search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமேசான் காடுகள்"

    • 2000 மக்களை கொண்ட ஒரு பழங்குடி குழுவினர் வசிக்கும் பகுதிக்கு எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் கடந்த வருடம் இணையதள வசதியை கொண்டுவந்தது.
    • சமூக வலைத்தளங்களிலும், ஆபாசப் படங்களிலும் இந்த மக்கள் நாள் முழுவதும் மூழ்கியுள்ளதாகக் இனக்குழுவின் மூத்தவர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

     சுமார் 1000 மயில்களுக்கு பறந்து விரிந்து கிடைக்கும் அமேசான் காடுகளில் ஆயிரக்கணக்கான இனக்குழுக்களாக பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவற்றுள் பல இனக்குழுக்கள் வெளியுலக தொடர்பே இல்லாமல் வாழ்ந்து வருகிறது. சில பழங்குடிகள் மட்டுமே வெளியுலகத்தின் வசதிகளை பெற்று தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டுள்ளனர்.

    உலகின் வளர்ந்த நாடுகளில் முதன்மையானதாக விளங்கும் அமெரிக்காவின் அருகில் உள்ளதால் அமேசானில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் சமீப காலங்களில் நிகழலாமல் இல்லை. அந்த வகையில் 2000 மக்களை கொண்ட ஒரு பழங்குடி குழுவினர் வசிக்கும் பகுதிக்கு உலக பணக்காரனாரான எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் கடந்த வருடம் இணையதள வசதியை கொண்டுவந்தது.

     

     

    அப்போதிலிருந்து தொலைத்தொடர்பில் அந்த பழங்குடி மக்கள் மேம்பட்டிருந்தாலும் அந்த இனக்குழுவின் மூத்தவர்களால் ஒரு விஷயத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்க முடிவதில்லை. அதாவது இந்த பழகுடியினத்தைச் சேர்ந்த ஆண்கள் குறிப்பாக இளைஞர்கள் ஆபாசப் படங்களுக்கு அடிமையாக மாறிவருகின்றனர் என்று கூறப்படுகிறது.

     

    சமூக வலைத்தளங்களிலும், ஆபாசப் படங்களிலும் இந்த மக்கள் நாள் முழுவதும் மூழ்கியுள்ளதாகக் குழுவின் மூத்தவர்கள் வருத்தத்தில் உள்ளனர். ஆனால் இணையதளத்தால் ஏற்படும் நன்மைகளையும் அவர்களால் புறக்கணித்து விட முடியாததால் செய்வதறியாது அப்பழங்குடியின மூத்தவர்கள் விழிக்கின்றனர். 

    • விலங்கியல் மொழியில் பைசே, அரபைப்மா கைகாஸ் என அழைக்கப்படுகிறது
    • வளர்ச்சி பெற்ற பைசே சுமார் 12 அடி நீளமும், 20 கிலோகிராம் எடையும் கொண்டவை

    பிரேசில், கொலம்பியா, பெரு மற்றும் பல தென் அமெரிக்க நாடுகளில் பரந்து விரிந்திருக்கும் மழைக்காடுகள், அமேசான் (Amazon). மத்திய தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியா (Bolivia) நாட்டிலும் இது சுமார் 4 சதவீதம் உள்ளது.

    பொலிவியாவை ஒட்டிய அமேசான் நீர்நிலைகளில் மீன்பிடி தொழில் செய்து வந்தவர் கில்லர்மோ ஒட்டா பாரம். இவரது வலையில் முன்னெப்போதும் இல்லாத அரிய வகை மீன் சிக்கியது.

    வழக்கத்தில் பைசே (paiche) என அழைக்கப்படும் இம்மீன், விலங்கியல் மொழியில் அரபைப்மா கைகாஸ் (Arapaipma gigas) என அழைக்கப்படுகிறது.


    நன்னீர் (freshwater) மீன் வகைகளில் மிக பெரிய மீனான இது சுமார் 4 மீட்டர் (12 அடி) வரை நீளமும் 200 கிலோகிராம் நீளமும் உடையது.

    எப்பொழுதும் அதிக பசியுடன் இருக்கும் பைசே, கூட்டம் கூட்டமாக வரும் பிற சிறிய மீன் வகைகளை உண்டு விடும். பைசேவிற்கு அஞ்சி பிற மீன் வகைகள், வேறு நீர்நிலைகளை தேடி ஓடி விடுகின்றன.

