என் மலர்
நீங்கள் தேடியது "மாங்காடு காமாட்சி"
- கருவறை நடுவே ஸ்ரீசக்கரம் உள்ளது.
- கீழ் இடக்கரம் மோதகத்தைப் பற்றியுள்ளது.
தொண்டை நாட்டின் புகழ் பெற்ற அம்மன் ஆலயங்களில் மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் புகழ் பெற்றது.
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலைப் போன்றே மாங்காடு அம்மன் கோவிலும் சமயச் சிறப்பும் கலைச்சிறப்பும் பெற்றது.
இயற்கையான சூழலில் மக்கள் குடியிருப்புகள் உள்ள பகுதியில் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது.
சோழர் காலத்தில் எழுப்பப்பட்ட இக்கோவில் விஜய நகர காலத்தில் முழுமையான திருப்பணிப் பெற்று விரிவு படுத்தப்பட்டுள்ளது.
இக்கோவில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முகமண்டபம், முகப்பு மண்டபம், முதல் திருச்சுற்று பிரகாரம், இரண்டாம் திருச்சுற்று கோபுர வாயில் போன்ற பல்வேறு பகுதிகளைப் பாங்குறப் பெற்றுத் திகழ்கிறது.
கோவில் கருவறை சதுர வடிவுடையது. கருவறை சுவரை ஒட்டி அம்மன் வடிவம் வழிபாட்டில் உள்ளது.
கருவறை நடுவே ஸ்ரீசக்கரம் உள்ளது.
கருவறை முன் அர்த்த மண்டபம் அமைந்துள்ளது.
இது தூண்கள் எதுவுமின்றி சதுரவடிவில் எளிமையாக காணப்படுகிறது.
அம்மன் கோவில் கருவறை மற்றும் அர்த்த மண்டப புறச்சுவர்களில் பஞ்ச கோஷ்டங்கள் அமைந்துள்ளன.
இக்கோஷ்டங்களில் மூன்று மாடங்களில் இறைவடிவங்கள் அமைக்கபட வில்லை.
பொதுவாக சக்திகளின் வடிவங்கள் அமைக்கப் படுவதுண்டு.
இங்கு அர்த்த மண்டப கோஷ்டம் ஒன்றில் இடம்புரி விநாயகரின் சிற்பவடிவம் ஒன்று அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறது.
இதன் மேற்கரங்கள் அங்குசத்தையும், பாசத்தையும் பற்றியுள்ளது.
கீழ்வலக்கரம் தந்தத்தை கடக முத்திரையில் பிடித்துள்ளது.
கீழ் இடக்கரம் மோதகத்தைப் பற்றியுள்ளது.
மற்றொரு கோஷ்டத்தில் காளியின் வடிவம் வழிபாட்டில் உள்ளது.
கருவறையையும் அர்த்த மண்டபத்தையும் சுற்றி வலம்வர திருச்சுற்று பாதை உள்ளது.
திருச்சுற்று பாதையைச் சுற்றிலும் உருளை வடிவிலான கல்தூண்கள் அலங்கரிக்கின்றன.
இத்தூண்களின் மேல் பகுதி வெட்டுப் போதிகையுடன் உள்ளது.
இந்த திருச்சுற்றை அலங்கரிக்கும் பகுதிகள் இடைச்சோழர் காலத்தவை.
கன்னியாகுமரியில் அம்மன் கோவில் திருச்சுற்றுத் தூண்களை ஒத்த அமைப்பில், இவை காணப்படுகின்றன.
- சுவரைச் சுற்றிலும் அழகிய அரைத்தூண்கள் அலங்கரிக்கின்றன.
- சிகரகத்தின் மேல் 5 ஸ்தூபிகள் அமைந்து காணப்படுகின்றன.
இது அதிஸ்டானம், சுவர், பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி என்னும் ஆறு(6) அங்கங்களை உடையதாக அமைந்துள்ளது.
அதிட்டானம் என்னும் அடிப்பகுதி உபானம் ஜகதி, குமுதம், கண்டம், பட்டிகை, வேதிகை என்னும் ஆறு உறுப்புகளை உடையது.
