என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அக்கார அடிசில்"
- அவளோடு செழிப்பினை நல்கும் செல்வங்கள் யாவும் தோன்றின.
- முன் வலக்கரம் அபயம் காட்டியும், முன் இடக்கரம் அமுத கலசத்தினை தாங்கியும் காட்சியளிக்கிறாள்.
ஒரு சமயம் சுரர் அசுரர்கள் யாவரும் பாற்கடலைக்க டைந்தபோது, அதிலிருந்து மகாலட்சுமி தோன்றினாள்.
அவளோடு செழிப்பினை நல்கும் செல்வங்கள் யாவும் தோன்றின.
அந்தச் செல்வங்களோடு உடனாக வந்து லட்சுமிதேவியே, ஐஸ்வர்ய மகாலட்சுமி எனப் போற்றப்பட்டாள்.
இவளை கன்யாலட்சுமி என்று அழைப்பதும் உண்டு.
பாற்கடலின் மேற்பகுதியில் ஐராவதம் படுத்த நிலையில், அதன் மீது உலகத்தாயான இவள், தன் பின் இரு கரங்களில் தாமரைகளைக் கொண்டும்,
முன் வலக்கரம் அபயம் காட்டியும், முன் இடக்கரம் அமுத கலசத்தினை தாங்கியும் காட்சியளிக்கிறாள்.
பாதங்களில் தேவர்கள அர்ச்சித்த பொற்காசுகளும் நறுமலர்களும் குவிந்துள்ளன.
ஐஸ்வர்ய லட்சுமியின் பின்புறம் விரும்பியதை கொடுக்கும் கற்பக விருட்சம், இவளின் செல்வத்தை காவல் புரியும் விநதிய வாசினி எனும் துர்கை, குளிர்ந்த இனபம் நல்கும் சந்திரன் மற்றும் மணமாலையை ஏந்திய தேவப் பணிப் பெண்ணான அப்சரஸ் நிற்கின்றாள்.
இந்த மணமாலையை சூட்டித்தான் லட்சுமி பின்னாளில் விஷ்ணுவை மணந்தாள்.
பெண்களுக்கு விரைவில் திருமணம் நிறைவேற இவளே, தனது பார்வையால் அனுகிரக்கிறாள்.
இவளின் இடப்பக்கத்தில் நோய்களைப் போக்குத் தன்வந்தரிரி, தெய்விகப் பசுவான காமதேனு, வலப்புறத்தே நினைத்த மாத்திரத்தில் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்லும் உச்சைச்வரஸ் எனும் தெய்விக குதிரை ஆகியவை விளங்குகின்றன.
இவளின் திருவடியை வழிபடுவோர், விரைந்து செயல்படும் ஆற்றல் உறுதி பெறலாம்.
- இவளை வழிபட்டால் முயற்சி தானாகவே வரும். வீரம் வரும். வீரத்தோடு விவேகமும் வரும்.
- நைவேத்யம் காய்ச்சிய பசும்பால் மற்றும் அக்கார அடிசில்.
கோலாசுரனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடியவள் வீரலட்சுமி.
இவள், சிம்மத்தின் மீது ஆரோகணித்து வில், வாள், அம்பு, கேடயம் ஏந்தி வருபவள் என்றும் நான்கு கரத்துடன் விளங்குபவள் என்றும் ஒரு தியானம் கூறுகிறது.
வீரத்தால் விளைவது வெற்றியாகும்.
வெற்றியை நல்கும் வீரலட்சுமி, வெற்றித் திருமகள், ஜெயலட்சுமி எனப்படுகிறாள்.
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஈம் ஓம் க்ரோம் ப்ரோம் க்ரௌம் ஜ்ரௌம் ச்ரௌம் ஜ்ரௌம் ஸ்வாஹா என்று கூறி
புஷ்பங்களை திருவிளக்கின் பாதத்தில் போட்டு பூஜிக்க வேண்டும்.
அல்லது லலிதா திரிசதீ நாமா வளியில் 61 முதல் 80 வரையிலான நாமாளவளிகளைச் சொல்லி
குங்குமத்தினாலோ, சிவப்பு புஷ்பங்களாலோ, மல்லிகையாலோ அர்ச்சனை செய்யலாம்.
நைவேத்யம் காய்ச்சிய பசும்பால் மற்றும் அக்கார அடிசில்.
வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, தை மாத மகா சங்கராந்தி, திருவோண நட்சத்திரம்,
நவராத்திரி காலங்களில் விசேஷமாக பூஜித்தல் நன்று.
இவளை வழிபட்டால் முயற்சி தானாகவே வரும். வீரம் வரும். வீரத்தோடு விவேகமும் வரும்.
பெருவீரர்களும், இவளை உபாசிக்கும் வீரரிடம் சரணடைவர். நீதிமன்ற வழக்கிலும் வெறறியடையச் செய்பவள் இவளே.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்