என் மலர்
நீங்கள் தேடியது "பால் வான் மீக்கெரென்"
- உலகக் கோப்பை 2023 தொடர் அடுத்த வாரம் துவங்க இருக்கிறது.
- உலகக் கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்க இருப்பதை அடுத்து, ஒவ்வொரு அணியும் அதற்காக தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் நடைபெற இருக்கும் 2023 உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணியும் களம் காண்கிறது. இதற்காக நெதர்லாந்து அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு வலை பயிற்சியில் ஈடுபட்ட நெதர்லாந்து வீரர் பால் வான் மீக்கெரென், பயிற்சிக்கு பிறகு நெட்சில் பந்து வீசிய இளம் வீரருக்கு தனது காலணிகளை கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.