அதிட்டானத்தைச் சுற்றிலும் விஜயநகரக் கால கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
அதிட்டானத்தின் மேல் அம்மன் கோவில் சுவர் பகுதி எழுப்பப்பட்டுள்ளது.
சுவரைச் சுற்றிலும் அழகிய அரைத்தூண்கள் அலங்கரிக்கின்றன.
கருவறைச் சுவரில் தெற்கு, மேற்கு வடக்கு ஆகிய திசைகளில் தேவகோஷ்ட மாடங்கள் அலங்கரிக்கின்றன.
மாடங்களின் பக்கங்களில் அரைத் தூண்களும், மேற்புறம், கூரை, கிரீவம், சாலை வடிவுடைய சிகரம் ஆகிய பகுதிகளுடன் கோஷ்ட மாடங்கள் காணப்படுகின்றன.
சுவரின் பக்கங்களில் உள்ள அகாரை என்னும் பகுதியில் ஒற்றைக் கால் பஞ்சரங்கள் அலங்கரிக்கின்றன.
சுவரின் மேல் கூரை என்னும் பிரஸ்தரம் அமைந்துள்ளது.
இது எழுதகம், கபோதகம், வியாளம் என்னும் மூன்று உறுப்புகளைப் பெற்றுத் திகழ்கிறது.
கூரை மேல் விமானத்தளம் அமைந்துள்ளது.
இத்தளங்கள் கர்ணக்கூடு, சாலை, பஞ்சரம், என்னும் உறுப்புகளுடன் மாறி மாறி அலங்கரிக்கின்றன.
தளங்களைச் சுற்றிலும் அழகிய சிற்ப வடிவங்கள் கதை உருவங்களாகக் காணப்படுகின்றன.
விமான கிரீவம் செவ்வக வடிவுடையது.
கிரீவத்தின் மேல் சாலை வடிவுடைய சிகரம் அலங்கரிக்கின்றது.
சிகரங்களின் பக்கங்களில் மகாநாசிகள் அலங்கரிக்கின்றன.
சிகரகத்தின் மேல் 5 ஸ்தூபிகள் அமைந்து காணப்படுகின்றன.
இவ்விதம் அம்மன் கோவில் விமானம் அதிட்டானத்திலிருந்து பிரஸ்தனம் வரை கருங்கல் திருப்பணியாக அமைந்துள்ளது.
அதன் மேல் உள்ள தளங்களும், கிரீவம் மற்றும் சிகரப்பகுதிகள் செங்கல்லும் சுதையும் கொண்டு எழுப்பப்பட்டுள்ளது.
விமானம் சுமார் 30 அடிக்கும் மேல் உயரம் உடையது. கி.பி. 15,16 ஆம் நூற்றாண்டுகளில் இவ்விமானம் எழுப்பப்பட்டுள்ளது.
- பிரகாரத்தின் கீழ் திசையிலும் கோபுர வாயிலைக் காணலாம்.
- இக்கோவில் மகா மண்டபத்தை எட்டுக் கல்தூண்கள் அலங்கரிக்கின்றன.
இக்கோவில் மகா மண்டபத்தை எட்டுக் கல்தூண்கள் அலங்கரிக்கின்றன.
இத்தூண்களில் மயில் வாகனம், கொடிப்பெண், குந்துச்சிம்மன், சீரும்யாளி, யானை, யானை மீது சிம்மம் சண்டை செய்யும் காட்சி, தாமரை மலர் ஏந்தி நிற்கும் சூரியன், அழகிய அன்னம் ஆகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இம்மண்டபத் தூண்கள் கீழும் மேலும் நடுவிலும் சதுரமாக அமைந்து இடைப்பகுதி 16 பட்டை வடிவில் செதுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு முக மண்டபத்தூண்களும், பதினாறு (16) பட்டைகளுடன் அலங்கரிக்கின்றன.
இரண்டாம் திருச்சுற்று மிகப்பெரிய அளவில் அண்மைக்காலத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இப்பிரகாரத்தின் வடதிசை வாயிலில் பெரிய கோபுரம் உயர்ந்த நிலையில் ஏழு நிலைகளை உடைய கோபுரமாக அமைந்து காட்சி அளிக்கிறது.
