search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைஞர் 100"

    • கலைஞர் சினிமாவிலேயே இருந்திருந்தால், இன்னும் பல எம்.ஜி.ஆர்.களையும் சிவாஜிகளையும் உருவாக்கி இருப்பார்.
    • பிரசார காலங்களில் மு.க.ஸ்டாலினின் பேச்சை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ரசித்த ரசிகர்களில் நானும் ஒருவன்.

    சென்னையில் நடந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசியதாவது:-

    கலைஞர் சினிமாவிலேயே இருந்திருந்தால், இன்னும் பல எம்.ஜி.ஆர்.களையும் சிவாஜிகளையும் உருவாக்கி இருப்பார். ஆனால் சினிமா உலகம் கொடுத்து வைக்கவில்லை. அவரை அரசியல் எடுத்துக்கொண்டது. எழுத்து, பேச்சில் வித்தகராக திகழ்ந்தவர் கலைஞர். எழுத்து இல்லையென்றால் மதம், புராணம், வரலாறு, விஞ்ஞானம், வர்த்தகம், கதை, கவிதை, அரசு என எதுவும் இல்லை. இயற்கை கொடுத்த சக்தி எழுத்து. அவரது வசனத்தில் நான் நடிக்கவே பயந்த காலம் உண்டு.

    மு.க.ஸ்டாலினை 1974-ல் இருந்து எனக்கு தெரியும். பிரசார காலங்களில் மு.க.ஸ்டாலினின் பேச்சை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ரசித்த ரசிகர்களில் நானும் ஒருவன். எம்.ஜி.ஆர்., சிவாஜியை தனது எழுத்தால் உச்ச நடிகர்களாக்கினார். மந்திரிகுமாரி, மலைக்கள்ளன் படங்கள் மூலமாக கிடைத்த வருமானத்தை கொண்டு சென்னை கோபாலபுரத்தில் வீடு வாங்கினார். அந்த வீட்டில் தான் இறுதிகாலம் வரை எளிமையாக வாழ்ந்தார். அவரை போல மு.க.ஸ்டாலினும் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்.

    தன்னை விமர்சனம் செய்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மருத்துவ உதவிக்கு பணம் கொடுத்து உதவி செய்தவர் கலைஞர். தன்னை மிக மோசமாக விமர்சனம் செய்த பத்திரிகையாளரை நலம் விசாரித்தே, தலை வணங்கச் செய்தவர் கலைஞர். அந்த பத்திரிகையாளர் பெயர் சோ ராமசாமி, பொதுக்கூட்டத்தில் அவரை விமர்சனம் செய்த கட்சிக்காரரை கண்டித்து அடக்கியவர் எம்.ஜி.ஆர். கடவுள் நம்பிக்கைக்காரரான ஆன்மீகவாதி சத்ய சாய்பாபா, கலைஞரை வீடு தேடி சென்று சந்தித்து பேசினார்.

    எல்லாவற்றையும் விட தேர்தலின்போது இரட்டை இலைக்கு ஒரு முன்னணி நடிகர் ஓட்டு போட்டார். ஆனால் அவர் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டது தெரிந்தும் அவரது புதிய படத்தை பார்க்க கலைஞர் அவருக்கு அழைப்பு விடுத்தார். குளிர் ஜுரம் என்று சொல்லியும் அந்த நடிகரை கட்டாயமாக அழைத்து படத்தைப் பார்த்தார். அந்த நடிகர் நான்தான். சூரியன் பக்கத்தில் அமர்ந்தால் குளிர் ஜுரம் போய்விடும் என்று நகைச்சுவையாக அவர் அன்று பேசியதை என்னால் மறக்கவே முடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது எனது பாக்கியம் என்று பேசினார்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
    • பூந்தமல்லியில் சுமார் ரூ.500 கோடியில் நவீன திரைப்பட நகரம் உருவாக்கப்படும் என்றார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா 'கலைஞர் 100' என்ற பெயரில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

    சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த 'கலைஞர் 100' விழாவில் திரையுலகைச் சேர்ந்த பெரும்பாலான நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

    நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிவராஜ்குமார், உதயநிதி ஸ்டாலின், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், கவுதமி, வடிவேலு, சோனியா அகர்வால், ரோகினி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், தங்கர்பச்சான், டி.ராஜேந்திரன், ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆந்திர அமைச்சர் ரோஜாவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

    இந்த நிகழ்வில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து பிரபலங்கள் ஒவ்வொருவராக நிகழ்ச்சியில் பேசினர். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    அப்பா, அம்மா வைத்த பெயரை மறந்துவிடும் அளவிற்கு தமிழ்நாடு கலைஞர் என்றுதான் உச்சரித்து இருக்கிறது. தமிழக மக்களின் உள்ளங்களில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கருணாநிதி. தொண்டர்கள் கொடுத்த தலைவர் பட்டத்தோடு, மக்கள் கொடுத்த கலைஞர் பட்டத்துக்கும் பொருத்தமானவர் அவர்.

