search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவா விஷ்ணு"

    • 18 படிகள் ஏறி வந்ததும், முதலில் நாம் தரிசிக்க வேண்டியது இந்தக் கொடி மரத்தைதான்.
    • ஐயப்பனுக்காக நாம் விரதம் இருக்கிறோம் என்று நாம் நினைப்பதே தவறான அபிப்ராயம்.

    கொடி மரம்

    18 படிகளையும் கடந்தால், நம் எதிரே தென்படுவது கொடி மரம். பரசுராமர் காலத்தில் இங்கே கொடி மரம் கிடையாது.

    பிற்காலத்தில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது, பரசுராமரால்

    ஐயப்பன் அருகில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டு இருந்த குதுரை, கொடி மரத்தின் மேல் வைக்கப்பட்டது.

    18 படிகள் ஏறி வந்ததும், முதலில் நாம் தரிசிக்க வேண்டியது இந்தக் கொடி மரத்தைதான்.

    மூலஸ்தானமும் தவக்கோல தரிசனமும்

    ஐயப்பனுக்காக நாம் விரதம் இருக்கிறோம் என்று நாம் நினைப்பதே தவறான அபிப்ராயம்.

    மாறாக, ஐயப்பன்தான் நமக்காக சபரிமலையில் தவம் இருக்கிறார்.

    தனது மூன்று விரல்களை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரலைத் தொட்டுக் கொண்டு 'சின்முத்திரை' காட்டுகிறார்.

    'சித்' என்றால் 'அறிவு' எனப்பொருள். இந்த வார்த்தையே காலப்போக்கில் மருவி 'சின்' என மாறியது.

    எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான், இந்த 'சின்' முத்திரையாகும்.

    'சின்' முத்திரையுடன் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனைக் கண்குளிரத் தரிசிப்பது என்பது, பிறவிப் பயனை அடைந்த சந்தோஷத்தைத் தருகிறது.

    ஒவ்வொரு மாதமும் நடை சாத்தும்போது, ஹரிவராசனம் பாடிவிட்டு, கிலோ கணக்கில் பசுமையான திருநீற்றை ஐயப்பன் மேல் சாத்துவார்கள்.

    அத்துடன், ஐயப்பனின் சின் முத்திரையின் மேல் ஒரு ருத்திராட்ச மாலையைப் போடுவார்கள்.

    இதற்கு தவக்கோலம் என்று பெயர்.

    அப்போது, ஒரு விளக்கையும் ஏற்றி வைப்பார்கள்.

    அந்த விளக்கானது, மீண்டும் அடுத்த மாதம் நடை திறக்கப்படும் வரை எரிந்து கொண்டே இருக்கும் இந்த அதிசயம், தவறாமல் அரங்கேறுகிறது.

    கோவில் கதவு திறந்து, உலகத்தின் பார்வை அந்தக் கோவிலுக்குள் நுழைந்ததும், ஐயப்பனின் தவக்கோலம் கலைந்து விடுகிறது.

    அடுத்த நிமிடமே, அந்த விளக்கும் அணைந்து விடுகிறது.

    சின் முத்திரையின் மேல் போடப்பட்ட ருத்திராட்ச மாலையும் கை மாறி இருக்கும்.

    இந்த அதிசயத்தைக் காணக் கண்கோடி வேண்டும்.

    • ‘மலைக்கு செல்ல மாலை போடுவது என்பது சாதாரணமானது அல்ல.
    • நாம் எதை சாப்பிடுகிறோமோ அதைத்தான் ஐயப்பனும் சாப்பிடுகிறார்.

    ஐயப்ப மாலையின் முக்கியத்துவம் பற்றி நடிகர் நம்பியார் சுவாமிகள் ஒரு தடவை கூறியதாவது:-

    'மலைக்கு செல்ல மாலை போடுவது என்பது சாதாரணமானது அல்ல.

    ஓர் அரசருக்கு கிரீடம், முத்திரை மோதிரம் என்பவை எல்லாம் எப்படி தனி அடையாளமோ.,

    அதுபோல சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் அடையாளமே அவர்கள் அணியும் மாலைதான்.

