என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழகுக்குறிப்பு"

    • சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீனை மறக்காமல் பயன்படுத்த வேண்டும்.
    • இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சன்ஸ்கிரீன் உபயோகிப்பது நல்லது.

    கோடை காலத்துக்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கி இருக்கும் நிலையில் சருமத்தை பாதுகாப்பதற்கு பலரும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். சன்ஸ்கிரீன், பேஷியல், மாய்ச்சுரைசரிங் கிரீம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகிறார்கள். இதில் சன்ஸ்கிரீன் பயன்படுத்தும் விஷயத்தில் நிறைய கட்டுக்கதைகள் உலாவருகின்றன. அவை பற்றியும் அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.


    கட்டுக்கதை:

    மேகமூட்டமாக இருக்கும் நாட்களில் சன்ஸ்கிரீன் பயன்படுத்த தேவையில்லை.

    உண்மை:

    சூரியன் உமிழும் புற ஊதாக்கதிர்கள் மேகங்கள் வழியாகவும் ஊருடுவும் அபாரசக்தி படைத்தவை. அதனால் சூரியனே தெரியாத அளவுக்கு வெயிலே இல்லாமல் இருள் சூழ்ந்த காலநிலை நிலவினாலும் கூட சருமத்திற்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்தாவிட்டால் பாதிப்புதான் ஏற்படும்.

    முன்கூட்டியே வயதாகும் தோற்றம் எட்டிப்பார்ப்பதற்கும் வழிவகுத்துவிடும். அதனால் மேகமூட்டமான நாட்களிலும் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்ள மறக்காதீர்கள்.

    கட்டுக்கதை:

    கருமையான சரும நிறம் கொண்டவர்கள் சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க தேவையில்லை.

    உண்மை:

    மெலனின் என்னும் நிறமி கருமையான சருமத்திற்கு இயற்கையாகவே பாதுகாப்பு அளிக்கும் என்றாலும் சூரியனிடம் இருந்து முழுமையான பாதுகாப்பை வழங்காது. எந்த நிற சருமம் கொண்டவர்களாக இருந்தாலும் சரும பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    அதிலும் கருமை நிற சருமம் கொண்டவர்கள் போதிய சரும பராமரிப்பை மேற்கொள்ளாவிட்டால் சரும எரிச்சல், கரும்புள்ளிகள் தோன்றுதல், சரும புற்றுநோய் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும். எனவே ஒவ்வொருவரும் சரும நிறத்தை பொருட்படுத்தாமல் சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீனை மறக்காமல் பயன்படுத்த வேண்டும்.


    கட்டுக்கதை:

    அதிக எஸ்.பி.எப் கொண்ட சன்ஸ்கிரீன் பயன்படுத்தினால் நீண்ட நேரம் வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ளலாம்.

    உண்மை:

    எஸ்.பி.எப் 50 கொண்ட சன்ஸ்கிரீன் 'சூப்பர் பவர்' போல் செயல்பட்டு சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்தான். ஆனால் நாள் முழுவதும் வெயிலில் இருந்து பாதுகாப்பை வழங்காது. அதிக வியர்வை வெளிப்பட்டாலோ, நீச்சல் பயிற்சி மேற்கொண்டாலோ மீண்டும் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்வது அவசியமானது.

    குறிப்பாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலகட்டங்களில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சன்ஸ்கிரீன் உபயோகிப்பது நல்லது.

    கட்டுக்கதை:

    முகத்தில் மட்டும் சன்ஸ்கிரீன் உபயோகித்தால் போதும். மற்ற சரும பகுதிகளுக்கு சன்ஸ்கிரீன் தேவையில்லை.

    உண்மை:

    சன்ஸ்கிரீன் என்பது முகத்திற்கு மட்டுமே உபயோகிக்கக்கூடிய கிரீம் அல்ல. கழுத்து, காது, கை, கால்கள் என எல்லா பகுதிகளிலும் சன்ஸ்கிரீனை பூசிக்கொள்ள வேண்டும். ஏனெனில் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்கள் சருமத்தின் எந்த பகுதிக்கும் பாகுபாடு காண்பிக்காது. ஆடை அணிந்த பிறகு மறைக்காத உடல் பாகங்கள் அனைத்திற்கும் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்ள வேண்டும்.

    கட்டுக்கதை:

    எஸ்.பி.எப் அதிகம் கொண்ட சன்ஸ்கிரீன் உடன் ஒப்பனை அணிவது போதுமானது.

    உண்மை:

    மேக்கப்புடன் எஸ்.பி.எப் அதிகம் கொண்ட சன்ஸ்கிரீனை பூசினால் மட்டும் போதாது. பெரும்பாலானோர் போதுமான அளவுக்கு ஒப்பனை மேற்கொள்வதில்லை. மேக்கப் செய்வதற்கு முன்பாக முதலில் பிராட் ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்ள வேண்டும். அதன்பின்பு மேக்கப் செய்து கொள்வது நல்லது.


    கட்டுக்கதை:

    சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ள சன்ஸ்கிரீன் மட்டுமே போதுமானது.

