என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உள்நாட்டு விமான கட்டணம்"
- விமான நிறுவனங்கள் தன்னுடைய வருமானத்தில் 45 சதவீதத்தை எரிபொருளுக்காகவே செலவு செய்யப்படுகிறது.
- மற்ற விமான நிறுவனங்களும் தங்களுடைய விமான டிக்கெட் கட்டணத்தை விரைவில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலந்தூர்:
சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் உள் நாட்டு விமான சேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரும்பாலானோர் தற்போது விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள்.
விமான நிறுவனங்கள் தன்னுடைய வருமானத்தில் 45 சதவீதத்தை எரிபொருளுக்காகவே செலவு செய்யப்படுகிறது. மேலும் எரிபொருளின் விலை கடந்த மூன்று மாதங்களாக உயர்வை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் எரி பொருள் விலை உயர்வு காரணமாக முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் இன்று முதல் விமான கட்டணத்தை ரூ.300 முதல் ரூ.1000 வரை உயர்த்தி உள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த கட்டண உயர்வு முதல் 500 கிலோ மீட்டர் வரை ரூ.300 ,501 கி.மீ - 1000 கிலோமீட்டர் வரை ரூ.400, 1001- 1500 கி.மீட்டர் வரைரூ.550, 1501 -2500 கி.மீட்டர் வரை ரூ.650, 2501-3500 கி.மீட்டர் வரை ரூ.800, 3500 கிலோமீட்டருக்கு மேல் ரூ.1000 என்ற அளவில் உயர்த்தப்பட்டு உள்ளது.
இண்டிகோ விமான நிறுவனத்தின் விமான டிக்கெட் கூடுதல் கட்டணம் உயர்வை முன்னிட்டு, மற்ற விமான நிறுவனங்களும் தங்களுடைய விமான டிக்கெட் கட்டணத்தை விரைவில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.