    இவ்வகை மீன்கள் இருக்கும் இடங்களில் பிற வகை மீன்கள் வாழ்வது அரிதாவதால் உயிரியல் ஏற்றத்தாழ்வுக்கு இவை காரணமாவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


    பொலிவியா நீர்நிலையில் இந்த மீன் வந்த காலகட்டம் குறித்து சரிவர தகவல்கள் இல்லை. பெரு நாட்டில் உள்ள மீன் பண்ணைகளில் உற்பத்தியாகி இங்கு வந்திருக்கலாம் என தெரிகிறது.

    பைசேவிற்கு அதன் வாழ்நாளில் வருடத்திற்கு சராசரியாக 10 கிலோ வரை எடை கூடிக்கொண்டே போகும். பல சிறிய பற்களை கொண்டிருந்தாலும் அவை கூரானதாக இருக்காது. ஆனாலும், பிரன்ஹா (piranha) போன்ற ஆபத்தான மீன் வகைகளை பைசே கடித்து தின்று விடும்.

    அரிதான பைசேவின் இனம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக உயிரியல் நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    அவ்வப்போது சுவாசத்திற்காக நீருக்கு மேலே தோன்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், பைசே அமைதியான நீர்நிலைகளை விரும்புகின்றன. அங்கு வரும் போது இவை பிடிபடுவது சுலபமாகிறது.


    ஆரம்பத்தில் இவ்வகை மீன் ஆபத்தானது என நினைத்து பிடிக்க அஞ்சிய மீன்பிடி தொழிலாளர்கள், இவற்றிற்கு பெருகி வரும் தேவைக்காக தேடி பிடிக்கின்றனர்.

    • ஒரு சில இடங்களில் வெப்பம் 102 டிகிரி ஃபேரன்ஹீட் அளவை தொட்டது
    • பரப்பளவில் அமேசான் காடு ஆஸ்திரேலியா அளவிற்கு பரந்து விரிந்துள்ளது

    பிரேசில் நாட்டின் வடமேற்கில் தொடங்கி கொலம்பியா, பெரு உட்பட பல தென் அமெரிக்க நாடுகள் வரை பரவியுள்ளது அமேசான் மழைக்காடு.

    வடக்கு பிரேசிலில் அமேசோனாஸ் (Amazonas) மாநிலத்தின் தலைநகரமான மனோஸ் (Manaus) நகருக்கருகே உள்ளது டெஃப் (Tefe) பிராந்தியம். இப்பகுதியிலும் அமேசான் காடுகள் பரவியுள்ளது. இப்பகுதி முழுவதிலும் சமீப காலமாக பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகளில் வெப்பம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு சில இடங்களில் வெப்பம் 102 டிகிரி ஃபேரன்ஹீட் அளவை தொட்டு விட்டது.

    இதன் காரணமாக இங்குள்ள டெஃப் ஏரியில் நூற்றுக்கணக்கான டால்பின்கள் உயிரிழந்து மிதக்கின்றன.

    "இத்தகைய சம்பவம் இதற்கு முன்பு நடைபெறாதது. டால்பின் மீன்கள் இறந்ததற்கும் அதிகளவு வெப்பத்திற்கும் உறுதியான தொடர்புள்ளது. ஆனால், வெப்பநிலை அதிகரிப்பதற்கான காரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை" என பிரேசில் அறிவியல் துறையின் ஆதரவில் இயங்கும் மமிரவா நிறுவனம் (Mamiraua Institute) தெரிவித்துள்ளது.

    உயர்ந்து வரும் வெப்ப நிலை காரணமாக அமேசான் காடுகளில் உள்ள நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. பரப்பளவில் கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவின் அளவிற்கு பரந்து விரிந்துள்ள இக்காடுகளில் இது போன்ற வானிலை நிகழ்வுகள் நடைபெறுவதால் 1 லட்சம் பேருக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இயற்கைக்கு எதிரான பல நடவடிக்கைகளில் மனிதர்கள் ஈடுபட்டு வருவதால் இது போன்ற விசித்திரமான பருவநிலை மாற்றங்கள் ஏற்படலாம் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்தனர். இந்த நிகழ்வு அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்து நிலவுகிறது.

    ×