    உண்மை:

    சன்ஸ்கிரீன் சிறந்ததுதான். ஆனால் அதுமட்டுமே சூரியனிடம் இருந்து பாதுகாப்பு தருவதற்கு ஏற்றதல்ல. சிறந்த சன்ஸ்கிரீனை பயன்படுத்திய பிறகு சன்கிளாஸ் அணிந்து கொள்ள வேண்டும்.

    அதுபோல் அகலமான தொப்பி அணிந்து கொள்வதும், பருத்தி ஆடை உடுத்துவதும் அவசியமானது. சூரியனின் ஆதிக்கம் உச்சத்தில் இருக்கும் நேரமான காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது.

    கோடை கால மாதங்களில் மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    • அழகாய் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது.
    • இயற்கையான அழகைப்பெற யாரும் முயற்சி எடுப்பதில்லை.

    அழகாய் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் இயற்கையான அழகைப்பெற யாரும் முயற்சி எடுப்பதில்லை. உடலை நன்றாக பராமரித்தாலே அழகாக தோற்றமளிக்கலாம். இயற்கை தோல் பராமரிப்பு என்பது மிகவும் எளிதானது. இயற்கையான விதிமுறைகளை பின்பற்றுவதால் உங்களது தோலுக்கு எந்தவித பின்விளைவுகளும் ஏற்படாது.

    இயற்கை பராமரிப்பை மேற்கொண்டால் பாதிப்பும் இருக்காது. பலனும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

    தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும். தினமும் இரவில் 8 மணி நேரம் தூங்க வேண்டும். தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். புத்தம் புதிய பழங்களை தினமும் சாப்பிட வேண்டும். காய்கறிகள், கீரைகளை சாப்பாட்டில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். எண்ணெய் மற்றும் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ஜங்க்புட் அயிட்டங்களை தொடவே கூடாது.

    கூடுமானவரை செயற்கை மேக்-அப் செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படி அவசியம் செய்ய வேண்டும் என்றால், நீண்ட நேரம் நீடித்து இருக்கக் கூடிய மேக்-அப்பை செய்யக் கூடாது. எப்போதும் ரிலாக்சாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். சிறிது நேரமாவது தியானம் அல்லது யோகா செய்ய வேண்டும்.

    செயற்கை அழகு சாதன பொருட்களை பயன்படுத்தக் கூடாது. உங்களின் தோல் மருத்துவரை 6 மாதத்திற்கு ஒருமுறையாவது கன்சல்ட் செய்ய வேண்டும்.

    இந்த எளிய நடைமுறைகளை பின்பற்றினாலே போதும், உங்களது முகம் மட்டும் அல்ல உடலின் அனைத்து தோல் பகுதிகளும் மிருதுவாகவும் பார்ப்பதற்கு பளபளப்பாகவும் இருக்கும். தோலை பொலிவுபடுத்துவதற்காக செயற்கை அழகுசாதன பொருட்களை தேடிப்போக வேண்டியதில்லை. அதனால் ஏற்படும் பக்க விளைவுகளால் நீங்கள் அவஸ்தைப்படவும் தேவையில்லை.

    அதுமட்டுமல்ல நீண்டகாலத்திற்கு இந்த பலன் நீடித்து இருக்கும். வயதான காலத்திலும் கூட சில ஆண்களும், பெண்களும் பார்ப்பதற்கு பளபளவென்று காணப்படுவார்கள். அவர்களின் தோலில் சுருக்கமோ, சொர சொரப்புத்தன்மையோ இருக்காது. அதற்கு காரணம், இது போன்ற இயற்கை பராமரிப்புதான். எனவே நீங்களும் இந்த பராமரிப்பை கடைபிடித்தால் வயதான காலத்திலும் உங்களது தோல் பார்ப்பதற்கு இளமையானதாகத் தோன்றும்.

    • உதட்டுச் சாயத்தை பெரும்பாலான பெண்கள் உபயோகப்படுத்துகிறார்கள்.
    • லிப்ஸ்டிக் வகைகளுக்கு இப்போது வரவேற்பு அதிகமாக இருக்கிறது.

    உதடுகளுக்கு அழகு சேர்க்கும் 'லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டுச் சாயத்தை பெரும்பாலான பெண்கள் உபயோகப்படுத்துகிறார்கள். ரசாயனம் கலக்காமல், முழுவதும் இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் லிப்ஸ்டிக் வகைகளுக்கு இப்போது வரவேற்பு அதிகமாக இருக்கிறது. இல்லத்தரசிகள் இத்தகைய லிப்ஸ்டிக் தயாரிப்பை பகுதிநேர தொழிலாக மேற்கொள்ள முடியும். அதைப்பற்றிய தகவல்கள் இங்கே பார்க்கலாம்...