    நாம் எப்போது மாலை போட்டுக் கொள்கிறோமோ, அப்போதே மாலையுடன் சேர்ந்து ஐயப்பனும் நம்மோட வந்து விடுகிறார்.

    'மாலை' என்ற வடிவில் நம்மோடு இருப்பவர் சாட்சாத அந்த ஐயப்பன்தான்.

    நாம் எதை சாப்பிடுகிறோமோ அதைத்தான் ஐயப்பனும் சாப்பிடுகிறார்.

    நம்மோடு நினைவில் நிறுத்திக் கொண்டால், நமக்கு எந்தக் கெட்ட எண்ணமும் வராது.

    தீய பழக்கங்கள் அடியோடு ஒழிந்து விடும்.

    அதேபோல முதல் முறை உபயோகித்த மாலையைத்தான் இறுதி வரை பயன்படுத்த வேண்டும்' என்பார் நம்பியார் சாமி.

    பழைய மாலை அறுந்துவிட்டால் கூட அதையே சரி செயது வைத்துக் கொள்ள வேண்டும் என்றார் நம்பியார்சாமி.

    • ஐயப்பனை வழிபடுபவர்கள் மேற்கொள்ள வேண்டிய விரதங்கள் மூன்றாகும்.
    • தண்ணீர் மட்டுமே பருகி முழு விரதம் இருத்தல் உத்தமானது.

    ஐயப்பனை வழிபடுபவர்கள் மேற்கொள்ள வேண்டிய விரதங்கள் மூன்றாகும்.

    அவை- புத வார விரதம், சனி வார விரதம், உத்திர நட்சத்திர விரதம்.

    இந்த விரதங்களை மேற்கொள்பவர்கள், ஏதேனும் ஒரு புதன்கிழமையன்றோ, சனிக்கிழமையன்றோ

    அல்லது ஒவ்வொரு மாதத்திலும் வரும் உத்திர நட்சத்திரத்தன்றோ விரதம் மேற்கொள்ள வேண்டும்.

    முதல் நாள் பகல் உணவோடு விரதத்தைத் தொடங்கி இரவு உணவை உண்ணாதிருக்க வேண்டும்.

    விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராடி, நித்ய கர்மாக்களை முடித்து,

    விதிமுறைப்படி ஸ்ரீமஹா சாஸ்தாவை வழிபாடு செய்தல் வேண்டும்.

    தண்ணீர் மட்டுமே பருகி முழு விரதம் இருத்தல் உத்தமானது.

    நாள் முழுவதும், பாராயணம், ஜபம், தியானம் ஆகியவற்றை மேற்கொண்டு,

    ஐயப்பனின் ஆலயத்துக்கும், சென்று வழிபட வேண்டும்.

    அதேபோல இரவு முழுவதும் கண்ணயராது ஐயனை தியானித்து, மறுநாள் அதிகாலையில் நீராடி,

    சாஸ்தாவை வழிபட்டு அவரின் அடியவருடன் கூடி உண்ண வேண்டும்.

    அன்றும் பகலில் உறங்காமல் இரவிலே உறங்குதல் வேண்டும்.

    • சபரிமலையின் பெரிய பாதையை ஏழு கோட்டைகளாக சொல்வது வழக்கம்.
    • ஒவ்வொரு கோட்டையையும் ஐயப்பனின் கணங்கள் காத்து வருகின்றன.

    சபரிமலையின் பெரிய பாதையை ஏழு கோட்டைகளாக சொல்வது வழக்கம்.

    ஒவ்வொரு கோட்டையையும் ஐயப்பனின் கணங்கள் காத்து வருகின்றன.

    முதல் கோட்டை -எருமேலி -வாபுரன்

    இரண்டாம் கோட்டை -காளைகெட்டி -நந்திகேஸ்வரன்

    மூன்றாம் கோட்டை -உடும்பாறை -ஸ்ரீபூதநாதன்

    நான்காம் கோட்டை - கரிமலை-பகவதி

    ஐந்தாம் கோட்டை -சபரி பீடம்-சபரி துர்கை

    ஆறாம் கோட்டை -சரங்குத்தி-அஸ்த்ர பைரவர்

    ஏழாம் கோட்டை -பதினெட்டாம்படி-கருப்பசுவாமி.

