என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளிக்கரணை சதுப்பு நிலம்"
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன
- தற்போது பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிக்கு சாம்பல்தலை, மஞ்சள் வால்பறவை, நீலசிறகு வாத்து, தட்டைவாயன் உள்ளிட்ட அரிய வகை பறவைகள் வரத்தொடங்கி பரவலாக காணப்படுகிறது.
தாம்பரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன. மேலும் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியிலும் போதுமான தண்ணீர் தேங்கி பசுமையாக காணப்படுகிறது.
வழக்கமாக பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை தரும் வலசை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பிற்பகுதியில் தொடங்கும். கடந்த சில ஆண்டுகளாக அக்டோபர் மாதம் தொடக்கத்திலேயே அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கி இருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இவை வந்து செல்லும்.
இந்த நிலையில் தற்போது பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிக்கு சாம்பல்தலை, மஞ்சள் வால்பறவை, நீலசிறகு வாத்து, தட்டைவாயன் உள்ளிட்ட அரிய வகை பறவைகள் வரத்தொடங்கி பரவலாக காணப்படுகிறது. வரும் நாட்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பறவைகள் நல ஆர்வலர் ஒருவர் கூறும்போது, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையால் பல நீர்நிலைகள் தண்ணீரால் நிரம்பி உள்ளன. எனவே இந்த ஆண்டு வெளிநாடுகளில் இருந்து இடம்பெயர்ந்து வரும் பறைவகள் வருவை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழை போதிய உணவுகளை பறவைகளுக்கு உறுதி செய்து உள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு கர்கேனி மற்றும் தட்டைவாயன் போன்ற வாத்து இனங்கள் வந்து உள்ளன. ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவை கடந்து பறவைகள் வரும் என்றார்.
- பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வனத்துறை டெண்டர் கோரி உள்ளது.
- டெண்டர் இறுதி செய்யப்பட்டு அடுத்த மூன்று மாதத்திற்குள் சீரமைப்பு பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21 கோடி செலவில் சீரமைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வனத்துறை டெண்டர் கோரி உள்ளது.
டெண்டர் இறுதி செய்யப்பட்டு அடுத்த மூன்று மாதத்திற்குள் சீரமைப்பு பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாக்கம் கால்வாய் பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுதல், சதுப்பு நில பகுதியை சுற்றி கரைகள் அமைத்தல், ஆகாயத்தாமரைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளப்படவுள்ளன.
- சதுப்பு நில பகுதியில் ஆக்கிரமித்து கட்டி இருந்த 47 வீடுகளை அகற்ற நோட்டீசு வழங்கப்பட்டது.
- வீடுகள் இடிக்கப்படுவதை கண்டதும் லட்சுமி என்பவர் மயங்கி விழுந்தார்.
சோழிங்கநல்லூர்:
துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம், வி.பி.ஜி. அவென்யூ மகாலட்சுமி நகர் பகுதியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள், கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.
இதனை அகற்ற வனத்துறையினர் முடிவு செய்த போது ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து சதுப்பு நில பகுதியில் ஆக்கிரமித்து கட்டி இருந்த 47 வீடுகளை அகற்ற நோட்டீசு வழங்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளை அகற்றாமல் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்ற ஜே.சி.பி.எந்திரத்துடன் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளு டன் கடும் வாக்குவாதம் செய்தனர்.
மேலும் வீடுகளை இடிக்க விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களிடம் துரைப்பாக்கம் போலீசார் மற்றும் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பத்மா, பன்னீர்செல்வம், ராஜா உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
வீடுகள் இடிக்கப்படுவதை கண்டதும் லட்சுமி என்பவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கைதான அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
பின்னர் சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 47 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டது. சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.