search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்துணர்ச்சி அளிக்கிறது"

    • அனைவருக்கும் யோகாசனம் செய்யும் பழக்கம் இருக்கும்.
    • தினமும் காலையில் யோகா செய்ய வேண்டும்.

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் யோகாசனம் செய்யும் பழக்கம் இருக்கும். யோகா என்பது நம் உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் ஆன்மாவை ஒருங்கிணைக்கும் ஒரு கலை ஆகும். நம் உடலில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைத்து மன நிலையை அமைதியாக வைத்திருக்க செய்ய கூடிய பயிற்சியாகும். அதுமட்டுமில்லாமல் நம் உடலில் உள்ள சோர்வை நீக்கி புத்துணர்ச்சியாக வைக்கவும் யோகா உதவுகிறது. எனவே ஒருவர் தினமும் யோகா செய்வதன் மூலம் அவர் உடலில் என்னென்ன நன்மைகள் உண்டாகுகிறது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

    மன அழுத்தத்தை குறைப்பதற்கு பெரும்பாலான மக்கள் யோகாசனத்தை தேர்வுசெய்து வருகிறார்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட துன்பங்கள் உங்கள் மனதில் மன அழுத்தத்தை ஏற்படுத்தினால் தினமும் யோகா செய்து மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

    உங்கள் உடலில் மற்றும் தலையில் உள்ள உஷ்ணத்தை சரியான அளவில் வைத்துக்கொள்ள யோகாசனம் மிகவும் உதவுகிறது. கோடை காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணத்தை தடுப்பதற்கு தினமும் காலையில் யோகா செய்ய வேண்டும்.

    உங்கள் மனதில் உள்ள ஏராளமான பதட்டத்தை குறைப்பதற்கு யோகா மிகவும் உதவுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எனவே தினமும் யோகா செய்வதன் மூலம் மனதில் ஏற்படும் பதட்டத்தை குறைக்கலாம்.

    தினமும் யோகா செய்வதன் மூலம் இதயத்திற்கு சரியான அளவில் ரத்த ஓட்டம் செல்கிறது. மேலும் இதயத்தில் உள்ள திசுக்களின்

    ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. எனவே இதயத்தில் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் யோகா பயிற்சி செய்தால் அவர்களின் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

    இரவில் தூக்கம் வராதவர்கள் அல்லது இரவில் திடீரென்று விழிப்பவர்களுக்கு யோகா ஒரு சிறந்த தீர்வாகும். எனவெ தூக்கம் வராதவர்கள் தினமும் ஒரு 30 நிமிடம் யோகா பயிற்சி செய்தால் போதும் தூக்கமின்மை பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

    ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் யோகா செய்வதன் மூலம் ஆஸ்துமா பிரச்சினையை குறைக்கலாம். மேலும் தலைசுற்றல், மயக்கம் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் தினமும் யோகா பயிற்சி மேற்கொண்டால் மயக்கம் வராமல் தடுக்கலாம்.

    • அனைத்து செல்களையும் புதுப்பிக்கக்கூடிய அதிஅற்புதமான முத்திரை.
    • உத்திரபோதி முத்திரை நுரையீரலையும், பெருங்குடலையும் வலுப்படுத்துகிறது.

    உடலில் உள்ள அனைத்து செல்களையும் புதுப்பிக்கக்கூடிய அதிஅற்புதமான முத்திரை இந்த உத்திரபோதி முத்திரை என்று போகர் சித்தர் கூறி உள்ளார்.

    முதலில் முத்திரைகளை செய்வதற்கு முன்னால் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் மனதில் நம்பிக்கையுடனும், மன ஒருமைப்பாட்டுடனும் செய்யும் போதுதான் முத்திரையின் பலன்களாக இருந்தாலும், யோகா, தியானத்தினுடைய பலன்களாக இருந்தாலும் நமக்கு கிடைக்கும்.