    • பதினெட்டாம் படி ஏறியதும் இரண்டு விசேஷங்களை நாம் தரசிக்க வேண்டும்.
    • அதன் பினனர் அந்த சிலையை உருக்கி, மணியாக வடிவமைத்தனர்.

    பதினெட்டாம் படி ஏறியதும் இரண்டு விசேஷங்களை நாம் தரசிக்க வேண்டும்.

    ஒன்று கொடி மரத்தில் அமைந்திருக்கும் குதிரை.

    மற்றொன்று 18ம் படிக்கும் இடைபுறம் உள்ள ஆலய மணி.

    ஆதியில் சபரிமலையில் பரசுராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பன் சிலை (பஞ்சலோக விக்கிரகம்), காலப் போக்கில் இயற்கைச் சீற்றத்தால் சற்று சேதமானது.

    1950ம் ஆண்டு அந்தச் சிலை மேலும் சேதமடைந்ததாக சொல்லப்படுகிறது.

    அதன் பினனர் அந்த சிலையை உருக்கி, மணியாக வடிவமைத்தனர்.

    18ம் படி இருக்கும் இடத்தில், வலம் இடம் என இருபுறமும் அங்கு மணிகள் இருக்கும்.

    அதில், இடப் பக்கமாக உள்ள மணிதான், ஆதிகாலத்தில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பனின் திருஉருவச்சிலை.

    • 18 மலை தேவதைகளை வழிபாடு செய்வதற்காகத்தான் படிபூஜையை நடத்துகிறார்கள்.

    18 மலை தேவதைகளை வழிபாடு செய்வதற்காகத்தான் படிபூஜையை நடத்துகிறார்கள்.

    அந்த பதினெட்டு மலைகளின் பெயர்கள் வருமாறு:

    1. தலைப்பாறைமலை

    2. காளகெட்டி மலை

    3. புதுச்சேரி மலை

    4. கரிமலை

    5. இஞ்சிப்பாறை மலை

    6. நிலக்கல்

    7. தேவர்மலை

    8. ஸ்ரீபாதமலை

    9. வட்டமலை

    10. சுந்தரமலை

    11. நாகமலை

    12. நீலிமலை

    13. சபரிமலை

    14. மயிலாடும் மலை

    15. மதங்க மலை

    16. சிற்றம்பல மலை

    17. கவுண்டன் மலை

    18. பொன்னம்பல மேடு (காந்தமலை)

    • 18 படிகளிலும் ஐயப்பன் 18 திருநாமங்களுடன் அமர்ந்திருப்பதாக ஒரு வரலாறு கூறுகிறது.
    • ஒன்பதாம் திருப்படி - சிவபாலன்

    18 படிகளிலும் ஐயப்பன் 18 திருநாமங்களுடன் அமர்ந்திருப்பதாக ஒரு வரலாறு கூறுகிறது.

    ஒன்றாம் திருப்படி- குளத்துப்புழை பாலகன்

    இரண்டாம் திருப்படி- ஆரியங்காவு ஐயப்பன்

    மூன்றாம் திருப்படி- எரிமேலி சாஸ்தா

    நான்காம் திருப்படி- அச்சங்கோயில் அரசன்

    ஐந்தாம் திருப்படி- ஐந்துமலை அதிபதி

    ஆறாம் திருப்படி- வீரமணிகண்டன்

    ஏழாம் திருப்படி- பொன்னம்பல ஜோதி

    எட்டாம் திருப்படி- மோகினி பாலன்

    ஒன்பதாம் திருப்படி- சிவபாலன்

    பத்தாம் திருப்படி- ஆனந்தமயன்

    பதினோராம் திருப்படி- இருமுடிப்பிரியன்

    பனிரெண்டாம் திருப்படி- பந்தளராஜ குமாரன்

    பதிமூன்றாம் திருப்படி- பம்பாவாசன்

    பதினான்காம் திருப்படி- வன்புலி வாகனன்

    பதினைந்தாம் திருப்படி- ஹரிஹரசுதன்

    பதினாறாம் திருப்படி- குருநாதன்

    பதினேழாம் திருப்படி- சபரிகிரி வாசன்

    பதினெட்டாம் திருப்படி- ஐயப்பன்

    • 18 படிகளும் 18 தெய்வங்களாக கருதப்படுகிறார்கள்.
    • ஒற்றைபடை வரிசையில் நவக்கிரகங்கள் உள்ளன.