பிரகாரத்தின் கீழ் திசையிலும் கோபுர வாயிலைக் காணலாம்.
- அம்மன் இருகரங்களுடன் காட்டப்பட்டுள்ளாள்.
- மகா மண்டபத்தின் தென் திசையில் இச்சன்னதி அமைந்துள்ளது.
மகா மண்டபத்தின் தென் திசையில் இச்சன்னதி அமைந்துள்ளது.
இதன் நடுவே பத்ரபீடத்தின் மீது பஞ்ச அக்னிகள் சுவாலையுடன் தோன்ற, நடுவே உள்ள சுடரின் பின்புறம் காமாட்சி
ஒரு மா மரத்தின் முன்புறம் இடது காலை ஊன்றி வலது காலை மேல் தூக்கி வளைத்து ஒற்றைக்காலில் தவம் செய்யும் காட்சி செப்புத் திருமேனியாக காணப்படுகிறது.
அம்மன் இருகரங்களுடன் காட்டப்பட்டுள்ளாள்.
வலது கை உத்திராட்ச மாலையை சின் முத்திரையில் பற்றிய நிலையில் உச்சித் தலைமீது காட்டப்பட்டுள்ளது.
இடது கரம் மார்புக்குக் குறுக்கே தியான கரமாக நீண்டுள்ளது.
கட்டை விரலும், சுட்டு விரலும் இணைந்து சின் முத்திரை காட்டும் நிலையிலும் ஞானக்கரங்களுடன் தவ நிலையில் தோன்றும் காமாட்சி ஆன உடையாளுடைய திருமேனிகள் காண்பதரிது.
ஆனால் இங்கு காமாட்சியின் தவக்காட்சி பஞ்சலோகங்களில் வார்க்கப்பட்டு வனப்போடு காட்சியளிக்கிறது.
அன்னை ஒற்றைக்காலில் நிற்கும் நிலை தியானத்தைச்சுட்டும் கரங்கள், அக்கமாலை ஏந்தி சின் முத்திரை காட்டும் கரம், முகப்பொலிவு, காமரூபினியாக காணப்படும்.
கண்களின் கனிவு, யாவும் காண்போரை வியக்க வைக்கிறது. சமய வாதிகளைச் சிந்திக்க வைக்கிறது.
பாமர மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது.
ஆன்மீக வாதிகளின் கவனத்தை ஈர்க்கிறது. இச்செப்பு வடிவம் கி.பி. 14,15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.
- காமாட்சி என்றால் கருணையும் அன்பும் நிறைந்தவள் என்று அர்த்தம்.
- கடுந்தவம் இருந்து ஈஸ்வரனை அடைந்தவள் காமாட்சி அம்மன்.
தெய்வங்கள்கூட மிக்க வைராக்கியத்துடன், தாங்கள் நினைத்ததைச் சாதிக்கின்றனர்.
ஊண், உணவு, உறக்கம் இழந்து, தவமாய் தவமிருந்து தாங்கள் அடைய வேண்டியதை அடைந்திருக்கின்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன.
இதற்கு உதாரணமாய்த் திகழும் தெய்வம் மாங்காடு காமாட்சி அம்மன்!
காமாட்சி என்றால் கருணையும் அன்பும் நிறைந்தவள் என்று அர்த்தம்.
கடுந்தவம் இருந்து ஈஸ்வரனை அடைந்தவள் காமாட்சி அம்மன்.
நினைத்ததைச் சாதித்துப் பெற்றாள் இந்த அம்மன்.
- ஸ்ரீ சக்ரத்திற்குப் பின் பஞ்சலோக காமாட்சி காட்சி கொடுக்கிறாள்.
- பல இடங்களில் அனுமனின் திருவுருவங்கள் உள்ளன.
மாங்காடு தலத்தில் கோவிலிலின் கோபுர வாசலைக் கடந்து, உள்ளே நுழைந்ததும் இடது பக்கம் வரசித்தி விநாயகர் சந்நிதி உள்ளது.
