என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கல்யாண வைபவம்"
- அடுத்த பிறவியில் உலகத்தவர்கள் வணங்கும் தெய்வீகத் தன்மையையும் அடையலாம்.
- ஒரு தம்பதியருக்கு வயிறு நிரம்ப உணவும், வேட்டி, புடவையும் கொடுக்க வேண்டும்.
பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து, முருகனை வேண்டினால், பிறவிப் பலனையும், நாற்பத்தெட்டு ஆண்டுகள் தொடர்ந்து இந்த விரதத்தை கடைபிடித்தால்,
அடுத்த பிறவியில் உலகத்தவர்கள் வணங்கும் தெய்வீகத் தன்மையையும் அடையலாம் எனப் புராணங்கள் கூறுகின்றன.
அதே நேரம் வருடம் முழுவதும் ஒழுக்கக் கேடாக இருந்து விட்டுப் பலன்கள் பெறும் நோக்கோடு
பங்குனி உத்திர விரதத்தை மட்டும் தொடர்ந்து இருப்பவர்களை சூரியன் சுட்டெரித்து விடுவான் என சூரிய புராணம் எச்சரிக்கிறது.
ஏனெனில் பாவங்களை சுட்டுப்பொசுக்கக்கூடிய உத்திர நட்சத்திரத்தின் அதிபதியான சூரியன்,
மார்கழி மாதம் துவங்கி புரட்டாசி மாதம் வரை கொஞ்சம் கொஞ்சமாக சக்தி பெற்று பங்குனியில் உச்சத்தை நோக்கிச் செல்கின்றான்.
முருகனுக்கு உகந்த இந்நாளில், சிவபெருமானையும் பார்வதி தேவியையும் திருமணக் கோலத்தில் நினைத்து தியானம் செய்து,
வீட்டிலோ அல்லது ஆலயத்திற்கு சென்றோ வழிபட்டு,
ஒரு தம்பதியருக்கு வயிறு நிரம்ப உணவும், உடுத்திக் கொள்ள வேட்டி, புடவையும் கொடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்து வந்தால் முருகப்பெருமாளின் அருளோடு சிவபெருமானின் அருளையும் பெறலாம்.
- இக்கோயிலின் தல விருட்சம் குராமரம். இந்த மரத்திற்கு ஒரு சிறப்பு உண்டு.
- அன்று தல விருட்சமான குரா மரம் பூக்கள் நிறைந்து எழில் பொங்கக் காட்சி தரும்.
சிதம்பரம்-சீர்காழி பேருந்து சாலையில் சிதம்பரத்திலிருந்து 5 கி.மீ ெதாலைவில் இருக்கிறது கொள்ளிடம்.
இத்தலத்தில் உள்ள புலீஸ்வரி அம்மன் மிகவும் பிரசித்தமானவள்.
இக்கோயிலின் தல விருட்சம் குராமரம். இந்த மரத்திற்கு ஒரு சிறப்பு உண்டு.
இக்கோயிலில் பங்குதி உத்திரத் திருவிழா நடக்கும் போது தான் அந்த அற்புதம் நிகழ்கிறது.
திருவிழாவின் முதல் நாள் இங்கு கொடியேற்றம் நடத்துவார்கள்.
அன்று தல விருட்சமான குரா மரம் பூக்கள் நிறைந்து எழில் பொங்கக் காட்சி தரும்.
திருவிழா நடக்கும் 10 நாட்களும் இம்மரத்தில் பூக்கள் மலர்ந்து மணம் பரப்பும்.
பதினோராம் நாள் திருவிழா கொண்டாட்டங்கள் நிறைவடைந்து கொடியினை இறக்குவார்கள்.
அன்றைய தினம் தலமரமான குராமரத்தில் இருந்து எல்லா மலர்களும் உதிர்ந்து பேசுகின்றன.
தெய்வத் திருவிழாவான பங்குனி உத்திரவிழாவில் நடக்கும் இந்த அற்புதம் கண்டவர்கள் மெய்சிலித்துப் போவது கண்கூடான உண்மை.
- ஆறுபடை வீடு கொண்ட முருகப்பெருமானை தரிசித்தால் அனைத்து நலன்களும் கைகூடப் பெறலாம்.
- இந்நாளில் தான் முருகன் தெய்வானை திருமணமும் நடந்தேறியது
வைகாசி விசாகம், தைப்பூசம் போன்றே கந்தக் கடவுளுக்கும் உகந்த திருநாளாக பங்குனி உத்திரம் திகழ்கிறது.