    18 படிகளும் 18 தெய்வங்களாக கருதப்படுகிறார்கள். அவை முறையே:

    ஒன்றாம் திருப்படி- சூரியன்

    இரண்டாம் திருப்படி- சிவன்

    மூன்றாம் திருப்படி- சந்திரன்

    நான்காம் திருப்படி- பராசக்தி

    ஐந்தாம் திருப்படி- செவ்வாய்

    ஆறாம் திருப்படி- முருகன்

    ஏழாம் திருப்படி- புதன்

    எட்டாம் திருப்படி- விஷ்ணு

    ஒன்பதாம் திருப்படி- குரு

    பத்தாம் திருப்படி- பிரம்மா

    பதினோராம் திருப்படி- சுக்கிரன்

    பனிரெண்டாம் திருப்படி- லட்சுமி

    பதிமூன்றாம் திருப்படி- சனீஸ்வரர்

    பதினான்காம் திருப்படி- எமன்

    பதினைந்தாம் திருப்படி- ராகு

    பதினாறாம் திருப்படி- சரஸ்வதி

    பதினேழாம் திருப்படி- கேது

    பதினெட்டாம் திருப்படி- விநாயகர்

    இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சம் உள்ளது.

    அதாவது ஒற்றைபடை வரிசையில் நவக்கிரகங்களும், இரட்டை படை வரிசையில் தெய்வ குடும்பமும் இருப்பதாக ஐதீகம்.

    • படிபூஜை சபரிமலையில் சிறந்த முறையில் செய்யப்படுகிறது.
    • 18 படிகளும் வெள்ளி மற்றும் பித்தளை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

    படிபூஜை சபரிமலையில் சிறந்த முறையில் செய்யப்படுகிறது.

    18 படிகளை பூக்களாலும், விளக்குகளாலும் அலங்கரித்து அவற்றுக்கு கீழே 18ம்படி ஏறும் இடத்தில்

    பிரதான தந்திரி 18 வெள்ளி கலசங்களை வைத்து படிபூஜை செய்வார்.

    ஒவ்வொரு படியிலும் படி பூஜையும், மூர்த்தி பூஜையும் நடத்துவார்.

    பிறகு 18 படிகளுக்கும் கலசாபிஷேகம் நடைபெறும்.

    தேங்காயை இரண்டாக உடைத்து அந்த மூடியில் நெய்விளக்கு ஏற்றி தீபம் காண்பிப்பார்.

    18 படிகளும் வெள்ளி மற்றும் பித்தளை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

    நைவேத்தியம் நடைபெற்ற பிறகு பிரசன்ன பூஜை செய்வார்.

    பிறகு கற்பூர ஜோதி ஏற்றி தீபாராதனை காண்பிப்பார்.

    இதற்கு பிறகு பிரதான தந்திரியும், மேல்சாந்தியும் மற்றும் சில குறிப்பிட்ட பக்தர்களும், படியேறி செல்வார்கள்.

    பிறகு சன்னிதானத்தில் ஐயப்பனுக்கு அரவணப்பாயாசம் நைவேத்தியம் செய்து தீபம் காண்பிப்பார்கள்.

    • ஹரிஹர புத்ரனாகிய மணிகண்டனுக்கு ஐயப்பன் என்ற பெயரின் பின்னால், ஒரு வரலாறு கூறப்படுகிறது.
    • ”வழி தெரியாமல் நீங்கள் திணறாமல் இருக்க கருடன் உங்களுக்கு வழிகாட்டுவான்" என்று கூறி சென்றார்.

    ஹரிஹர புத்ரனாகிய மணிகண்டனுக்கு ஐயப்பன் என்ற பெயர் வந்ததன் காரணமாக ஒரு வரலாறு கூறப்படுகிறது.

    பந்தளராஜன் மகனாக வளர்ந்த மணிகண்டன், அவதார நோக்கம் முடித்து,

    பந்தளராஜனை விட்டுப் பிரிய வேண்டிய நேரம் வந்தது.

