என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன்மதன்"

    • சிவபெருமான் மீது தனது மலர்க் கணைகளை ஏவி அவரது தியானத்தைக் கலைத்தான்.
    • இப்படி மன்மதன் உயிர்ப்பெற்று எழுந்தது பங்குனி உத்திர திருநாளன்று தான்.

    சிருஷ்டித் தொழிலுக்கு ஆக்கப்பூர்வ மாக உதவுபவன் காமன் ஆகிய மன்மதன்.

    இவனது மனைவி ரதி. ஒரு சமயம் மன்மதன் தேவர்கள் வேண்டுகோளின்படி தன் மனைவியைப் பிரிந்து வந்து தியானத்தில் இருந்த

    சிவபெருமான் மீது தனது மலர்க் கணைகளை ஏவி அவரது தியானத்தைக் கலைத்தான்.

    இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் தம் நெற்றிக் கண் அக்னியால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார்.

    இதையே காமதகனம் என்பர்.

    தன் கணவனின் மரணத்தை அறிந்து வருந்திய ரதி ஓடோடி வந்து சிவபெருமானை வேண்டி, மன்மதனை உயிர்ப்பிக்க வேண்டினாள்.

    அவள் வேண்டுதலை ஏற்ற சிவபெருமானும் ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும் படியாக காமனை உயிர்ப் பெற்று எழச்செய்தார்.

    இப்படி மன்மதன் உயிர்ப்பெற்று எழுந்தது பங்குனி உத்திர திருநாளன்று தான்.

    அன்று மன்மதன் ரதியை வழிபடுவோருக்கு சிவன் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    • மன்மதன் திரைப்படத்தில் சிம்பு இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
    • மன்மதன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். நடிப்பு மட்டுமின்றி திரைத்துறையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணி ரத்னம் கூட்டணியில் உருவாகி இருக்கும் தக் லைஃப் படத்தில் சிலம்பரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இதுதவிர மேலும், சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், நடிகர் சிலம்பரசன் வருகிற 3-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளை ஒட்டி, இவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற "மன்மதன்" திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 2004-ம் ஆண்டு வெளியான "மன்மதன்" திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தை எஸ்.கே. கிருஷ்ணகாந்த் தயாரித்து இருந்தார். இந்தப் படத்திற்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, அந்தோனி படத்தொகுப்பு செய்தார். கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பிறகு மன்மதன் திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • 2004 ஆம் ஆண்டு ஏ. ஜே முருகன் மற்றும் சிலம்பரசன் இயக்கிய மன்மதன் திரைப்படம் வெளியானது.
    • இப்படத்தில் சிம்பு இரு வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார்.

    2004 ஆம் ஆண்டு ஏ. ஜே முருகன் மற்றும் சிலம்பரசன் இயக்கிய மன்மதன் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் சிம்பு மற்றும் ஜோதிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொண்டார். படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் சிம்பு இரு வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார்.

    இவர்களுடன் கவுண்டமனி, சிந்து, துல் குல்கர்னி, சந்தானம், சத்யன் மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று 100 நாட்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு திரைப்படம் மீண்டும் நாளை {ஜனவரி 31} வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாமகமடைந்துள்ளனர். இவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படமும் நாளை மீண்டும் வெளியாகவுள்ளது.

    சிம்பு தற்பொழுது அஸ்வத் மாரிமுத்து இயக்கும் திரைப்படத்தில், தக் லைஃப் மற்றும் சில படங்களில் நடித்து வருகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×