தெய்வத் திருமணங்கள் நடந்தேறிய இந்நாளில் தான் முருகன் தெய்வானை திருமணமும் நடந்தேறியது
மேலும் முருகப் பெருமானின் இச்சா சக்தியான வள்ளி அவதரித்த திருநாளும் இந்த பங்குனி உத்திர திருநாள் என கந்தபுராணம் பேசுகிறது.
திருமுருகன் மகிமைப் பெற்ற இந்நாளில் முருகன் திருத்தலங்கள் அனைத்தும் திருவிழா காண்கின்றன.
பங்குனிப் பெருவிழா காணும் பழனியில் பக்தர்கள் பல்வேறு வகையான காவடிகள் எடுத்து கந்தனை தரிசிப்பது வழக்கம்.
குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் பெறவும், திருமண வரம் பெறவும்,தோஷங்கள் நீங்கவும் பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்து
ஆறுபடை வீடு கொண்ட முருகப்பெருமானை தரிசித்தால் அனைத்து நலன்களும் கைகூடப் பெறலாம்.
- ஆண்டாள் நாச்சியார் திருவரங்கனைக் கணவனாக அடைந்த திருநாளும் பங்குனி உத்திர திருநாளே.
- இந்நாளில் தான் ஸ்ரீ ராமன் சீதாதேவி திருக்கல்யாணம் நடந்தது.
தெய்வ முகூர்த்த நாளாகக் கருதப்படும் இந்நாளில் தான் ஸ்ரீ ராமன் சீதாதேவி திருக்கல்யாணம் நடந்ததாக ராமாயணம் கூறுகிறது.
மேலும் ஸ்ரீ ரங்கநாதனையே மணாளனாக தன் மனத்தில் வரித்துக்கொண்ட
ஆண்டாள் நாச்சியார் திருவரங்கனைக் கணவனாக அடைந்த திருநாளும் பங்குனி உத்திர திருநாளே.
இறைச் சித்தப்படி திருமாலைப் பிரிந்து பூலோகம் வந்த திருமகள் வஞ்சுளவல்லி நாச்சியாராய்
அவதரித்த திருநாளும் பங்குனி உத்திர திருநாளே என்று நாச்சியார் கோயில் தலப்புராணம் பேசுகிறது.
எனவே சிறப்பு மிக்க இந்நாளில் வைணவத் தலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
- இத்திருக்கல்யாண வைபவத்தை காண்பதால் பெரும் பாக்கியம் கிடைக்கும்.
- இதன்மூலம் சைவத்தலங்களில் பங்குனி உத்திரம் பெறும் சிறப்பை நாம் உணர முடிகிறது.
சைவத் திருக்கோயில்களில் பங்குனி உத்திரத் திருநாள் பண்டைய காலந் தொட்டே கொண்டாடப்பட்டு வந்தது என்பதை புராணங்கள் வாயிலாக நாம் அறியலாம்.
சுந்தரேஸ்வரர் மீனாட்சியம்மையை ஒரு பங்குனி உத்திர திரு நாளில் தான் மணம் செய்தார் என புராணங்கள் பேசுகின்றன.
எனவே இந்நாளில் சிவாலயங்களில் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது மரபு.
இத்திருக்கல்யாண வைபவத்தை காண்பதால் பெரும் பாக்கியம் கிடைக்கும்.
இதை நாயன்மார்களின் வாழ்வின் மூலம் அறியலாம்.
இறைவனின் தோழராக போற்றப்படும் சுந்தரர் பங்குனி உத்திரநாளில் திருவாரூர் சென்று தியாகராஜரின் திருமண வைபவத்தை கண்டு தரிசிப்பது வழக்கம்.
சுந்தரமூர்த்தி நாயனர் தம் துணைவியார் பரவையாரை விட்டுப்பிரிந்து திருவொற்றியூரில் சங்கலியாரைத் திருமணம் செய்து கொண்ட காலத்தில் பங்குனி உத்திர விழாவன்று திருவாரூர் செல்ல முடியாத நிலையில்,
தன் தோழரான சிவபெருமானிடமே பங்குனி உத்திரத்தன்று தியாகராஜர் திருக்கல்யாணத்தை தரிசிக்க விரும்பும் தன் விருப்பதைச் சொல்லி பரவையாரிடம் தூது அனுப்பியதாக பெரிய புராணம் பேசுகிறது.
இவ்வரலாற்றில் இருந்து சைவத்தலங்களில் பங்குனி உத்திரம் பெறும் சிறப்பை நாம் உணர முடிகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்