    சாக்லெட் லிப்ஸ்டிக் தயாரிக்க தேவையான பொருட்கள்:

    கோகோ பவுடர்- ஒரு ஸ்பூன்

    தேங்காய் எண்ணெய்- 1/2 ஸ்பூன்

    தேன்மெழுகு (துருவியது)- 1/4 ஸ்பூன்

    லாவண்டர் எண்ணெய்- 2 துளிகள்

    செய்முறை:

    ஒரு சிறிய கிண்ணத்தில் கோகோ பவுடரை போட்டு, அதனுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்மெழுகு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனை டபுள் பாயிலிங் முறையில் உருக்கிக்கொள்ள வேண்டும். அதாவது, ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும். கோகோ பவுடர் இருக்கும் கிண்ணத்தை அதன் உள்ளே வைக்க வேண்டும். தண்ணீரின் வெப்பத்தால் கிண்ணத்தில் இருக்கும் கலவை உருக ஆரம்பிக்கும். முழுவதுமாக உருகியதும் அதில் லாவண்டர் எண்ணெய்யை ஊற்றி கலக்க வேண்டும்.

    இந்த கலவையை ஒரு லிப்ஸ்டிக் குப்பியில் மாற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். அரை மணிநேரம் கழித்து வெளியே எடுத்தால் அந்த கலவை லிப்ஸ்டிக் வடிவில் கடினமாகி இருக்கும். அதன் முனையை லேசாக கைவிரலால் ஷேப் செய்து விடுங்கள். இப்போது சாக்லெட் லிப்ஸ்டிக் தயார். இதனை ஆறு மாதம் வரை பயன்படுத்த முடியும்.

    சந்தைப்படுத்தும் முறை:

    சாக்லெட் லிப்ஸ்டிக்' தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளிலேயே கிடைக்கும். முதலில் சிறிய அளவில் தயாரித்து தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி அதன் நிறை குறைகளை தெரிந்துகொள்ளுங்கள். பிறகு உங்களுடைய தோழிகள் வட்டத்தில் கொடுத்து அவர்களுடைய பின்னூட்டத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

    அதன்பிறகு தன்னம்பிக்கையுடன் சந்தைப்படுத்துங்கள். உங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் இருக்கும் அழகு நிலையங்கள், பொட்டீக், சூப்பர் மார்க்கெட் போன்றவற்றில் இலவச சாம்பிள் அளித்து உங்கள் பிராண்ட் பெயரை பிரபலப்படுத்தலாம். சமூகவலை தளங்களிலும் காட்சிப்படுத்தலாம்.

    • தேனை தொடர்ந்து உட்கொள்வது சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
    • இளநீர் அடிக்கடி குடிப்பதால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாது.

    * தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது சருமத்திற்கு நல்லது.

    * வைட்டமின் சி நிறைந்த பழச்சாறுகளை அதிகம் குடித்து வந்தால், சருமம் பொலிவடையும்.

    * ஊறவைத்த பாதாமை தினமும் 5 என்ற எண்ணிக்கையில் உட்கொள்வது சரும வறட்சியை தடுக்கும்.

    * தேனை தொடர்ந்து உட்கொள்வது சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

    * வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெயால் தோலை முழுவதும் மசாஜ் செய்து குளித்து வந்தாலும் உடல் சூடு குறைந்து சருமம் பொலிவு பெறும்.

    * கற்றாழையை வாரத்திற்கு இரண்டு முறை சருமத்தில் தடவி குளித்து வந்தால் பலன் கிடைக்கும்.

    * எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து சருமத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

    * பப்பாளி, வாழைப்பழம், கொய்யா, ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடுவது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.

    * இளநீர் அடிக்கடி குடிப்பதால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாது.

    * வைட்டமின் சி உள்ள எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் போன்ற புளிப்பு பழங்களை உட்கொள்வது சருமத்தைப் பாதுகாக்கும்.

    • வீட்டிலேயே சோப் தயாரிக்கலாம்.
    • பணிபுரிய விரும்பும் பெண்களுக்கு இது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

    முதலில் நீங்கள் உங்கள் உடலுக்கு ஏற்ற அல்லது உங்கள் சருமத்திற்கு ஏற்ற சோப்புகளில் எந்த சோப்பை பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் சிகப்பழகையும், உடல் நறுமணத்தையும், மென்மையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கக்கூடியதாக அந்த சோப் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் தேவையான பொருட்களை சேர்த்து வீட்டிலேயே சோப் தயாரிக்கலாம். அதை நீங்கள் சந்தைப்படுத்தவும் செய்யலாம். வீட்டில் இருந்து பணிபுரிய விரும்பும் பெண்களுக்கு இது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். முதலில் உங்கள் வீட்டில் உள்ளவர்கள், அருகில் உள்ளவர்கள் என கொடுத்து பரிசோதித்துவிட்டு பின்னர் சந்தைப்படுத்த தயார் ஆகலம். இப்படி விதவிதமான சோப்புகள் உள்ளன. வீட்டிலேயே தயாரிக்க கூடிய சில சோப் வகைகளை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்...