வினைதீர்க்கும் விநாயகரை வணங்கி விட்டு உள்ளே சென்றால் முருகக் கடவுளையும், ஆதிசங்கரரையும் வணங்கலாம்.
சூரியன், பைரவர், மேலும் ஒரு விநாயகரைத் தரிசித்தபின் துவார பாலகர் நின்றிருக்கும் வழியாகச் சென்றால் சபா மண்டபத்தை அடையலாம்.
தவம் செய்யும் காமாட்சி அன்னையின் சந்நிதி தனியாக உள்ளது.
பஞ்சாக்னியில் காமாட்சி அம்மன் நிற்கும் கோலம் தனிச் சிறப்புடையது.
உள்ளே கருவறையில் ஸ்ரீ சக்கரம் உள்ளது.
ஸ்ரீ சக்ரத்திற்குப் பின் பஞ்சலோக காமாட்சி காட்சி கொடுக்கிறாள்.
ஸ்ரீ சக்கரம் கூர்ம (ஆமை) ஆசனத்தில் அமையப் பெற்றுள்ளது.
கருவறைக்குள் தரிசனம் முடிந்தபிறகு வெளிப் பிராகாரச் சுற்றில் கணபதியையும் சண்டியையும் தரிசனம் செய்யலாம்.
பல இடங்களில் அனுமனின் திருவுருவங்கள் உள்ளன.
- இங்கே அம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் திருமணத் தடைகள் நீங்கும்
- கல்வியில் முதன்மை, தொழில் விருத்தி மற்றும் செல்வ சுக போகமும் கிடைக்கும்.
நவ கன்னிகைகள் சந்நிதியும் மனதிற்கு அமைதியைத் தருகின்றது.
அம்மன் தவமிருக்க ஆரம்பிக்கும் பொழுது, தன் தவத்திற்குக் காவலாக எட்டு கன்னிகைகளுக்கு காவல் பணியைக் கொடுத்தாள்.
அம்மனோடு சேர்த்து ஒன்பது கன்னிகைகளாக கோவிலிலில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
மாங்காடு காமாட்சி அம்மனின் கோவில் உள் வடிவமைப்பு சுமார் 4,500 சதுர அடி பரப்பளவு உள்ளதாகும்.
நம் துன்பங்கள் நீங்குவதற்கு மாங்காடு அம்மன் திருவருள் துணைபுரியும்.
தடைகள் மற்றும் தீமைகளை நீக்கி நலம் நல்குவாள் காமாட்சி அன்னை.
எதிலும் வெற்றி அடைய வேண்டுமெனில் காமாட்சி அம்மனின் கருணையை மாங்காடு சென்று பெற்றுக் கொள்ளலாம்.
சிவன், விஷ்ணு, பிரம்மன், எமன், இந்திரன் முதலிலிய தேவர்களின் சக்திகளைத் தன்னுள் அடக்கி இருப்பவள் மாங்காடு காமாட்சி.
இங்கே அம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் திருமணத் தடைகள் நீங்கும்.
கல்வியில் முதன்மை, தொழில் விருத்தி மற்றும் செல்வ சுக போகமும் கிடைக்கும்.
உடல்ரீதி யான உபாதைகளுக்கும் காமாட்சி அம்மனை தரிசித்து வேண்டிக் கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும்.
மாங்காடு அம்மன் கோவிலிலில், எலுமிச்சம் பழ வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது மட்டு மல்ல; தங்கள் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்கிற அளவற்ற, அசைக்க முடியாத நம்பிக்கையூட்டுவதுமாகும்.
இந்த பூஜை முறையில் எலுமிச்சம் பழத்தை அம்மனாக மனதில் பாவித்து வழிபடுதல் விசேஷம் ஆகும்.
- ஆடிப்பூரம் தினத்தன்று 1008 கலச அபிஷேகம் நடைபெறும்.
- நவராத்திரி 9 நாட்களும் அம்மன் வெவ்வேறு விதமாக காட்சித் தருவாள்.
குழந்தை பேறு, வேலை வாய்ப்பு போன்றவற்றை தரும் அற்புதமான தலமாகவும் மாங்காடு தலம் திகழ்கிறது.
திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமைகளில் பகல் 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.
