளது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லுதல் கூடாது.

    30. அன்னாச்சிப்பழம் ஓவியத்தை உங்கள் வீட்டில் சுவற்றிலோ அல்லது தொழிலகங்களின் முன்புற அறைகளிலோ வரைந்து வைத்தால் அதிர்ஷ்டம் தேடிவரும்.

    • சிவனை வழிபட்டால் நற்புகழ் கிடைக்கும்.
    • சிவபெருமானின் பூஜையில் தாழம்பூ சேர்க்கப்படுவதில்லை.

    சுயம்பு முருகன்

    ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் உள்ளது, வடவிஜயபுரம் என்ற ஊர். இங்குள்ள மலை மீது முருகப்பெருமான் சுயம்புவாக தோன்றி இருந்து அருள்பாலிக்கிறார். எனவே இந்த மலை முருகனை, 'தான்தோன்றி முருகன்' என்று அழைத்து பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.

     மயில் மீது அமர்ந்த கோலம்

    மகாராஷ்டிரா மாநிலம் புனே நகருக்கு அருகில் உள்ளது, பார்வதி மலை. இந்த மலையின் மீது முருகப்பெருமானுக்கு கோவில் அமைந்திருக்கிறது. கார்த்திகேயன் என்ற பெயரில் இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் இத்தல முருகனை பக்தர்கள் தரிசிக்கலாம்.

     மாலினி சாஸ்திரம்

    மலர்களால் அழகுபடுத்தும் கலையை விவரிப்பது 'மாலினி சாஸ்திரம்'. மலர் காட்சி அமைத்தல், விதவிதமாக மாலைகள், செண்டுகள் செய்தல், பெண்களின் சிகை அலங்காரத்தில் மலர்களை சேர்த்தல் உள்ளிட்ட பல மலர் அலங்கார முறைகளைப் பற்றி இந்த சாஸ்திர நூல் கூறுகிறது. இதனை இயற்றியவா் ரிஷ்ய சிருங்கர் என்னும் முனிவர் ஆவார்.

    கழுதை வாகனத்தில் சிவன்

    பெரும்பாலானவர்களின் வீட்டின் முன்பாக, 'என்னைப் பார் யோகம் வரும்' என்று கழுதைப் படத்தை மாட்டி வைத்திருப்பார்கள். கண் திருஷ்டி கழிவதற்காகவும், யோகத்திற்காகவும் இவ்வாறு செய்யப்படுவதாக சொன்னாலும், கழுதையை வணங்கும் முறை நம்மிடம் இல்லை. தெய்வங்கள் பலருக்கும் பல்வேறு வாகனங்கள் இருந்த போதிலும், கழுதையை வாகனமாக கொண்ட தெய்வங்கள் எதுவும் இல்லை. ஆனால் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள சிவன் கோவில் ஒன்றில், கழுதை வாகனத்தின் மீது சிவன் அமர்ந்திருப்பது போல் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிவனை வழிபட்டால் நற்புகழ் கிடைக்கும் என்பது, அங்கு நிலவும் நம்பிக்கை.

     பூஜையில் தாழம்பூ

    சிவபெருமானின் பூஜையில் தாழம்பூ சேர்க்கப்படுவதில்லை. ஆனால் மற்ற தெய்வங்களுக்கு தாழம்பூ கொண்டு பூஜிக்கும் முறை இருக்கிறது. அப்படிப்பட்ட தாழம்பூவின் நுனியில் லட்சுமி தேவியும், நடுப்பகுதியில் சரஸ்வதியும், காம்பு பகுதியில் மூதேவியும் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே தெய்வங்களின் பூஜையில் தாழம்பூவை சேர்க்கும்போது, அதன் காம்பு பகுதியை நீக்கிவிட்டு சேர்க்க வேண்டும் என்கிறார்கள்.

    அதிசய கிணறுகள்

    சென்னை அடுத்துள்ள மதுராந்தகம் அருகே வடசிற்றம்பலம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள முருகன் கோவிலில் ஆறு கிணறுகள் இருக்கின்றன. இந்த ஆறு கிணறுகளும் 6 விதமான சுவையுடைய தண்ணீரை கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். உப்பு, கரிப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய 6 சுவைகளுடன் உள்ள இந்த அதிசய கிணறுகளைக் காண்பதற்காகவே இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம் என்கிறார்கள்.