    ஸ்கின் ஒயிட்டனிங் சோப்

    மைசூர் பருப்பு 50 கிராம் எடுத்து மிக்சியில் பொடித்துக்கொள்ள வேண்டும். அதனுனர் ஒரு ஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 விட்டமின் ஈ கேம்ஸ்யூல், ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ரெகுலர் சைஸ் டிரான்ஸ்பரண்ட் கிளிசரின் பேஸ் பார் சோப் வாங்கி அதை மெல்லிய ஸ்லைஸ்களாக துண்டாக்கி கொள்ள வேண்டும். ஸ்லைஸ் செய்த சோப் துண்டுகளை டபுள் பாய்லிங் முறையில் நன்கு சூடாக்கினால் அது உருகிவிடும். உருகிய சோப் கலவையுடன் நீங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள கலவையையும் சோப் கலவையில் சேர்த்து கலந்து அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். சூடு கைபொறுக்கும் பதமானதும் அதை உங்களுக்கு பிடித்த சோப் மோல்டுகளில் ஊற்றி அறைவெப்ப நிலையில் ஆறவிடவும். ஆறிய பிறகு மோல்டுகளில் இருந்து பிரித்து எடுக்கலாம்.

    வேப்பிலை சோப்

    ஒரு கைப்பிடி வேப்பிலைகளை எடுத்து அதனை நன்றாக கழுவி மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் இதனுடன் 2 வைட்டமின் ஈ எண்ணெய்யும் சேர்த்து கலந்து இதனை டிரான்ஸ்பரண்ட் கிளிசரின் பேஸ் பார் எடுத்து டபுள் பாய்லிங் முறையில் சூடாக்கி இந்த கலவையை அதனுடன் கலந்து சோப் மோல்டில் ஊற்றி எடுத்தால் வேப்பிலை சோப் தயார். இது நாம் வீட்டிலேயே தயாரிக்கும் சோப் என்பதால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. வேப்பிலை சோப் உடலில் உள்ள நச்சுக்கிருமிகளை விரட்டவும், சருமத்தை பாதுகாக்கவும் பயன்படுகிறது.

    கற்றாலை சோப்

    சுத்தமான கற்றாலை ஜெல் ஒரு கப் எடுக்க வேண்டும். அதில் வைட்டமின் ஈ எண்ணெய் 2 கேப்ஸ்யூல் சேர்க்க வேண்டும், இதனுடன் பாதாம் ஆயில் ஒரு ஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் மற்றும் இதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து க்ரீம் பதத்து கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை டிரான்ஸ்பரண்ட் கிளிசரின் பேஸ் பார் எடுத்து டபுள் பாய்லிங் முறையில் சூடாக்கி இந்த க்ரீமையும் அதனுடன் கலந்து சோப் மோல்டில் ஊற்றி எடுத்தால் கற்றாலை சோப் தயார். இந்த சோப் ஸ்கின் ஒயிட்டனிங்கிற்கும் பயன்படும். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது உடலுக்கு நல்ல சைனிங் மற்றும் குளோவாக இருப்பதற்கும் உதவுகிறது.

    • அழகு கலையில் புதுமையான பேஷியல் முறைகள் வந்துகொண்டே இருக்கிறது.
    • இப்போது டிரெண்டிங்கில் இருக்கிறது.

    `பேஷியல்' என்று பேச தொடங்கினால், நிறைய வகைகளையும், நிறைய முறைகளையும் பேச வேண்டியிருக்கும். அந்தளவிற்கு, அழகு கலையில் புதுமையான பேஷியல் முறைகள் வந்துகொண்டே இருக்கிறது. அப்படி ஒன்றாக, இப்போது டிரெண்டிங்கில் இருக்கிறது, ஹைட்ரா பேஷியல். இதுதான், இளம் வயதினரின் அபிமான பேஷியல் முறையாகி இருக்கிறது. காரணம், மற்ற பேஷியல் முறைகளை விட, முகப்பொலிவும், சரும ஆரோக்கியமும் இதில் அதிகம் என்பதால், இளம் வயதினர், அதிகமாக விரும்புகின்றனர்.

    அது என்ன ஹைட்ரா பேஷியல், இதில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? ஹைட்ரா பேஷியல் என்பது சருமத்தை சுத்தப்படுத்தவும், நீரேற்றமாகவும் (ஹைட்ரேட்) வைத்துக்கொள்ள பயன்படும் நவீன பேஷியல் முறை. இதற்கு என பிரத்தியேக கருவிகள் உண்டு. அந்த கருவிகள், சரும நுண் துளைகளை சுத்தம் செய்து, அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை அகற்றும் பணிகளை செய்யும். மேலும் சருமத்தை அழகுகூட்ட, பல்வேறு `சீரம்' வகைகளை பயன்படுத்துவதால், முகம் பொலிவாகிறது.

    இதுதான் அடிப்படை என்றாலும், டீன்-ஏஜ் வயதினரின் தேவைக்கு ஏற்ப, சீரம் வகைகளும், பூஸ்டர் வகைகளும் மாறுபடும்.