வெள்ளி மற்றும் பவுர்ணமியில் ஊஞ்சல் சேவை நடக்கிறது.
நவராத்திரி 9 நாட்களும் அம்மன் வெவ்வேறு விதமாக காட்சித் தருவாள்.
இத்தலத்தில் எல்லா மாதமும் திருவிழாக்கள் நடந்த வண்ணம் உள்ளது.
பவுர்ணமி தோறும் 9 கலசங்களில் 9 சக்திகளை ஆவாசனம் செய்து நடத்தப்படும் நவகலச ஹோமமும், புஷ்பாஞ்சலியும் மிகவும் பிரசித்தம்.
தை மாதம் முதல் ஆடி மாதம் வரை வெள்ளிக் கிழமைகளில் 108 கலச அபிஷேகம் நடைபெறும்.
ஆடிப்பூரம் தினத்தன்று 1008 கலச அபிஷேகம் நடைபெறும்.
இத்தலத்தில் ஆதியில் அம்மன் புற்றில் இருந்ததாக கருதப்படுகிறது.
புற்றுருவில் இருந்த அம்மன் மாடு மேய்க்கும் ஒரு சிறுவன் மூலம் வெளி உலகுக்கு தெரிய வந்ததாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.
கோவில் வட திசையில் திருக்குளம் உள்ளது.
பிரச்சினைகள் தீர, 18,27,108 என்ற எண்ணிக்கையில் எலுமிச்ச மாலை சாற்றி வழிபடலாம்.
புரட்டாசி பவுர்ணமியன்று நடக்கும் நிறைமணி தரிசனத்தில் கலந்து கொண்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
- “உரு ஏறத் திரு ஏறும்” என்பது ஆன்றோர் கண்ட அனுபவ உண்மை.
- ஆலயத்திற்கு வரும் மக்களின் கூட்டமும் பெருகிக் கொண்டே வந்தது.
1960ம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சாமிகள் மாங்காட்டிற்கு விஜயம் செய்தார்.
வேண்டுவார் வேண்டுவதை அருள வல்லதும், ஸ்ரீ ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதுமான மகா தெய்வீக சக்திகள் வாய்ந்த ஓர் அர்தமேரு அங்கு இருந்தும் கூட,
அதை தரிசித்துப் பயன்பெறுவதிலே மக்கள் அவ்வளவாக ஆர்வம் இல்லாதிருப்பதைக் கண்டு அவர்களது கருணை உள்ளம் வேதனை அடைந்தது.
தான் வழக்கமாகப் படுத்து உறங்கும் கட்டிலுக்கு அடியிலே ஒரு பெரும் புதையல் இருப்பதை அறியாமல்,
ஒருவன் நாள்தோறும் காலை முதல் மாலை வரையில் பிச்சை எடுத்தே வயிறு வளர்த்து வந்தானாம்.
அதே போல், அள்ள அள்ளக் குறையாத ஓர் அளப்பரும் திருவருட் களஞ்சியம் மாங்காட்டிலே இருந்தும்,
அதை அறியாமல் மக்கள் தம் குறைகளைப் போக்கிக் கொள்வதற்காக எங்கெங்கோ அலைந்து ஏங்கித் தவிக்கிறார்களே என்று
ஸ்ரீஅச்சய சாமிகள் இரக்கம் கொண்டார்கள்.
அங்குள்ள பரம்பரை அர்ச்சகராகிய மறைத்திரு ஏகாம்பர சிவாச்சாரியாரிடத்தில் இது பற்றி உரையாடினார்கள்.
காஞ்சி ஸ்ரீ சங்கராசார்ய சாமிகளின் ஆணையை சிரமேற்கொண்டு, அவர்கள் காட்டிய நெறியே நின்று,
ஆலயத்தினுள்ளே நாள் தோறும் தீவிரமான ஜபயோக சாதனையில் ஈடுபடலானார் ஸ்ரீஏகாம்பர சிவாச்சாரியர்.
அதன் பலனைத்தான் இன்று நாள் தோறும் ஆயிரக்கணக்கில் வந்து பெருகி வழிகின்ற பக்தர்களின் கூட்டத்திலே நாம் பார்த்து மகிழ்கிறோம்.
