என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைபுனிதன் சாதனை"

    • குமரி மாவட்ட நாடகத் தந்தை எனப் போற்றப்படுபவர் டாக்டர் சாமுவேல் இரணியல் கலைத்தோழன்.
    • தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் திருக்குறளில் உள்ள 1330 குறளையும் மனப்பாடம் செய்து எழுதும் முயற்சியில் ஈடுபட்டார்.

    சென்னை:

    செம்மொழி தமிழ் வளர்ச்சி கழக செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    குமரி மாவட்ட நாடகத் தந்தை எனப் போற்றப்படுபவர் டாக்டர் சாமுவேல் இரணியல் கலைத்தோழன். இவரது மகன் பேராசிரியர் சா.கலைப்புனிதன். தற்போது அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளராக உள்ளார். கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி தந்தையர் தினத்தன்று தனது தந்தையின் நினைவாக சென்னையில் உள்ள செம்மொழி தமிழ் வளர்ச்சி கழக அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் திருக்குறளில் உள்ள 1330 குறளையும் மனப்பாடம் செய்து எழுதும் முயற்சியில் ஈடுபட்டார். சுமார் 5 மணி நேரம் 48 நிமிடத்தில் எவ்வித பிழையுமின்றி எழுதி முடித்து உள்ளார்.

    இந்த சாதனை முயற்சியை லண்டனில் இருந்து வெளி வரும் வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் இரண்டரை மாத கால பரிசோதனைக்கு பிறகு அங்கீகரித்தது. முதன்முதலாக திருக்குறளில் உள்ள 1330 குறளையும் மனப்பாடம் செய்து எவ்வித பிழையுமின்றி எழுதி டாக்டர் கலைபுனிதன் சாதனை படைத்துள்ளார் என பாராட்டியதோடு சான்றிதழ் வழங்கி தனது இந்திய பதிப்பில் அதன் விவரங்களையும் வெளியிட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×