search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால் பாயாசம்"

    • பாலகிருஷ்ணனை வெள்ளித் தொட்டிலில் இட்டு தாலாட்டு பாடி தூங்க வைக்கிறார்கள்.
    • கிருஷ்ண ஜெயந்தி அன்று நள்ளிரவில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி அருகே உள்ளது கிருஷ்ணன் கோவில் என்ற ஊர்.

    இங்கு அழகான கிருஷ்ணன் கோவில் ஒன்று அமைந்துள்ளது.

    இந்த கோவில் இங்கு அமைந்துள்ளதாலேயே அந்த ஊருக்கு கிருஷ்ண கோவில் என பெயர் வந்தது.

    இங்கு உள்ள மூலவர் "பாலகிருஷ்ணன்" குழந்தை வடிவில் நின்றபடி காட்சி அளிக்கிறார்.

    அவர் தன் இரு திருக்கரங்களிலும் வெண்ணெய் வைத்துள்ளார். கிழக்கு பார்த்த வண்ணம் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    இக்கோவிலில் உள்ள பாலகிருஷ்ணனை நாம் தரிசிக்கும் போது,

    நம் வீட்டுப்பிள்ளை இருகைகளில் வெண்ணெய் வைத்துக் கொண்டு நிற்பது போன்று காட்சி அளிக்கிறார்.

    இந்த குழந்தை பாலகிருஷ்ணன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வரங்களை வாரி வாரி வழங்குகிறார்.

    இத்தலத்தில் இரவு நேர பூஜையின் போது தினமும் பாலகிருஷ்ணனை வெள்ளித் தொட்டிலில் இட்டு தாலாட்டு பாடி தூங்க வைக்கிறார்கள்.

    குழந்தைக்கிருஷ்ணனை தூங்க வைப்பதற்கு முன் கிருஷ்ணனுக்கு சார்த்தப்பட்ட வெண்ணெய் மற்றும் கிருஷ்ணனுக்கு நிவேதித்த பாலை பக்தர்களுக்கு பிரசாதமாக தருகிறார்கள்.

    தொடர்ந்து மூன்று அஷ்டமி நாட்கள் அல்லது ரோகிணி நட்சத்திர நாட்களில் இக்கோவிலுக்கு வந்து "பால கிருஷ்ணனை" வழிபட்டு,

    வெண்ணெய் பாலும் வாங்கி உண்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    கிருஷ்ணர் பிறந்தது நள்ளிரவில் என்பதால் இங்கு ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று

    நள்ளிரவில் பாலகிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    மேலும் இங்கு துலாபார பிரார்த்தனைக்கும் தனி இடம் உள்ளது.

    நாகர்கோவில், வடசேரி பஸ்நிலையத்தில் இருந்தவட மேற்கு திசையில் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    இங்கு செல்வதற்கு நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம்,

    வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையங்களில் இருந்து ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.

    • தாயார் சன்னதி அருகே பெருமாள் சன்னதி எதிரே பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார்.
    • புத்திர பாக்கியத்திற்காக இவளிடம் தொட்டில் வளையம் கட்டும் வழக்கமும் உள்ளது.

    தமிழ்நாட்டில் மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    ராஜகோபாலர் இக்கோவிலில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார்.

    ஒரு வேட்டி அணிந்து அதையே தலைப்பாகையாகச் சுருட்டி, வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து காட்சி தருகிறார்.

    இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை, கொலுசு, ஆகிய குழந்தை அணிகலன்கள் அணிந்திருக்கிறார்.

    உடன் ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன.

    தாயார் சன்னதி அருகே பெருமாள் சன்னதி எதிரே பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார்.

    மதுரை கள்ளழகர் கோவில் போல, தினமும் மாலையில் மட்டும் தோசை நைவேத்யம் படைக்கப்படுகிறது.

    ஒரு சமயம் கிருஷ்ணன், யமுனையில் நீராடிக்கொண்டிருந்த கோபியருக்கு இடையே ஒரு போட்டி வைத்தார்.

    கோபியர் நீராடிவிட்டு தங்களது ஆடை, ஆபரணங்களை சரியாக அணிந்து கொள்ள வேண்டும் என்பதே போட்டி.