    ரத்னாவதி ஆசனம்

    முன் காலத்தில் நீலம், வைரம், பத்மராகம், முத்து, பவளம் ஆகிய ஐந்து வகையான ரத்தினங்களைக் கொண்டு ஆசனம் செய்து, அதில் இறைவனை அமர வைத்து பூஜை செய்வார்கள். இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் ஐஸ்வரியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. 5 வகையான ரத்தினங்களால் செய்யப்படும் அந்த ஆசனத்திற்கு, 'ரத்னாவதி ஆசனம்' என்று பெயர்.

     முக்தி தரும் ரஜத லிங்கம்

    வெள்ளி உலோகத்தால் செய்யப்பட்ட லிங்கத்திற்கு 'ரஜத லிங்கம்' என்று பெயர். சென்னை கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சில ஆலயங்களில் இப்படியான வெள்ளியில் செய்யப்பட்ட சிவலிங்கங்கள் இருக்கின்றன. பிரதோஷம், சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய விசேஷ தினங்களில் இவற்றிக்கு பூஜை செய்யப்படுகிறது. இந்த ரஜத லிங்கத்தை தரிசனம் செய்தால் முக்தி கிடைக்கும் என்கிறார்கள்.

    • தமிழ்நாட்டிலேயே ஒரே ஒரு இடத்தில்தான், சரஸ்வதி தேவிக்கு கோவில் இருக்கிறது.
    • ராகு காலத்தில் எந்த காரியமும் செய்யமாட்டார்கள்.

    சரஸ்வதி கோவில்

    கல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்கு, பல கோவில்களில் விக்கிரகங்கள் வைக்கப்பட்டிருப்பதை காண முடியும். சில கோவில்களில் தனியாக சிறிய சன்னிதிகளும் இருக்கும். ஆனால் தமிழ்நாட்டிலேயே ஒரே ஒரு இடத்தில்தான், சரஸ்வதி தேவிக்கு என்று தனியாக கோவில் இருக்கிறது. அது நாகப்பட்டினம் மாவட்டம் கூத்தனூரில் உள்ளது. பெரும் புலவரான ஒட்டக்கூத்தருக்கு, சோழ மன்னன் தானமாக வழங்கிய ஊர் என்பதால் இது 'கூத்தனூர்' என்று பெயர் பெற்றது. அந்த புலவர் தன்னுடைய புலமைக்கு அருள்பாலித்த சரஸ்வதிக்கு, அவ்வூரில் ஒரு கோவிலை அமைத்தார். தமிழில் ராமாயணம் எழுதிய கம்பர், இத்தல சரஸ்வதி மீது, 'சரஸ்வதி அந்தாதி' பாடியுள்ளார்.

    ராகு கால பூஜை

    ராகு காலத்தில் எந்த காரியமும் செய்யமாட்டார்கள். ஆனால் அந்த கால வேளையில் ராகு பகவானை மட்டும் பூஜிக்கலாம். ராகு பகவானை துதிக்க, திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகராஜர் கோவில் பிரசித்தி பெற்றதாகும். அங்கு ராகு காலத்தில், நாகவள்ளி மற்றும் நாகக்கன்னி சமேத ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    பிரம்மன் கோவில்

    தஞ்சையை அடுத்த திருவையாறு அருகில் உள்ளது திருக்கண்டியூர். இது பிரம்மனின் ஆணவம் அழிப்பதற்காக அவரது ஐந்து தலைகளில் ஒன்று சிவபெருமானால் கொய்யப்பட்ட இடமாகும். இந்த ஆலயத்தில் நான்கு முகங்களுடன் பிரம்மனுக்கு தனி கோவில் அமைந்திருக்கிறது. இது தவிர திருப்பட்டூரில் பிரம்மன் தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார்.

    தொங்கும் தூண்

    கல்லிலே கலைவண்ணம் படைத்த தமிழர்கள், தங்களது எண்ணங்களை கலையாக்கி, சிலையாக்கி, திருக்கோவில்கள் தோறும் நிறுவி உள்ளனர். தர்மபுரி அருகேயுள்ள தகடூர் என்ற ஊர், மன்னன் அதியமான் கோலோச்சிய நகரமாகும். இங்குள்ள கல்யாண காமாட்சி சமேத மல்லிகார்ச்சுனேசுவரர் திருக்கோவிலில் நவக்கிரக மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்குள் காணப்படும் கல் தூண் ஒன்றை, `தொங்கும் தூண்' என்று அழைக்கின்றனர். ஏனெனில் இந்த தூண், தரையில் படாமல் அந்தரத்தில் நிற்கிறது. இதன் அடிப்பாகத்தில் குச்சி அல்லது காகிதத்தை ஒரு புறம் நுழைத்து மறுபுறம் எடுத்துவிடலாம்.