    அந்த சமயத்தில் கலங்கி நின்ற தனது வளர்ப்புத் தந்தையிடம் "நான் இனி வனத்தில் வாசம் செய்வேன்.

    என்னை காண வேண்டும் என நீங்கள் நினைத்தால், கல்லும் முள்ளும் நிறைந்த காட்டு வழியே வர வேண்டும்.

    வழி தெரியாமல் நீங்கள் திணறாமல் இருக்க கருடன் உங்களுக்கு வழிகாட்டுவான்"

    என்று சொல்லி விடை பெற்றுச் சென்றார்.

    தன் மைந்தன் மணிகண்டனைப் பார்க்க சென்ற போதெல்லாம் பந்தளராஜன் காடு, மலைக்களைக் கடக்க மிகவும் சிரமப்பட்டார்.

    அப்போது ஐயனே, அப்பனே என்றெல்லாம் அவர் சொன்ன வார்த்தைகளே இணைந்து ஐயன், அப்பன் ஐயப்பன் என்றாகி விட்டதாக சொல்லப்படுகிறது.

    • ஐயப்பன் என்றதும் சின்முத்திரை காட்டி, யோபட்டம் தரித்து அமர்ந்திருக்கும் வடிவமே நினைவுக்கு வரும்
    • அஷ்டகோண சாஸ்தா பீடத்தில் யோக பத்ராசனத்திலும், வீற்றிருந்து அருள்கிறார்.

    ஐயப்பன் என்றதும் சின்முத்திரை காட்டி, யோபட்டம் தரித்து அமர்ந்திருக்கும் வடிவமே பலருக்கும் நினைவுக்கு வரும்.

    ஆனால் அவர் நான்கு விதமான ஆசனங்களில் அமர்ந்து,

    நான்கு வகையான முத்திரைகளைக் காட்டுபவர் என்கிறது பூதநாததோ பாக்யானம்,

    தியானபிந்து ஆசனத்தில் அபய சின்முத்திரை தரித்தும்,

    கிருக நாரீயபீட ஆசனத்தில் யோகப் பிராண முத்திரையுடனும்,

    குதபாத சிரேஷ்டாசனத்தில் அபான பந்த முத்திரையோடும,

    அஷ்டகோண சாஸ்தா பீடத்தில் யோக பத்ராசனத்திலும்,

    வீற்றிருந்து அருள்கிறார் ஐயப்பன்.

    • சபரிமலையில் முதன் முதலில் பரசுராமரே சாஸ்தா கோவிலை எழுப்பினார்.
    • சபரி மலையில் மகர சங்கராந்தி தரிசனம் சிறப்பாக சொல்லப்படுகிறது.

    சபரிமலையில் முதன் முதலில் பரசுராமரே சாஸ்தா கோவிலை எழுப்பினார்.

    அப்போது தர்தசாஸ்தாவின் விக்ரகத்தை அவர் அங்கே பிரதிஷ்டை செய்தார்.

    அவதார நோக்கமான மகிஷி சம்ஹாரம் முடிந்ததும், சின் முத்திரைக்காட்டி யோக பட்டம் தரித்து

    தவக்கோலத்தில் அமர்ந்த ஐயப்பன், தவத்தின் நிறைவாக, பரசுராமர் அமைத்த தர்மசாஸ்தா விக்ரகத்தில் ஐக்கியமானார்.

    அதன் பிறகே சின்முத்திரை காட்டி யோக பட்டம் தரித்து, அமர்ந்த நிலையில் உள்ள ஐயப்பனின் வடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    ஆதிகாலத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்த சாஸ்தாவின் வடிவிற்கு ஆண்டுக்கு ஒரு முறை மகர சங்கராந்தி, அன்று மட்டுமே வழிபாடுகள் நடத்தப்பட்டன.

    ஐயப்பன் வடிவம் அமைந்த பிறகே மாத பூஜைகள், மண்டல பூஜைகள் மகரவிளக்கு பூஜைகள் தொடங்கப்பட்டன.

    அதனால்தான் இன்று சபரி மலையில் மகர சங்கராந்தி தரிசனம் சிறப்பாக சொல்லப்படுகிறது.

    ×