    பொதுவாக மூன்று விதமான முறைகளில் இந்த பேஷியல் செய்யப்படுகிறது. அதில் ஒன்று சிக்னேச்சர். இது 30 நிமிடங்கள் செய்யக்கூடியது. அடுத்தது, டீலக்ஸ். இது 45 நிமிடங்கள் செய்யக்கூடியது. இறுதியாக, பிளாட்டினம் வகை பேஷியல் 1 மணிநேரம் செய்யக்கூடியது. இந்த மூன்று பேஷியலிலும், சீரம் எனப்படும் முகப்பொலிவு எண்ணெய்களும், பூஸ்டர் எண்ணெய்களுமே மாறுபடும். மேலும், எண்ணெய் சருமம், வறண்ட சருமம்... இப்படி சருமத்தின் தன்மைக்கு ஏற்பவும், சில நுணுக்கங்கள் மாறுபடும்.

    வயதான பிறகும், முகத்தை இளமையாக காட்டக்கூடிய சக்தி, இந்த பேஷியலுக்கு உண்டு. சரும வெடிப்புகளை நீக்கி, சருமத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும். முகப்பருக்கள், வடுக்கள் போன்றவற்றையும் போக்கக்கூடியது. மேலும் இதில் 5-6 படிநிலைகள், 9 படி நிலைகள், 10, 11 என நிறைய படி நிலைகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும், ஒவ்வொரு தேவையை பூர்த்தி செய்வதாகவும், சரும அழகை மெருகேற்றுவதாகவும் அமைந்திருக்கிறது.

    அந்தவகையில், வெயில் பாதிப்பினால் கருப்பாகும் சருமத்தை மீட்டெடுப்பது, பிக்மென்டேஷன் பாதிப்பை சீர்செய்வது, தீக்காயங்களை மறைய வைப்பது... போன்ற பல நன்மைகள் இருப்பதினால் தான், எல்லா வயதினரும் இதனை விரும்புகின்றனர். பெண்களை விட ஆண்களே அதிகம் விரும்பி, இதை செய்கின்றனர்.

    கொஞ்ச நாட்களிலேயே இது பிரபலமாகி விட்டது என்பதால், நிறைய இடங்களில் இந்த பேஷியல் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம், முறையாக பயிற்சி பெற்றவர்களா...? என்பதை உறுதி செய்வது நல்லது. இது எளிமையான பிராசஸ்தான் என்றாலும், சருமத்தோடு சாலிஸ் லைக், கிளைகாளிக் போன்றவை பூசுவதால், முறையான கல்வியறிவு பெற்றவர்களிடம் பேஷியல் செய்வது நல்லது.

    சிலர் சுயமாகவே, வீட்டிலேயே செய்கிறார்கள். அதுவும் நல்லதுதான் என்றாலும், இதை அழகு நிலையங்களில் செய்துகொள்ளும்போது 100 சதவிகித முகப்பொலிவு கிடைக்கும். மேலும் சரும வல்லுநர்களின் ஆலோசனையும் கிடைக்கும்.

    • முகத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்.
    • முகத்தில் உள்ள வறட்சியான நிலை மாறும்.

    தேவையான பொருட்கள்:

    கடலை பருப்பு- 25 கிராம்

    மைசூர் பருப்பு- 25 கிராம்

    அரிசி- 25 கிராம்

    பாசிப்பயறு- 25 கிராம்

    கெட்டி தயிர்- 25 கிராம்

    செய்முறை:

    கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பருப்பு வகைகளையும் ஒரு பவுலில் போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் உற்றி அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் இதனை க்ரீம் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மிக்சியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை கொஞ்சம் தண்ணீர் உற்றி கலக்கி அதனை ஒரு வெள்ளை துணியில் வடிகட்டிக்கொள்ள வேண்டும்.

    வடிகட்டிய கலவையை வேறு ஒரு டப்பாவில் சேர்த்து அதில் கெட்டி தயிரையும் இதேபோன்று ஒரு வெள்ளை துணியில் வடிகட்டி அதனையும் இந்த கலவையுடன் சேர்க்க வேண்டும். இதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியையும் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த ஃபேஸ் பேக்கை திருமணம் நடக்க இருக்கும் பெண்கள் உடல் முழுவதும் தொடர்ந்து தினமும் இதனை தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து மிதமான தண்ணீரால் கழுவி வந்தால் நல்ல மாற்றத்தை உண்மையாக பார்க்கலாம்.

    முகத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும். முகத்தில் உள்ள வறட்சியான நிலை மாறும். தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது முகம் பளபளப்பாக இருப்பதை பார்க்கலாம்.

    • நெய், கூந்தல் பராமரிப்புக்கு பல வழிகளில் பயன்படுகிறது.
    • பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது.

    சமையலுக்கு உபயோகிக்கும் நெய், கூந்தல் பராமரிப்புக்கு பல வழிகளில் பயன்படுகிறது. நெய்யில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது. முடி உதிர்வை தடுத்து, வளர்ச்சியை தூண்டக்கூடிய வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ ஆகியவை நெய்யில் நிறைந்திருக்கின்றன. நெய்யுடன் தேங்காய் எண்ணெய், எலுமிச்சம் பழச்சாறு, தேன் மற்றும் வேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வீட்டிலேயே ஹேர் மாஸ்க் தயாரித்து உபயோகிக்கலாம்.