    உச்சிப்பிள்ளையார்

    திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில், மலை மீது 273 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலை அடைய 417 படிகள் ஏறி செல்ல வேண்டும். இந்த மலையை ஒரு பக்கம் இருந்து பார்த்தால் சிவனின் வாகனமான ரிஷபமாகவும், மற்றொரு பக்கம் இருந்து பார்த்தால் சக்தியின் வாகனமான சிம்மமாகவும், இன்னொரு திசையில் இருந்து பார்த்தால் தும்பிக்கையை நீட்டி அமர்ந்த கோலத்தில் விநாயகராகவும் மூன்று வடிவங்களில் காட்சி தருகிறது.

    • தங்கம் வாங்கினால் தீராத கடன்களையும் ஏழ்மையையும் மிக்குறுகிய காலத்தில் தீர்க்கும்.
    • வெள்ளி வாங்கினால் சரும நோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை ஆகியவை தீரும்.

    அட்சய திருதியை திருமணங்களுக்கு ஏற்ற காலமாகவும் கருதப்படுவதால் அந்நாளில் பெரும் எண்ணிகையிலான திருமணங்களும் நடத்தப்படுகின்றன.

    செல்வத்திற்கு அதிபதியான குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார்.

    இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் எனும் நூல் கூறுகிறது.

    இந்த நாளில், குபேர லட்சுமி பூசை நடத்தப்படுகிறது.

    அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்சன குபேர எந்திரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.

    கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, நர்மதை, துங்கபத்ரா, கோதாவரி, கண்டகி, தாமிரபரணி போன்ற புனித நதிகளையும் மானஸசரோவரம், புஷ்கரம், கௌரி குண்டம் ஆகிய புனித தடாகங்களையும் மானசீகமாக வழிபடுவதும் நீராடுவதும் புண்ணிய பலன் தரும்.

    ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு செய்யும் தானம், தர்மம், உதவிகள் பல பிறவிகளுக்கு புண்ணிய பலன் தரும்.

    சாலக்கிராமம், ருத்ராட்சம், ஸ்படிகலிங்கம் மற்றும் ஆராதனைக்கு வைத்துள்ள விக்கிரக தெய்வத்திருவுருவங்களுக்குப் பச்சை கற்பூரம், குங்குமப்பூ சேர்த்து சந்தனக் கட்டையால் அரைத்த சந்தனம் பூசி வழிபட உடலில் ஏற்படும் வெப்ப சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

    வெள்ளி வாங்கினால் சரும நோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை ஆகியவை தீரும்.

    தங்கம் வாங்கினால் தீராத கடன்களையும் ஏழ்மையையும் மிக்குறுகிய காலத்தில் தீர்க்கும்.

    தயிர் சாதம் ஏழைகளுக்குத் தருவது 11 தலைமுறைக்கு குறைவில்லா அன்னம் கிடைக்க வழிவகுக்கும்.

    • பலர் இந்த நாளில் தங்கம் அல்லது சொத்து வாங்குகின்றனர்.
    • மக்கள் இந்த நாளில் உண்ணாநோன்பும் பூசைகளும் கடைபிடிக்கின்றனர்.

    அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர்.

    ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர்.

    இந்து மதத்தின் நல்ல நேரம் (முகூர்த்தம்) பார்க்கும் சோதிடத்தின் படி மூன்று பௌர்ணமி நாட்கள் (திதிகள்) மிக மங்களகரமானவையாகக் கருதப்படுகின்றன.

    இவை மூன்றரை திதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

    சித்திரை மாத வளர்பிறையின் முதல் திதி புது வருட துவக்கமாகவும்,

    ஆவணி மாதத்தின் வளர்பிறையின் பத்தாம் திதி விஜய தசமியாகவும்,

    வைகாசி மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் திதி ''அட்சய திருதியை யாகவும்'' (பரசுராமர் ஜெயந்தி) கொண்டாடப்படுகிறது.

    சோதிட சாத்திரத்தின்படி இந்நாளில் சூரியனும் சந்திரனும் சம அளவு உயரொளியுடன் விளங்கும் என நம்பப்படுகிறது.

    வேதத்தில் அட்சய திருதியை நாளில் அறிவு பெறுதல் அல்லது கொடையளித்தல் நல்ல பலனளிக்கும் எனக் கூறுகின்றன.

    இது புதிய வணிகத்தினையோ அல்லது முயற்சியையோ துவங்க வெகு நன்னாளாகக் கருதப்படுகிறது.

    பலர் இந்த நாளில் தங்கம் அல்லது சொத்து வாங்குகின்றனர்.