    வாழ்ந்த காலத்தைப் போலவே மறைந்த பின்னரும் நினைக்கக்கூடிய பெருமை மிக்கவர் அவர்தான். 2018-ம் ஆண்டு கருணாநிதி மறைவால் தமிழகமே கலங்கிப் போனது. அதனைத் தொடர்ந்து பல்வேறு துறையினர் அவருக்கு புகழஞ்சலி கூட்டம் நடத்தி பெருமை சேர்த்தார்கள். ஆனால் அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

    எழுத்து, பேச்சால் ரசிகர்களின் உள்ளத்தில் கொடி ஏறியவர் கருணாநிதி. அவர் ஒரு படத்துக்கு வசனம் எழுதினால் என்றால் அந்த படம் வெற்றி என்றே கருதப்படும். அவரது வசனத்தைக்கூறி நடிப்பு துறையினர் வாய்ப்பு கேட்கும் சூழல் ஏற்பட்டது. ராஜகுமாரி முதல் பொன்னர் சங்கர் வரை அவரது சினிமா பயணம் மிகப் பெரியது. கலை இனிமே என்னிடம் என்று வாழ்ந்த தலைவர் அவர். தி.மு.க. ஆட்சி அமையும் போதெல்லாம் கலைத்துறையினருக்கு பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன அந்த வகையில் தற்போதைய தி.மு.க. ஆட்சியும் தொடர்கிறது.

    இந்த விழா மேடையிலேயே புதிய திட்டங்களை நான் அறிவிக்கிறேன். எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டி ரூ.5 கோடி செலவில் 4 படப்பிடிப்பு தளத்துடன் விரைவில் அமைக்கப்பட உள்ளது. அதேபோல கமல்ஹாசன் வைத்த கோரிக்கை அடிப்படையில், பூந்தமல்லியில் 140 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளது. இந்த நவீன திரைப்பட நகரில் வி.எப்.எஸ், அனிமேஷன், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 நட்சத்திர ஓட்டல் என சகல வசதிகளும் அமைக்கப்பட இருக்கிறது. முதலமைச்சராக இல்லாமல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாக அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.

    • தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நடத்தும் 'கலைஞர் 100' விழாவில் திரையுலகைச் சேர்ந்த பெரும்பாலான நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்
    • கலைஞரையும் தமிழையும், கலைஞரையும் சினிமாவையும், கலைஞரையும் அரசியலையும் பிரிக்க முடியாது என கமல்ஹாசன் புகழாரம்

    மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா 'கலைஞர் 100' என்ற பெயரில் சென்னை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் திரளான பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் அமைச்சர்கள் உதயநிதி, ரஜினி காந்த், கமல்ஹாசன், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்சியில் , மிசா காட்சிகளை கலைஞராக தம்பி ராமையாவும், ஸ்டாலினாக விதார்த்தும் நடித்த காட்சிகளை கண்டு, முதலமைச்சர் ஸ்டாலின் கண் கலங்கினார்.

    இந்நிகழ்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், கலைஞரையும் தமிழையும், கலைஞரையும் சினிமாவையும், கலைஞரையும் அரசியலையும் பிரிக்க முடியாது. சிறுவயதில் என்னுடைய அக்காக்கள் எனக்கு தலை சீவி விடும்போது கலைஞர் மாதிரி நடு வகுடு எடுத்து சீவி விடுங்கள் என்பேன். எனது நண்பர் விஜயகாந்த் அவர்களின் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்த அரசியல் பண்பிற்கு முதல்வருக்கு நன்றி என தெரிவித்தார்

    தொடர்ந்து பேசிய நடிகர் சூர்யா, அரசியலில் பல மாற்றங்கள் கொண்டுவந்த போது சினிமாவையும் ஒருசேர கொண்டுவந்தவர் கலைஞர் என கூறினார். "பராசக்தி படத்தில் நீ வேணும் என்றால் ஆட்சிக்கு வந்து மாத்திகாட்டேன் என எழுதி இருப்பார். அதேபோல் முதலமைச்சராக அமர்ந்து தான் எழுதியதை செய்துகாட்டியவர் கலைஞர்" என நடிகர் சூர்யா புகழாரம் சூட்டினார்.