    நெய் ஹேர் மாஸ்க்

    போதுமான அளவு நெய்யை எடுத்து தலையிலும். கூந்தலிலும் நன்றாக பூசவும். 20 நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு தலைக்கு குளிக்கவும். நுனி முடி பிளவுப்படும் பிரச்சினைக்கு இது சிறந்த தீர்வாகும். நெய், வறண்ட தலைமுடிக்கு ஈரப்பதத்தை வழங்கும், முடி உதிர்வை கட்டுப்படுத்தும்.

    நெய், வேப்பம்பூ ஹேர் மாஸ்க்:

    ஒரு கிண்ணத்தில் 3 டீஸ்பூன் நெய், 1 டீஸ்பூன் தேன், 10 முதல் 15 வேப்பிலைகள் கலந்து இரவு முழுவதும் அப்படியே வைக்கவும். காலையில் அதை சிறு தீயில் வைத்து 3 முதல் 4 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும். பின்பு அதில் இருந்து வேப்பிலைகளை வெளியே எடுக்கவும், பின்பு அந்த நெய் கலவையை மிதமான சூட்டில் எடுத்து தலை முழுவதும் பூசவும். 30 நிமி டங்கள் கழித்து மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும். வேப்பிலையில் இருக்கும் மருத்துவ குணங்கள் பொடுகு பிரச்சினையை நீக்கும், உடல் சூட்டை குறைக்கும், இளநரை உண்டாகாமல் தடுக்கும்.

    நெய், தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்:

    2 டீஸ்பூன் நெய்யுடன், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து சிறு தீயில் 10 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும். பின்பு அதில் உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு எசன்ஷியல் எண்ணெய்யை சில துளிகள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை தலை பகுதியிலும், கூந்தலிலும் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும். இந்த ஹேர் மாஸ்க் பொடுகை நீக்கி, முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.

    நெய், எலுமிச்சம் பழச்சாறு ஹேர் மாஸ்க்:

    2 டீஸ்பூள் நெய்யை உருக்கி, அதனுடன் அரை மூடி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலக்கவும். இதை மித மான சூட்டில் எடுத்து தலையில் பூசி நன்றாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு தலைக்கு குளிக்கவும். இந்த ஹேர்மாஸ்க் முடிக்கு ஊட்டமளித்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

    நெய், தேன் ஹேர் மாஸ்க்:

    போதுமான அளவு நெய்யுடன் சில துளிகள் தேன் கலந்து தலையில் பூசவும். சிறிது நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். இந்த ஹேர்மாஸ்க் முடியின் வேர்க்கால்களுக்கு புத்துயிர் அளிக்கும். தலைமுடியை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

    • பொலிவான சருமத்தை வழங்குகிறது.
    • கரும்புள்ளிகள் மறைந்து பளிச்சென்று இருக்கும்.

    இந்த கேழ்வரவு ஃபேஸ் பேக் உங்களது முகத்தில் உள்ள துளைகளை ஆழமாக சுத்தப்படுத்தி, இறந்த சரும செல்களை நீக்கி, பளபளப்பான சருமத்தை கொடுக்கிறது. இது முகப்பருவை தடுக்கிறது. உங்களுக்கு பொலிவான சருமத்தை வழங்குகிறது. உங்கள் சருமத்திற்கு தீவிர ஊட்டச்சத்தை அளிக்கிறது. உங்களது சருமத்திற்கு பளபளப்பு மற்றும் பொலிவை அளிக்கிறது.

    ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் கேழ்வரகு எடுத்து அதனை பால் ஊற்றி ஊற வைக்க வேண்டும். அரைமணிநேரம் கழித்து அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் முகத்தை பாலில் பஞ்சு தொட்டு முகத்தை துடைத்துவிட்டு இந்த ஃபேஸ்பேக்கை முகத்தில் போட்டு அந்த பேக் காய்ந்தவுடன் ஈரமான துணி கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து பளிச்சென்று இருக்கும்.

    பயன்கள்

    * ஸ்க்ரப் கம் ஃபேஸ் மாஸ்க்

    * சருமத்தை நன்றாக எக்ஸ்ஃபோலியேட் செய்கிறது

    * அதிகப்படியான எண்ணெய், அழுக்கு மற்றும் அசுத்தங்களை நீக்குகிறது

    * சருமத்தை இயற்கையாக புத்துணர்ச்சியடையச் செய்கிறது

    * சாதாரண மற்றும் எண்ணெய் சருமத்திற்கு ஏற்றது

    • வாழைப்பழம், தேனை கொண்டு சருமத்திற்கு பொலிவு சேர்க்கலாம்.
    • பப்பாளி பழத்திலும் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

    தீபாவளி, திருக்கார்த்திகை என அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருக்கின்றன. அதனை உற்சாகமாக கொண்டாடி மகிழ, பெண்கள் பலரும் சருமத்திற்கு பொலிவு சேர்க்கும் விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். பழங்களுடன் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை கொண்டே சருமத்திற்கு பிரகாசம் சேர்க்கலாம். வாழைப்பழம் மற்றும் தேனை கொண்டு சருமத்திற்கு பொலிவு சேர்க்கலாம்.

