என் மலர்
நீங்கள் தேடியது "காவிரி தனித்தீர்மானம்"
- மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தண்ணீர் கிடைப்பது சிரமமாகவே உள்ளது.
- தனித்தீர்மானத்தை ஆதரிக்கிறோம். கர்நாடகாவில் இருந்து தண்ணீரை பெற அதிமுக துணை நிற்கும்.
காவிரி விவகாரம் தொடர்பான தனித்தீர்மானம் மீது எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி பிரச்சினை 50 ஆண்டுகால பிரச்சினை. காவிரி நீரை பெறுவதற்கான பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் தமிழகத்தின் ஜீவநதி, தமிழகத்தின் உயிர் நாடி.
20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக காவிரி உள்ளது. காவிரி நீரை பெறுவதற்காக பல வழக்குகள் தொடுக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்று தடை ஆணை பெற்றார்கள்.
உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வேண்டும். நமக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா உரிய முறையில் திறந்து விடுவது தான் நியாயமானது. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற வார்த்தையை தீர்மானத்தில் இணைக்க வேண்டும்
பயிற்கள் கருகிவிட்டது. அதற்கு யார் பொறுப்பு. திமுக எம்.பி.க்கள் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றபோது நட்பின் அடிப்படையில் கேட்டிருக்கலாம். எங்களிடம் இருந்த துணிச்சல் ஏன் உங்களிடம் இல்லை.
தேசிய கட்சிகள் இரட்டை நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். அதிகமான அழுத்தத்தை கொடுத்தால் தான் தீர்வு கிடைக்கும் என சொல்கிறேன். இதில் என்ன தவறு உள்ளது. விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
ஒரு ஹெக்டருக்கு ரூ.13,500தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அது போதாது. கர்நாடகாவில் தேசிய கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி புரிகின்றன. மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தண்ணீர் கிடைப்பது சிரமமாகவே உள்ளது.
தனித்தீர்மானத்தை ஆதரிக்கிறோம். கர்நாடகாவில் இருந்து தண்ணீரை பெற அதிமுக துணை நிற்கும்.
கவனமாக இருந்து தண்ணீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். முழு மனதோடு செயல்பட்டால் தான் தண்ணீர் கிடைக்கும். அடுத்த 6 மாத குடிநீர் தேவைக்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?
இவ்வாறு அவர் கூறினார்.