    அந்த போட்டி தொடங்கியதும், கிருஷ்ணர், ஒரு கோபியின் கம்மலை எடுத்து அணிந்து கொண்டார்.

    கோபியர்களோ அதைக் கவனிக்காமல் தேடிக் கொண்டே இருந்தனர்.

    இறுதியில் கண்ணனின் காதில் அது இருக்கும் அழகைப் பார்த்து நகைத்து, ஆனந்தம் கொண்டனர்.

    இதன் அடிப்படையில் இங்கு ராஜகோபாலர் வலது காதில் குண்டலமும், இடது காதில் தாடங்கமும் அணிந்திருக்கிறார்.

    இவருக்கு பால் பிரதான நைவேத்யமாக படைக்கப்படுகிறது. இதையே பிரசாதமாகவும் தருகின்றனர்.

    இத்தலத்தில் உள்ள பெண் வடிவ கருடாழ்வாருக்கு நெய்தீபம், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால்

    திருமண தோஷம் புத்திரதோஷம் விலகிவிடும்.

    இங்குள்ள துர்க்கைக்கு ராகு காலத்தில் விசேஷ பூஜை, வழிபாடு நடக்கிறது.

    புத்திர பாக்கியத்திற்காக இவளிடம் தொட்டில் வளையம் கட்டும் வழக்கமும் உள்ளது.

    • 100 ஆண்டுகளுக்கு முன், ஆயிரம் வீட்டு யாதவர்களால் கட்டப்பட்ட ஆலயம் இது என்கிறார்கள்.
    • இரண்டு கரங்களிலும் வெண்ணை ஏந்திய கோலத்தில் அருள்கிறார் ஸ்ரீ நவந்தகிருஷ்ணன்.

    மதுரையில் இரண்டாவது கிருஷ்ணர் குடியிருப்பது ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவிலை சுற்றிலும் உள்ள மாசி வீதிகளில்,

    வடக்கு மாசி வீதியின் மையப் பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணர் ஆலயமாகும்.

    சுமார் 100 ஆண்டுகளுக்கு முன், ஆயிரம் வீட்டு யாதவர்களால் கட்டப்பட்ட ஆலயம் இது என்கிறார்கள்.

    முழுக்க முழுக்க கல் கட்டுமானமாக கோவில் அமைந்திருப்பது சிறப்பு.

    மீனாட்சியம்மன் கோவிலின் வடக்கு கோபுரத்தின் திசையில் உள்ளதால் வடக்கு கிருஷ்ணன் கோவில் என்றும்,

    ஆரம்ப காலத்தில் கம்பத்தின் அடியில் கிருஷ்ணன் வீற்றிருந்ததால், கம்பத்தடி கிருஷ்ணன் கோவில் என்றும் அழைக்கிறார்கள்.

    இரண்டு கரங்களிலும் வெண்ணை ஏந்திய கோலத்தில் அருள்கிறார் ஸ்ரீ நவந்தகிருஷ்ணன்.

    பாமா, ருக்மணி தேவியரும் உடனிருக்கிறார்கள்.

    இவருக்கு ஒரு சிறப்பு உண்டு.

    குருவாயூரப்பன் கோவிலுக்குச் சென்று குழந்தைக்கு சோறூட்டுவதாக வேண்டிக் கொண்டு (அன்னப்ரசன்னம்),

    அங்கு செல்ல இயலாதவர்கள் இந்த ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் சந்நிதியில் அந்த வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

    புத்திரதோஷம் உள்ளவர்கள் இந்த கிருஷ்ணனை மனதாரப் பிரார்த்தித்து,

    அவருக்கு கொலுசு அணிவிப்பதாகவும், கோவிலில் தொட்டில் கட்டுவதாகவும் வேண்டிக் கொண்டால்,

    விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    தமிழகத்திலேயே மிக உயரமான (சுமார் 38 அடி உயரம்) வழுக்கு மரம் அமைத்து, வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெறுகிறது.

    9ம் நாளன்று 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்க, முளைப்பாரி உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    அன்று ஆசியாவிலேயே மிள நீளமானது என்ற சிறப்புக்குரிய இந்தக் கோவிலின் புதிய பல்லக்கில் உலா வருவார் கிருஷ்ணர்.