"உரு ஏறத் திரு ஏறும்" என்பது ஆன்றோர் கண்ட அனுபவ உண்மை.
அந்த நியதிப்படியே, சிவாச்சார்யரின் ஜபயக்ஞம் ஏறஏற, ஆலயத்திற்கு வரும் மக்களின் கூட்டமும் பெருகிக் கொண்டே வந்தது.
கோவில் அதிகாரிகளால் எளிதில் சமாளிக்க முடியாத அளவுக்கு, இன்னமும் பெருகிக் கொண்டே வருகிறது.
- இந்த காமாட்சி பஞ்சலோகத்தால் ஆனதாகும்.
- ஆடிப்பூரம் அம்மனுக்கு உகந்த நாளாகும்.
ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சக்கரத்தின் காரணத்தால் அக்னியின் ஆவேசம் படிப்படியாகக் குறைந்து வந்தது.
இருந்த போதிலும் மக்கள் அம்மனை தரிசிக்கவும் ஆலயத்தில் பிரவேசிக்கவும் அஞ்சினர்.
அந்த அச்சத்திற்குக் காரணமாய் இருந்தது அங்கிருந்த தவக் காமாட்சி விக்ரகமேயாகும்.
இதனால் பல ஆண்டு காலம் அம்மன் சன்னிதானம் பிரசித்தியடையாமலேயே இருந்து வந்தது.
ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மிகவும் பிரபலமாகி பக்தர்கள் பலகோடி சென்று வருவதற்கும் காரணம் இருக்கின்றது.
ஆதிசங்கரர் வழி வந்த காஞ்சிப் பெரியவர்கள் தன் ஞானத்தால் மக்கள் அங்கு அதிகமாய் செல்லாததின் காரணத்தைக் கண்டு அதையறிந்து மாங்காடு சென்றார்.
தான் அறிந்ததை நடைமுறைப்படுத்தினார்.
அதாவது தவக் கோலத்தில் இருந்த காமாட்சியை மூலஸ்தானத்திலிருந்து எடுத்து அதை அக்கோவிலின் இடது புறத்தில் வைத்தார்.
பின்னர் மூலஸ்தானத்தில் ஓர்கையில் கிளியோடும் மறுகையில் கரும்போடும் கூடிய சாந்தமான காமாட்சியைப் பிரதிஷ்டை செய்தார்.
இதனால் மாங்காடு மூலஸ்தான அம்மன் "ஆதி காமாட்சி" என்று விளங்குகிறார்.
இந்த காமாட்சி பஞ்சலோகத்தால் ஆனதாகும்.
ஆடிப்பூரம் அம்மனுக்கு உகந்த நாளாகும்.
சித்ரா பவுர்ணமி, நவராத்திரி, ஆடிப்பூரம் போன்றவை மாங்காட்டில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
- இத்திருமேனி ஏறத்தாழ 15ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம்
- தபஸ்காமாட்சியின் இருபக்கமும் இரண்டு செப்புத் திருமேனிகள் உள்ளன.
காமாட்சி ஆலயத்தில் எல்லோருடைய கண்களையும் மனத்தையும் ஒருங்கே கவர்ந்திழுப்பது தபஸ் காமாட்சியின் செப்புத் திருமேனியாகும்.
பீடத்திலிருந்து ஏறத்தாழ மூன்றடிக்குமேல் உயர்ந்திருக்கும் இத்திருமேனி தமிழ்நாட்டின் சிற்பக் கலைக்கே ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
பஞ்சாக்கினியின் செந்நாச்சுடர் முடியின் மீது தனது இடக்கால் பெருவிரலை ஊன்றி நின்று கொண்டு, வலக் காலை முன்பக்கமாக வளைத்து உயர்த்தி,
மாலையை ஏந்திக் கொண்டு, இடக் கரத்தால் சின்முத்திரையுடன் மார்பைத் தீண்டிக்கொண்டு தியான யோக நிலையில் உள்ளம் நெடிது அழ,
அன்னை தவமியற்றும் அற்புதத்தை அழகோவியமாக காட்டுகிறது இந்தப் பஞ்சலோகத் திருமேனி.