    • கலைஞர் 100 நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்து கொண்டனர்.
    • திரைத்துறை மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.

    கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் கலைஞர் 100 விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் திரைத்துறையை சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் தனுஷ், " ஒரு படத்தின் பூஜைக்காக பத்திரிகை வைக்க கலைஞர் வீட்டிற்கு சென்றேன். அப்போது கலைஞர் கருணாநிதி என்னை 'வாங்க மன்மத ராசா' என அழைத்தார். நம்ம பாட்டை இவர் கேடடிருக்காரான்னு ஆச்சரியமா இருந்தது."

     


    "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அசுரன் படம் பார்த்துவிட்டு என்னை தொடர்புகொண்டு வாழ்த்தினார். அப்போது அவர், பிரதர் நான் ஸ்டாலின் பேசறேன் என கூறினார். இன்றைக்கு நமது முதலமைச்சர் எளிதில் அணுகும்படியாக இருக்கிறார். மக்களின் முதலமைச்சராக உள்ளார். கலைஞர் அவர்கள் மறைந்து விட்டார் என யாராவது பேசினால்தான் அவர் மறைந்து விட்டார் என மனதிற்குள் தோன்றுகின்றது," என தெரிவித்தார்.

    • கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் கலைஞர் 100 நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • அரசியல் தலைவர்களும் கலைஞர் 100 நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தமிழ் சினிமா வளர்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் வகையில், "கலைஞர் 100" என்ற பெயரில் பிரமாண்ட விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் இதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.


     

    அதன்படி கடந்த மாதம் 24-ம் தேதி கலைஞர் 100 நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டது. எனினும், புயல் மற்றும் கனமழை காரணமாக அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (ஜனவரி 6) கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் கலைஞர் 100 நிகழ்ச்சி நடைபெறுகிறது.




    கோலாகலமாக துவங்கிய இந்த நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நடிகர்களை பொருத்தவரை ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்தி, தனுஷ், அருண் விஜய், விஜயகுமார், எஸ்.ஏ. சந்திரசேகர், கருணாஸ், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இயக்குனர்கள் ஷங்கர், லோகேஷ் கனகராஜ், நடிகை நயன்தாரா உள்ளிட்டோரும், ஆந்திர மாநில அமைச்சரும், நடிகையுமான ரோஜாவும் கலைஞர் 100 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். திரைத்துறை மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் கலைஞர் 100 நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

    • நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பி உள்ளனர்.
    • ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    தமிழ் திரையுலகம் சார்பில் திரை உலகில் உள்ள அனைத்து சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கலைஞர் 100 என்கிற விழாவை இன்று மாலை நடத்துகிறது.

    கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று மாலை 4 மணி அளவில் இந்த விழா தொடங்குகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். விழாவில் சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள்.


    கருணாநிதியின் புகழை போற்றும் வகையில் திரை உலகில் அவரது பங்களிப்பு பற்றிய முழுமையான விவரங்கள் அடங்கிய தொகுப்பு விழாவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அவரது வசனங்கள் அதன் மூலமாக பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள் தொடர்பாகவும் கலைஞர் 100 விழாவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகைகள் ரம்யா பாண்டி யன், இனியா, யாஷிகா ஆனந்த், தேஜஸ்ஸ்ரீ மற்றும் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமசாமி என்ற முரளி ராமநாராயணன் மற்றும் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.


    கலைஞர் 100 விழாவையொட்டி இன்று தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பி உள்ளனர். அவர்களும் இன்று மாலை நடை பெறும் விழாவில் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் களை கட்டி உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

    தமிழ் திரை உலகினர் ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக திரள்வதால் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    • கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றது முதல் 2019 வரை வெளியான கட்டுரை தொகுப்பு நூலாக வெளியீடு.
    • 'கலைஞர் 100' நூலை முதலமைச்சர் வெளியிட முதல் பிரதியை கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார்.

    கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு தமிழ் நாடு முழுக்க கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொண்டாட்டத்தின் அங்கமாக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டும், சிறப்பு நிகழ்ச்சிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

    அதன்படி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று "கலைஞர் 100" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு "கலைஞர் 100" புத்தகத்தை வெளியிட, அதனை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.

    கலைஞர் 100 நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×