    15 நாட்கள் கிருஷ்ணா ஜெயந்தி விழா இத்தலத்தில் நடத்தப்படுகிறது.

    • சந்தானகிருஷ்ணன் கோலத்தில் அருளும் இறைவனைத் தரிசிக்கக் கண்கள் இரண்டு போதாது.
    • இதில் கலந்து கொண்டு நவநீதகிருஷ்ணனை வழிபட, நினைத்ததெல்லாம் நடந்தேறும்.

    மீனாட்சி அரசாளும் மதுரையில் 2 கிருஷ்ணர் தலங்கள் சிறப்புடன் திகழ்கின்றன.

    மதுரை தல்லாகுளம் பகுதியில் நவ நிதிகளையும் அள்ளித்தரும் ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோவில் உள்ளது.

    சனிக்கிழமை தரிசனம் இங்கே விசேஷம்.

    திருமேனி முழுவதும் சந்தனக்காப்பும் திருக்கரத்தில் வெள்ளி புல்லாங்குழலுமாக,

    சந்தானகிருஷ்ணன் கோலத்தில் அருளும் இறைவனைத் தரிசிக்கக் கண்கள் இரண்டு போதாது.

    வியாழக்கிழமைகளில் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும்.

    இதில் கலந்து கொண்டு நவநீதகிருஷ்ணனை வழிபட, நினைத்ததெல்லாம் நடந்தேறும்.

    படிப்பு, குழந்தை பாக்கியம், குடும்ப நன்மை, திருமண யோகம் என சகல நன்மைகளையும் அள்ளித் தருவார் நவநீதகிருஷ்ணன்.

    ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி இங்கே மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    • பூமிக்குள் இருந்து அழகிய ஸ்ரீவேணுகோபால விக்கிரகம் வெளிப்பட்டது.
    • விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும், பிள்ளை வரம் பெறுவார்கள் என்கின்றனர்.

    1917ஆம் வருடம், வேதாரண்யம் அருகில் உள்ள திருத்துறைப்பூண்டி கிராமத்தில் சிவாலயத்துக்கு அருகில் பூமியைத் தோண்டும்போது,

    பூமிக்குள் இருந்து அழகிய ஸ்ரீவேணுகோபால விக்கிரகம் வெளிப்பட்டது.

    அரசாங்க அனுமதியுடன் அதைச் சென்னைக்கு எடுத்து வந்து, இப்போது கோவில் உள்ள கோபாலபுரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அன்று துவங்கி, இன்றளவும் தன்னை நாடி வருவோருக்கெல்லாம் வள்ளலென அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீ வேணுகோபால சாமி.

    அழகிய பசு நின்றிருக்க, நான்கு திருக்கரங்களில் புல்லாங்குழல் மற்றும் சங்கு, சக்கரங்களுடன்,

    அழகுறக் காட்சி தரும ஸ்ரீ வேணுகோபாலரை தரிசித்துக் கொண்டே இருக்கலாம்.

    இந்த ஆலயத்தில் திருமாலின் பத்து அவதாரங்களையும் சித்தரிக்கும் வகையிலான வெள்ளிக்கவசம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஆலயத்தின் இன்னொரு சிறப்பு, முழுவதும் தங்கத்தால் ஆன மண்டபம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மண்டபத்தை ஒட்டி, ஸ்ரீநரசிம்மரும், ஸ்ரீசக்கரத்தாழ்வாரும் அருகில் ஸ்ரீவராகமூர்த்தியும் காட்சி தருகின்றனர்.

    வருடம் முழுவதும் விழாக்கள் நடைபெறும் ஆலயம் என்றாலும், ஸ்ரீகிருஷ்ணரின் ஜன்ம நட்சத்திரமான,

    கோகுலாஷ்டமி நாள் இங்கே சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.

    கோவிலில் உள்ள அரச மரம் சிறப்புக்குரிய ஒன்று.

    இந்த மரத்தில் ஸ்ரீசிவபெருமான், ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா ஆகிய மூவரும் உறைந்திருப்பதாக நம்பிக்கை.

    திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அமாவாசையுடன் சேர்ந்த திங்களன்று (அமாவாசை சோமாவாரம் என்பார்கள்) இந்த மரத்தை வழிபட்டு வர,

    விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும், பிள்ளை வரம் பெறுவார்கள் என்கின்றனர்.

    • 1 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் கடந்த 2012ம் ஆண்டு திறக்கப்பட்டது.
    • இந்த ஆலயம் முழுவதும் கற்சிற்பங்களால் நிறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இஸ்கான்

    சென்னையில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் மிகப்பெரியது ஈ.சி.ஆர். சாலையில் அக்கரையில் அமைந்துள்ள இஸ்கான் ஆலயமாகும்.

    1 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ந்தேதி திறக்கப்பட்டது.

    காலை 7.15 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த ஆலயம் திறந்து இருக்கும்.

    மகாபலிபுரம்

    மகாபலிபுரத்தில் உள்ள கோவில்களில் மிகப்பெரிய கோவில் கிருஷ்ணர் கோவிலாகும்.

    இந்த தலத்தில் உள்ள கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தன் விரலில் தாங்கிப் பிடித்து இருப்பதாக ஐதீகம்.

    இந்த ஆலயம் முழுவதும் கற்சிற்பங்களால் நிறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மகாபலிபுரத்துக்கு சுற்றுலா செல்பவர்கள் தவறாமல் இந்த கிருஷ்ணர் ஆலயத்துக்கு சென்று வந்தால்,

    பொழுதுபோக்கோடு, புண்ணியத்தையும் பெற முடியும்.

    • அவரது வலது பக்கம் அண்ணன் பலராமன், இடது பக்கம் தம்பி சாத்யகி வீற்றிருக்கிறார்கள்.
    • கருவறையில் வேங்கட கிருஷ்ணர் அருகில் ருக்மணி தாயார் உள்ளார்.

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் குடும்பத்தினர் அனைவருடனும் ஸ்ரீ கிருஷ்ணர் உள்ளார்.

    கருவறையில் வேங்கட கிருஷ்ணர் அருகில் ருக்மணி தாயார் உள்ளார். மார்பில் மகாலட்சுமி இருக்கிறார்.

    அவரது வலது பக்கம் அண்ணன் பலராமன், இடது பக்கம் தம்பி சாத்யகி வீற்றிருக்கிறார்கள்.

    ஸ்ரீ கிருஷ்ணரின் மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அனிருத்தன் ஆகியோரும் ஒருங்கே உள்ளனர்.

    தனி சன்னதியில் உள்ள ராமருடன் சீதை, லட்சுமணர், பரதன், சத்ருகன் மற்றும் ஆஞ்சநேயர் இருக்கிறார்கள்.

    இப்படி கிருஷ்ணர் குடும்பத்தினருடன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த தலத்தில் உள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயர் மிகவும் விசேஷமானவர்.
    • எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.

    ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும்,

    சென்னிமலையில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது கிருஷ்ண பெருமாள் ஆலயம்.

    சுமார் 500 வருடங்கள் பழமை மிக்க திருக்கோவில் இது.

    ஸ்ரீ கிருஷ்ணரின் விக்கிரக மூர்த்தமானது, பன்னெடுங்காலத்துக்கு முன்பு சுயம்புவாக தோன்றியதாகும்.

    இவருக்கு அவல் நைவேத்தியம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    திருமண வரம் கைகூடும். நஷ்டத்தில் இயங்கி வந்த வியாபாரம் லாபம் கொழிக்கும்.

    இந்த தலத்தில் உள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயர் மிகவும் விசேஷமானவர்.

    இவருக்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை சாத்தி பிரார்த்தித்தால் மனக்கிலேசங்கள் அனைத்தும் விலகிவிடும்.

    எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.

    ஸ்ரீகிருஷ்ணபெருமாளுக்கு சர்க்கரை பொங்கல், பால், வெண்ணெய் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து,

    வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் விரைவில் நடந்தேறும்.

    ஸ்ரீ கிருஷ்ணபெருமானை வணங்கிவிட்டு தொழிலை தொடங்கினால் வியாபாரம் சீரும் சிறப்புமாக நடைபெறும்.