    வாழைப்பழத்தில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை வழங்கக்கூடியவை.

    தேன் முகப்பருவை எதிர்த்து போராடவும், சருமத்தை பளிச்சிட செய்யவும் உதவும். பழுத்த வாழைப்பழத்தை பிசைந்து அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து குழைத்து முகத்திற்கு மசாஜ் செய்தால் போதும். அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவி விடலாம்.

    பப்பாளி பழத்திலும் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை சருமத்திற்கு புத்துணர்ச்சி தரக்கூடியவை. பப்பாளியில் இருக்கும் பப்பெய்ன் என்னும் என்சைம் இயற்கையான எக்ஸ்போலியண்டாக செயல்படும். அதாவது இறந்த சரும செல்களை நீக்கி சருமத்திற்கு பளபளப்பை கொடுக்கும். பழுத்த பப்பாளி பழத்தை முகத்தில் தடவி மசாஜ் செய்து வரலாம்.

    ஆரஞ்சு பழத்தின் தோலையும் பயன்படுத்தலாம். அதனை உலர வைத்து பொடித்துக்கொள்ள வேண்டும். அதிலும் வைட்டமின் சி நிரம்பியுள்ளது. அது சருமத்தை பொலிவு பெற செய்யும். நன்கு பொடித்த ஆரஞ்சு தோலை தயிருடன் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். இது முகத்தில் படிந்திருக்கும் கறைகளை போக்கும். சரும துளைகளை சுத்தப்படுத்தி சருமத்தை பிரகாசிக்க செய்யும்.

    ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஆன்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன. அதனுடன் எலுமிச்சை பழத்தின் சாறை கலந்து பயன்படுத்தலாம். சருமத்தில் படர்ந்திருக்கும் கரும் புள்ளிகளை குறைப்பதற்கு இவை உதவும். ஐந்து பெர்ரி பழங்களை துண்டுகளாக நறுக்கி அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை பழ சாறு கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

    சருமம் புத்துணர்ச்சி பெறுவதற்கு கிவி பழம் சிறந்த தேர்வாக அமையும். அதனுடன் தயிரை சேர்த்து பயன்படுத்தலாம். அதன் மூலம் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கலாம். சருமத்தை பிரகாசமாக ஜொலிக்க வைக்கலாம்.

    • புற ஊதா கதிர்கள் தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கு முக்கிய காரணம்.
    • கொலாஜன் உற்பத்தியை குறைத்து தோல் சுருக்கம் அடையச்செய்கிறது.

    புற ஊதா கதிர்கள் தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இவை தோலில் உள்ள கொலாஜன் உற்பத்தியை குறைத்து தோல் சுருக்கம் அடையச்செய்கிறது. நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, வெளியே சென்று வந்தாலும் சரி வெயிலில் இருந்து உங்களை பாதுகாக்க உடல் முழுவதையும் ஆடைகளால் மறைத்துக்கொள்வது நல்லது.

    புகைப்பிடிப்பது அல்லது மதுப்பழக்கம் உடையவர்களுக்கு ரத்த ஓட்டத்தை குறைத்துவிடும். இதனால் தோல்கள் பலம் இல்லாமல் தொங்க ஆரம்பித்துவிடும். இதனால் உங்களின் இளமையை தக்கவைத்துக்கொள்வதற்கு புகைப்பிடிப்பது மற்றும் மது பழக்கத்தை தவிர்த்துவிடுவது நல்லது.

    தோல் சுருங்க காரணம் நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது கொலாஜன் உற்பத்தியை குறையை செய்கிறது. எப்போழுதாவது ஒருமுறை மன அழுத்தம் ஏற்பட்டால் பிரச்சினையில்லை, அதுவே அடிக்கடி மன அழுத்தம் ஏற்பட்டால் கார்டிசோல் என்ற மன அழுத்தம் ஹார்மோனின் அதிகப்படியான சருமத்தின் கொலாஜன் மற்றும் எலாஸ்டினை பாதிக்க செய்கிறது. அதனால் மன அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் உங்களுக்கு பிடித்தவற்றை செய்து மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    தோல் சுருங்க காரணம் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு தோல் சுருக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதனால் வறண்ட சருமம் உள்ளவர்களை முகத்தை ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும். சருமம் ஈரப்பதமாக இருப்பதால் வறண்ட சருமம் ஏற்படாமலும், தோலில் சுருக்கம் ஏற்படாமலும் தடுக்கிறது.

    தோல் சுருங்க காரணம் நீங்கள் சரியாக தூங்காமல் இருந்ததால் பி.எச். நிலை ஈரப்பதம் இவை இரண்டு குறைந்து தோலின் ஆரோக்கியத்தை பாதிக்க செய்கிறது. மேலும் கொலாஜன் உற்பத்திக்கும் உதவி செய்கிறது. அதனால் சரியான நேரத்திற்கு தூங்குவது அவசியமானது.