    மக்கள் இந்த நாளில் உண்ணாநோன்பும் பூசைகளும் கடைபிடிக்கின்றனர்.

    விசிறி, அரிசி, உப்பு, நெய். சருக்கரை, காய்கறிகள், புளி, பழம், துணிகள் ஆகியவற்றை கொடையாக அளிக்கின்றனர்.

    இந்த நாளில் திருமாலை வணங்குகின்றனர். தீப வழிபாடு செய்யும்போது சிலையின் மீது அல்லது அருகில் துளசி தீர்த்தம் தெளிக்கப்படுகின்றது.

    • அன்னதானத்துக்கும், தண்ணீர் தானத்துக்கும் மிஞ்சிய தானமில்லை என்று சொல்வார்கள்.
    • வைகாசியில் தேய்பிறையில் பவுர்ணமி நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகிறது.

    அட்சய திருதியை என்பது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும்.

    அது வைகாசியில் தேய்பிறையில் பவுர்ணமி நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகிறது.

    அட்சயம் என்றால் குறைவற்றது, வளர்வது எனப்பொருள். வைகாசி மாதம் வளர்பிறை திருதியை அட்சய திருதியை என்று அழைப்படுகிறது.

    அட்சய திருதியை தினத்தன்று தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகள், ஜபங்கள், ஹோமங்கள் மற்றும் ஏழைகளுக்கு செய்யப்படும் தானங்கள் உதவிகள் ஆகிய அனைத்தும் அட்சயமாக வளர்ந்து பலனைத் தரும்.

    குறிப்பாக ஒரு சொம்பு அல்லது பாத்திரம் நிறைய தண்ணீரை ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும்.

    இதற்கு தர்ம கட தானம் எனப்பெயர்.

    புண்ணியத்தை சேர்த்துக் கொள்வதற்காகவும், பித்ருக்களின் திருப்திக்காகவும் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தை தானம் செய்கிறேன் என சங்கல்பம் செய்து கொண்டு ஒரு சொம்பு அல்லது பாத்திரத்தில் ஏலக்காய் முதலிய வாசனை திரவியங்களுடன் கூடிய சுத்தமான தண்ணீரை நிரப்பி, அதை ஏழைகளுக்கு தந்துவிட வேண்டும்.

    அட்சய திருதியை தினத்தன்று வீட்டின் வாசலில் தண்ணீர் பந்தல் அமைத்தோ, ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி வைத்தோ, அனைவருக்கும் குடிக்க தண்ணீர் தருவது மிகுந்த புண்ணியத்தை தரும்.

    அன்னதானத்துக்கும், தண்ணீர் தானத்துக்கும் மிஞ்சிய தானமில்லை என்று சொல்வார்கள்.

    பசியுடன் கூடிய அனைவருக்கும் அன்னதானம், தண்ணீர் தானம் செய்ய வேண்டும்.

    இதில் ஜாதி, மத, இன, கல்வி, பாகுபாடு பார்க்கக் கூடாது.

    தாகத்தோடு வருபவர்களுக்கு குடிக்க தண்ணீர் தருவது புண்ணியத்தை தந்து, நமது விருப்பத்தை நிறைவேற்றும்.

    அது இறந்த முன்னோர்களுக்கு உண்டாகும் தாகத்தையும் தனித்து அவர்களுக்கும் நல்ல கதியை உண்டாக்கும்.

    மேலும் விசிறி, குடை, செருப்பு, பானகம், நீர் மோர் ஆகியவற்றையும் ஏழைகளுக்கு தானமாக அளிக்கலாம்.

    ஆகவே அட்சய திருதியை தினத்தன்று வெயிலில் தவிக்கும் 10 பேருக்காவது குடிக்க தண்ணீர் கொடுப்பதும்,

    காய்ந்து போன செடிகள், கொடிகள், மரங்களுக்கு தண்ணீர் விடுவதும் மிகவும் சிறந்தது.

    அட்சய திருதியை அன்று செய்யப்படும் பூஜை, ஜபம், ஹோமம், பாராயணம், பித்ரு தர்ப்பணம் மற்றும் ஏழைகளுக்கு செய்யப்படும் தானம் உதவி, ஆகிய ஆறும் அட்சயமாக பலனைத்தரும்.

    இதனால் கிடைக்கும் பலன் நமக்கும் நம்மைத் தொடர்ந்து நம் சந்ததிகளுக்கும் அடுத்தடுத்த ஜென்மங்களிலும் குறைவின்றி அட்சயமாக கிடைக்கும்.

    ×