    • இந்த தலத்தில் நான்கு திருக்கரங்களோடு அழகுற தரிசனம் தருகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.
    • திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும்,

    வேலூர் மாவட்டம் சோளிங்கரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது வேப்பங்கொண்டபாளையம்.

    ஒருகாலத்தில் வேணுகோபாலபுரம் என அழைக்கப்பட்ட இந்த ஊரின் சாலையோரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீகிருஷ்ணன் கோவில்.

    இந்த தலத்தில் நான்கு திருக்கரங்களோடு அழகுற தரிசனம் தருகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

    இதனால் இவரை ஸ்ரீசதுர்புஜ கிருஷ்ணர் என்று போற்றுகின்றனர்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மாதந்தோறும் ரோகிணி நட்சத்திரத்தன்று இங்கு வந்து,

    திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப்பெறுவர் என்கின்றனர் இந்த ஊர்க்காரர்கள்.

    ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நாளில் திருவீதி உலா, சிறப்பு பூஜைகள், உறியடி உத்சவம் என இந்த தலம் அமர்க்களப்படும்.

    • கோகுலாஷ்டமி திருநாளில், இந்த வேணுகோபாலனைத் தரிசிக்க, வேண்டியது கிடைக்கும்.
    • பஞ்ச கிருஷ்ணாரண்ய தலங்களில் ஒன்று திருக்கோவிலூர்.

    பஞ்ச கிருஷ்ணாரண்ய தலங்களில் ஒன்று திருக்கோவிலூர்.

    திருக்கோவிலூர் கோவிலில், சத்யபாமா, ருக்மணி தேவியருடன் சாளக்கிராம மேனியராக அருள்கிறார் ஸ்ரீ வேணுகோபாலன்.

    இவரையே ஆதி சேஷாத்திராதி பதியாகக் கருதுவதால், பெரும்பாலும் இவரை முதலில் தரிசித்து விட்டே உலகளந்த பெருமாளை தரிசிக்கச் செல்கிறார்கள் பக்தர்கள்.

    பிரம்மோற்சவ காலத்தில் 10 நாளும் உற்சவம் நிகழும்.

    ரோகிணியில் ஸ்ரீ வேணுகோபாலனுக்குத் திருமஞ்சனம், புறப்பாடு, சேவை சாற்றுமுறை நடைபெறுகிறது.

    ஆவணி மாத வருச உற்சவமும் சிறப்பு நடைபெறும்.

    கோகுலாஷ்டமி திருநாளில், இந்த வேணுகோபாலனைத் தரிசிக்க, வேண்டியது கிடைக்கும்.

    • குழந்தை கண்ணனுக்கு பால் பாயசம் என்றால் கொள்ளைப் பிரியம்.
    • இங்கு, கிருஷ்ண ஜெயந்தி மூன்று நாள் விழாவாக விமரிசையாகக் கொண்டாப்படுகிறது.

    திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது பீமநகர்.

    இங்கே, ஹீபர் ரோட்டில் உள்ளது ஸ்ரீ வேணு கோபாலகிருஷ்ணன் கோவில்.

    குழந்தை கண்ணனுக்கு பால் பாயசம் என்றால் கொள்ளைப் பிரியம்.

    எனவே, குழந்தை பாக்கியம் வேண்டுவோரும், வியாபாரம் சிறக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்வோரும்

    பால் பாயசம் நைவேத்தியம் செய்து, ஸ்ரீகிருஷ்ணரைத் தரிசித்தால்,

    நம் வாழ்க்கையையே இனிக்கச் செய்வான் ஸ்ரீகண்ணன் என போற்றுகின்றனர்.

    மாதம் தோறும் ரோகிணி நட்சத்திர நாளில், ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    இதில் கலந்து கொண்டு, வெண்ணை அல்லது பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட்டால்,

    மனவளர்ச்சி குன்றியவர்கள், விரைவில் நலம் பெறுவார்கள். பூரண குணம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

    இங்கு, கிருஷ்ண ஜெயந்தி மூன்று நாள் விழாவாக விமரிசையாகக் கொண்டாப்படுகிறது.

    அன்றைய நாளில் சிறப்பு ஹோமங்கள், உறியடி உத்சவம், புஷ்பாஞ்சலி என அமர்க்களப்படும்.

    ×