    • இளம் பருவத்திலேயே வயதான தோற்றத்திற்கு ஆளாகிறார்கள்.
    • மது உடல் உறுப்புகளை பலவீனப்படுத்திவிடும்.

    வாழ்வின் இறுதிக்கட்டமான முதுமை பருவத்தை எதிர்கொள்வதை யாராலும் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது. ஆனால் சில தவறான வாழ்க்கை பழக்கங்களால் பலரும் விரைவாகவே முதுமைக்கு தள்ளப்படுகிறார்கள். இளம் பருவத்திலேயே வயதான தோற்றத்திற்கு ஆளாகிறார்கள். அதற்கு வித்திடும் பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.

    உணவை தவிர்ப்பது

    பிசியான வேலை, வாழ்க்கை முறை, இரவு நேர வேலை, காலையில் தாமதமாக எழுவது போன்ற காரணங்களால் சரியாக சாப்பிடாமல் இருந்தாலோ, உணவை தவிர்த்தாலோ உடலில் மாற்றம் உண்டாகிவிடும். உடலுக்கு போதுமான ஆற்றல் கிடைக்காமல் பலவீனமாகிவிடும். வயது அதிகரிப்பதற்கு அதுவும் ஒரு காரணமாகிவிடும்.

    தேநீர் பழக்கம்

    தேநீர் மற்றும் காபியில் ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆனால் அவற்றை குறிப்பிட்ட அளவிற்கு உட்கொண்டால் மட்டுமே நன்மைகளை பெற முடியும். அதிகமாக டீ மற்றும் காபி உட்கொள்வது விரைவாகவே முதுமையாக்கி விடும். பருவகால உணவுகள் பருவகால உணவுகளை கட்டாயம் உட்கொள்ள வேண்டும். அவை இயற்கை முறையில் பயிரிடப்படுவதாக இருந்தால் அதிகம் சாப்பிட வேண்டும். அவற்றுள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பிட்ட பருவத்தில் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளும்போது உடல் நலம் மேம்படும். விரைவாகவே வயதாகும் அறிகுறி எட்டிப்பார்க்காது.

    மதுப்பழக்கம்

    மது உடல் உறுப்புகளை பலவீனப்படுத்திவிடும். தொடர்ந்து மது அருந்தினால் உங்களுக்கு வேகமாகவே வயதாகிவிடும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும். வயது அதிகமான நபர் போல் தோற்றமளிக்க செய்து முதுமையை எட்டவைப்பதுடன் ஆயுளையும் குறைத்துவிடும்.

    உடல் செயல்பாடு இல்லாமை

    நீரிழிவு நோய், இதயம் சார்ந்த நோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கு உடற்பயிற்சியின்மையே காரணம். நடைப்பயிற்சியை கூட தவிர்ப்பது உடலை பலவீனப்படுத்திவிடும். பக்கத்தில் இருக்கும் இடத்திற்கு செல்வதற்கு கூட இரு சக்கர வாகனத்தை பயன்படுத்துவது நல்லதல்ல. அதனை நடைப்பயிற்சிக்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம். வயது அதிகரிக்கும்போது உடல் செயல்பாடும் அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் வயது இன்னும் அதிகரித்துவிட்டது போன்ற தோற்றம் உண்டாகிவிடும்.

    மனஅழுத்தம்

    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் கூட மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். சின்ன விஷயத்திற்கு கூட மணிக்கணக்கில் அது பற்றிய சிந்தனையிலேயே மூழ்கி மனதை பாழ்படுத்துகிறார்கள். மன அழுத்த பாதிப்பில் இருந்து சட்டென்று மீளாவிட்டால் மனதை மட்டுமல்ல உடலையும் சேதப்படுத்திவிடும். வயதாவதை துரிதப்படுத்திவிடும்.

    உணவு கட்டுப்பாடு

    மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே டயட் போன்ற உணவுக்கட்டுப்பாடுகளை பின்பற்றுவது நலம். அதனை முறையாக பின்பற்றாவிட்டால் உடலில் அதிக அழுத்தம் ஏற்பட்டு தேய்மானம் ஏற்படும். வயது அதிகரித்துவிட்ட உணர்வையும் உண்டாக்கிவிடும்.

    புகைப் பிடித்தல்

    மது அருந்துவது போல், புகை பிடிப்பதும் ஆரோக்கியத்தை மோசமாக்கும். முதுமையை வேகப்படுத்தும்.

    உணவுப் பழக்கம்

    உண்ணும் உணவு சத்தானதாக இருக்க வேண்டும். ஊட்டச்சத்து பற்றாக்குறையை உடல் எதிர்கொண்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்துவிடும். வளர்சிதை மாற்ற செயல்பாடு குறைந்துபோய்விடும். உடல் எடை அதிகரிக்க தொடங்கி, பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். வயதும் அதிகரித்தது போல் உடல் தோற்றம் மாறிவிடும்.

    ×