இந்தக் கோலம் ஒரு சில ஆலயங்களில் தூண்களில் பொறிக்கப்பட்டிருந்தாலும், செப்புச் சிலை வடிவத்தில் இருப்பது இங்கு மட்டும்தான்.
இத்திருமேனி ஏறத்தாழ 15&ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.
தபஸ்காமாட்சியின் இருபக்கமும் இரண்டு செப்புத் திருமேனிகள் உள்ளன.
ஒன்று அன்னையின் ஏவல் கேட்டு நிற்கும் கிங்கரியின் திருவுருவம், மற்றொன்று கிராம தேவதை.
- அண்டினோரைக் காக்கின்ற காமாட்சி!
- கரும்போடு காட்சிதரும் காமாட்சி!
மாங்காட்டில் வாழ்பவளே காமாட்சி!
மகிமையுள்ள தெய்வம் நீயே காமாட்சி!
பஞ்சாக்நி மத்தியிலே காமாட்சி!
பரமனுக்குத் தவமிருந்த காமாட்சி!
காஞ்சியிலே கோயில்கொண்ட காமாட்சி!
கல்யாணக் கோலம்பூண்டாய் காமாட்சி!
சங்கரரும் பூஜை செய்த காமாட்சி!
சக்கரத்தில் உறைந்திட்ட காமாட்சி!
அர்த்தமேரு அலங்கரிக்கும் காமாட்சி!
அண்டினோரைக் காக்கின்ற காமாட்சி!
காஞ்சிமுனி சேவிக்கும் காமாட்சி!
கண்கண்ட தெய்வமம்மா காமாட்சி!
பஞ்சலோக வடிவினியே காமாட்சி!
பக்தர் துயர் தீர்த்திடுவாய் காமாட்சி!
ஆடிப்பூர தினத்தினிலே காமாட்சி!
ஆனந்தமாய் வீற்றிருப்பாய் காமாட்சி!
பங்குனிநல் உத்திரத்தில் காமாட்சி!
பரமனை நீ மணங்கொண்டாய் காமாட்சி!
கரும்போடு காட்சிதரும் காமாட்சி!
கருணையுள்ள தெய்வம் நீயே காமாட்சி!
கிளியோடு காட்சிதரும் காமாட்சி!
கிருபை நீயும் செய்திடுவாய் காமாட்சி!
சாந்தமாக காட்சி தரும் காமாட்சி!
சந்தானம் தந்திடுவாய் காமாட்சி!
சூதவனம் கோவில் கொண்ட காமாட்சி!
சூதுகளை அகற்றிடுவாய் காமாட்சி!
இடப்புறத்தில் அமர்ந்திட்ட காமாட்சி!
இன்பமெல்லாம் தந்திடுவாய் காமாட்சி!
ஆறுவாரப் பூஜை ஏற்பாய் காமாட்சி!
ஆதிகாமாட்சியும் நீயே காமாட்சி!
முதல்வாரப் பூஜையிலே காமாட்சி!
நம் குறைகள் அறிந்திடுவாள் காமாட்சி!
இரண்டாம் வாரப் பூஜையிலே காமாட்சி!
இன்னல்களைப் போக்கிடுவாள் காமாட்சி!
மூன்றாம் வாரப் பூஜையிலே காமாட்சி!
மூன்றுவரம் தந்திடுவாள் காமாட்சி!
நான்காம் வாரப் பூஜையிலே காமாட்சி!
நலன்கள் பல தந்திடுவாள் காமாட்சி!
ஐந்தாம் வாரப் பூஜையிலே காமாட்சி!
ஐயங்களைப் போக்கிடுவாள் காமாட்சி!
ஆறாம்வாரப் பூஜையிலே காமாட்சி!
நினைத்ததெல்லாம் நடத்தி வைப்பாள் காமாட்சி!
மாவடியில் வசித்தவளே காமாட்சி!
மனக்குறைகள் தீர்த்திடுவாள் காமாட்சி!
தாம்பூலம் ஏற்றிடுவாள் காமாட்சி!
தாயாகக் காத்திடுவாள் காமாட்சி!
