search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதர்மொய்தீன்"

    • இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழா நிறைவு மாநாடு டெல்லியில் நவம்பர் மாதம் 16-ந் தேதி நடைபெற உள்ளது.
    • பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையின் போது 2 தொகுதிகளை கேட்போம்.

    சென்னை:

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் அக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தலைமையில் சென்னையில் நடந்தது.

    கட்சியின் மாநில தலை வராக கே.எம்.காதர் மொய்தீன் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முகம்மது அபூ பக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான் உள்பட அடுத்த 4 ஆண்டுகளுக்காக புதிதாக தேர்வான மாநில, சார்பு அணி நிர்வாகிகளின் பெயர்களும் அறிவிக்கப்பட்டன.

    பின்னர் செய்தியாளர்களிடம் காதர் மொய்தீன் கூறியதாவது:-

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழா நிறைவு மாநாடு டெல்லியில் நவம்பர் மாதம் 16-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை அழைக்க உள்ளோம். வேப்பூர் அருகே முஸ்லிம் லீக் சார்பில் நவம்பர் 4-ந் தேதி மருத்துவ கல்லூரி தொடங்கப்படுகிறது. தொடக்க விழாவில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்தியா கூட்டணி உருவான நாளில் இருந்து பிரதமர் பேச்சில் குழப்பம் அதிகமாக உள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தலில் தாங்கள் தோல்வியை தழுவப் போவதாக அவர்களே கூறுகிறார்கள். பாராளுமன்ற தேர்தலிலும் அதே நிலை தான் ஏற்படும். முஸ்லிம்களை இந்திய மக்களாக அங்கீகரிக்க மறுக்கிறார்கள். அதனாலேயே பா.ஜனதாவுக்கு முஸ்லிம் மக்களின் ஓட்டு செல்வதில்லை.

    அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி முறிவு ஒரு நாடகம். முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்வதில் தன்னால் இயன்றதை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்து உள்ளார். விடுதலை செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியல் அவர்களுக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்து உள்ளது. இது தொடர்பாக கவர்னர், உள்துறை மந்திரியை சந்தித்து வலியுறுத்துவோம்.

    பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையின் போது 2 தொகுதிகளை கேட்போம். தற்போது ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்றிருப்பதால் அந்த தொகுதி வழங்கப்படும் என்று நம்புகிறோம். அடுத்து திருச்சியை கேட்டுப் பெறுவோம். வேலூர் தொகுதியை இது வரை நாங்கள் கேட்கவில்லை. நாங்கள் கேட்கும் தொகு தியை தி.மு.க. வழங்காமல் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×