என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆன்சிஆக்சிடெண்ட்"
- அழுக்கு, இறந்த செல்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது கிடையாது.
பொதுவாக, வயதாகும்போது நமது உடலில் பல மாற்றங்களை சந்திக்கிறது. அதில் ஒன்று தான் தோல் சுருக்கும். இது வயதாகும்போது வருவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், ஒரு சில பெண்களுக்கு சிறுவயதிலேயே கைகளில் இருக்கும் தோல் சுருங்கி போய் காட்சியளிக்கும். இதற்கு காரணம் உடலில் நீரிழப்பு, கைகளை அடிக்கடி கழுவுதல், பாத்திரங்கள் கழுவுதல் போன்றவை ஆகும். இருப்பினும், சில பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது கிடையாது.
ஏனென்றால், முகம் அழகாக தெரிந்தால் போதும் என்று நினைப்பது தான். அதுமட்டுமல்லாமல், அதற்கு தனியாக செலவு செய்ய வேண்டியிருக்குமே என்றும் நினைப்பார்கள். பார்லருக்கு போய் அதையும் இதையும் பண்றதுக்கு பதிலாக வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தியே கைகளில் இருக்கும் சுருக்கங்களை போக்கி அழகான சருமத்தை பெற முடியும். மேலும் உங்க சருமத்தை மினுமினுப்பாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ளும். இவ்வாறு இயற்கை பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்தவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.
எலுமிச்சை ஸ்க்ரப்
நமது சருமத்தில் இருக்கும் அழுக்கு, இறந்த செல்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த எலுமிச்சை ஸ்க்ரப் தான். அதற்கு ஒரு கப்பில் 3 அல்லது 4 ஸ்பூன் சர்க்கரையும், 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றையும் நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர், கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவிவிட்டு, இந்த கலவை கைகளில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். காய்ந்தவுடன் சாதாரண தண்ணீரில் கைகளை கழுவிடுங்கள். இதை வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்து வர மென்மையான கைகளை பெறலாம்.
பால்
பால் ஒரு சிறந்த மாய்ஸ்ச்சரைசர். இதை சரும பராமரிப்புக்கு பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், சருமத்துக்கு ஈரப்பதம் கிடைக்கவும் உதவும். முதலில் எலுமிச்சை ஸ்க்ரப் செய்துக் கொள்ளவும். பின்னர், ஒரு அகலமான பாத்திரத்தில் 1 கப் பால், அதனுடன் பாதாம் எண்ணெய் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையில் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு கைகளை அப்படியே வைத்திருக்கவும். பின் கைகளை வெளியே எடுத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவவும். இதை வாரத்தில் 4 அல்லது 5 முறை செய்துவர கைகளில் உள்ள சுருக்கங்கள் மறையத் தொடங்கும்.
அன்னாசி கூழ்
வைட்டமின் சி சத்து நிரம்பியுள்ள அன்னாசி பழத்தை சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கக்கூடியது. முதலில் அன்னாசி பழத்தை நன்றாக கூழ் போன்று பிசைந்துக் கொள்ளவும். அந்த கூழை கைகள் முழுக்கத் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவி விடவும். மென்மையான மற்றும் சுருக்கமில்லாத கைக்கு இந்த ஹேண்ட் மாஸ்க்கை தினமும் பயன்படுத்தலாம்.
ஆலிவ் ஆயில்
தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன் ஆலிவ் எண்ணெயைக் கொண்டு கைகளை மசாஜ் செய்துக் கொள்ளுங்கள். பின்னர், பருத்தி கையுறைகளை அணிந்து அவற்றை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். மீண்டும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவிக் கொள்ளுங்கள். இதை தினமும் செய்துவர கைகளை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றும்.
வாழைப்பழம்
மேற்கூறிய எதுவும் செய்ய முடியாதவர்கள் வாழைப்பழத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழைப்பழத்தில் ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, அவை சுருக்கங்களை எதிர்த்துப் போராடுவதற்கு ஏற்றதாக அமைகின்றன. வாழைப்பழத்தை நசுக்கி கூழ் போன்று செய்துக் கொள்ளவும். அந்த கூழை உங்கள் கைகளில் தடவி காய்ந்தவுடன் கழுவிவிடுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை செய்துவர மென்மையான கைகளை பெறலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்