கற்பூரம் ஏற்றிடுவேன் காமாட்சி!
கலிதெய்வம் நீதானே காமாட்சி!
புஷ்பமாலை ஏற்றிடுவாள் காமாட்சி!
புண்ணியங்கள் தந்திடுவாள் காமாட்சி!
காய்ச்சிட்ட பாலுடனே காமாட்சி!
கற்கண்டும் ஏற்றிடுவாள் காமாட்சி!
ஏலக்காய் தேனுடனே காமாட்சி!
ஏழைகளின் துயர் தீர்ப்பாய் காமாட்சி!
எலுமிச்சம் பழம் ஏற்பாள் காமாட்சி!
எம் குறைகள் தீர்த்திடுவாள் காமாட்சி!
மாலையாக காட்சிதரும் காமாட்சி!
பாசமுடன் காத்திடுவாள் காமாட்சி!
மங்களமாய் காட்சி தரும் காமாட்சி!
மங்களமாய் வாழவைப்பாள் காமாட்சி!
உத்யோகம் தந்திடுவாள் காமாட்சி!
உன்னடியே சரணமம்மா காமாட்சி!
அன்னை உனை வேண்டி நின்றேன் காமாட்சி!
ஆதரிப்பாய் என்னையும் நீ காமாட்சி!
மாங்கல்யம் தந்திடுவாள் காமாட்சி!
மக்களையும் காத்திடுவாள் காமாட்சி!
மணாளனைத் தந்திடுவாள் காமாட்சி!
மழலைகளும் தந்திடுவாள் காமாட்சி!
தூளிகளை ஏற்றிடுவாள் காமாட்சி!
துன்பங்களைத் துடைத்திடுவாள் காமாட்சி!
வெற்றிகளைத் தந்திடுவாள் காமாட்சி!
வேதனைகள் போக்கிடுவாள் காமாட்சி!
வேழமுகம் நாயகன் தாய் காமாட்சி!
வேல்முருகன் அன்னையும் நீ காமாட்சி!
குருநாதர் காட்டிட்ட காமாட்சி!
குவலயத்தோர் கொண்டாடும் காமாட்சி!
அகிலாண்ட நாயகியே காமாட்சி!
அன்பர் குறை தீர்த்திடுவாள் காமாட்சி!
ஆவின்பால் குடித்தவளே காமாட்சி!
ஆனந்தம் தந்திடுவாள் காமாட்சி!
சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன் காமாட்சி!
சீக்கிரமே அருள்தருவாய் காமாட்சி!
கெஞ்சுகிறேன் உன்னையம்மா காமாட்சி!
கீர்த்தியுடன் வாழ வைப்பாய் காமாட்சி!
கரம்கூப்பி வணங்குகிறேன் காமாட்சி!
வரம் அனைத்தும் தந்திடுவாய் காமாட்சி!
நினைத்ததெல்லாம் நடத்தி வைப்பாள் காமாட்சி!
நீதிகளைத் தந்திடுவாள் காமாட்சி!
வறுமைகளை ஓட்டிடுவாள் காமாட்சி!
வாழ்வு தந்து காத்திடுவாள் காமாட்சி!
அர்ச்சனைகள் ஏற்றிடுவாள் காமாட்சி!
அகத்தினிலே குடியிருப்பாள் காமாட்சி!
குழந்தை நானும் மனம் மகிழ காமாட்சி!
குமரனுடன் காட்சி தாராய் காமாட்சி!
அன்னை தந்தை தெய்வம் நீயே காமாட்சி!
அருள் வடிவாம் குருநீயே காமாட்சி!
மடிசாரில் காட்சி தரும் காமாட்சி!
மன வினைகள் தீர்த்திடுவாள் காமாட்சி!
கடும் தபசு புரிந்திட்ட காமாட்சி!
கவலைகளைக் களைந்திடுவாள் காமாட்சி!
காமகோடி ஈஸ்வரியே காமாட்சி!
காத்திருந்து வரமளிப்பாய் காமாட்சி!
காஞ்சி முனி வேண்டிநிற்கும் காமாட்சி!
காலமெல்லாம் காத்தருள்வாய் காமாட்சி!