என் மலர்
நீங்கள் தேடியது "தீபவாளி"
- சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, முக்கிய வழித் தடங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- தீபாவளியை முன்னிட்டு, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை:
தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தென் மாவட்ட விரைவு ரெயில்களில் விற்று தீர்ந்துவிட்டன. குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, மதுரை செங்கோட்டை ஆகிய விரைவு ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் 200-ஐ தாண்டியுள்ளது. எனவே தீபாவளியை முன்னிட்டு, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, முக்கிய வழித் தடங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, நெல்லை, கன்னியாகுமரி, பாண்டியன், அனந்தபுரி, முத்துநகர் ஆகிய விரைவு ரெயில்களில் தலா 2 முன்பதிவு பெட்டிகளை இணைத்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.