    உத்திரபோதி முத்திரை நுரையீரலையும், பெருங்குடலையும் வலுப்படுத்துகிறது. உத்திரபோதி முத்திரையை எப்படி செய்ய வேண்டும் என்றால் இரண்டு கைவிடல்களிலும் உள்ள கட்டைவிரலும், ஆள்காட்டி விரலும் மட்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும் மற்ற விரல்கள் அனைத்தும் கோர்த்துக்கொண்டு இருக்க வேண்டும். ஆள்காட்டிவிரல் மேல் பார்த்தவாறு இருக்க வேண்டும். கட்டைவிரல் கீழ்நோக்கி இருக்க வேண்டும். இதற்கு தான் உத்திரபோதி முத்திரை என்று பெயர்.

    இந்த முத்திரையை தினமும் 20 நிமிடம் செய்யலாம். இந்த முத்திரையை உட்கார்ந்துகொண்டும், நடந்துகொண்டும் செய்யலாம். பெரும்பாலும் முத்திரைகளை உட்கார்ந்து செய்வது தான் உடலுக்கு நல்லது.

    உத்திரபோதி முத்திரையை நாம் தொடர்ந்து செய்துகொண்டு வரும்போது நமது உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உடலும், மனதும் சோர்ந்துபோய் இருக்கும் போது நமக்கு நியாபகம் வரக்கூடிய முத்திரை இந்த உத்திரபோதி முத்திரை. எப்போதெல்லாம் நாம் சோர்ந்துபோய் இருக்கிறோமோ அல்லது கொஞ்சம் ரிலாக்சாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்போதெல்லாம் இந்த உத்திரபோதி முத்திரையை செய்யலாம்.

    ஏதாவது ஒரு விஷயத்தை நாம் கையாளும் போது நான் என்னசெய்வது என்று தெரியாமல் பரபரப்பாக காணப்படுவோம். அவ்வாறு இருக்கும் போது இந்த உத்திரபோதி முத்திரையை செய்தால் கண்டிப்பாக மனதுக்குள் ஒரு அமைதியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

    நாம் முத்திரையை செய்யும் போது மூச்சு உள்வாங்கப்படும்போது நம் மனதில் உள்ள ஸ்டிரெஸ் (மன அழுத்தம்) குறைகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் பரீட்சைக்கு போகும்போது வரக்கூடிய பயத்தை போக்குவதற்கும், மேடை ஏறி பேசுவதற்கு பயப்படுகிறவர்கள் அதுமட்டுமில்லாமல் இண்டர்வியூக்கு செல்லும் போது ஏற்படக்கூடிய பயத்தையும் போக்குவதற்கு இந்த உத்திரபோதி முத்திரை உதவுகிறது.

    இந்த உத்திரபோதி முத்திரையை நாம் செய்யும் போது அவர்களுக்கு நிதானமும், படித்ததை பரிட்சையில் எழுதுவதற்கோ அல்லது இண்டர்வியூவை சரியாக கையாள்வதற்கோ அவர்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கிறது.

    ஒருசிலர் மேடையில் ஏறி பேசுவதற்கே பயப்படுவார்கள். ஏனென்றால் ஒருவித பயத்துடனேயே காணப்படுவார்கள். இவர்கள் இந்த உத்திரபோதி முத்திரையை தொடர்ந்து செய்துகொண்டு வரும் போது மேடைபேச்சில் சிறந்துவிளங்குவார்கள்.

    ஒரு சிலர் காரணமே இல்லாமல் எல்லாவற்றுக்கும் பயந்துகொண்டே இருப்பார்கள். அவர்களுக்கும் இந்த உத்திரபோதி முத்திரை ஒரு சிறந்த தீர்வினை அளிக்கிறது. இதுகூடவே நாம் தியானமும் செய்து வந்தால் மிகவும் நல்லது.

    இந்த முத்திரை தொடர்ந்து செய்யும் போது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து பகுதிகளிலும் உள்ள செல்களை புதுப்பித்து நம் மூளையை புத்துணர்ச்சி அடைய வைக்கிறது. நம் மனதில் உள்ள பிரச்சினைகளை சுத்தப்படுத்தி நம்முடைய மூளைக்கு தெளிவாக முடிவு எடுக்கக்கூடிய சக்தியை கொடுக்கிறது.

    ×