search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வராக அவதாரம்"

    • யாத்திரை சென்றவர் மனம் தெளிந்து மனைவியை ஏற்றுக் கொண்ட தலம் இதுவேயாகும்.
    • அவளே இவள் என்று இறைவனே அடையாளம் காட்டிய தலம் ஆதலால் இத்தலம் அவளிவணல்லூர் என்று ஆகியுள்ளது.

    அவளிவணல்லூர் என்னும் தலம் சாலியமங்கலத்தில் இருந்து வடகிழக்கே பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

    வைசூரி மற்றும் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளை நீக்கும் புனிதத்தலமாக இத்தலம் விளங்குகிறது.

    இத்தலத்தினில் பணி செய்து வந்த பூஜை குருக்களுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள்.

    அவர்களில் மூத்தவளை ஒருவர் திருமணம் செய்து கொண்டார்.

    அந்த கால கட்டத்தில் அவர் தீர்த்த யாத்திரை போக வேண்டியிருந்ததால் தன் மனைவியை தன் மாமனாரான பூஜை குருக்களின் இல்லத்தில் தங்கும்படி விட்டுச் சென்றார்.

    அவர் தீர்த்தயாத்திரையில் இருந்த போது அவருடைய மனைவிக்கு வைசூரி கண்டு கண்கள் குருடாகி விட்டன.

    அவருடைய தோற்றமும் மாறிப்போயிருந்தது.

    தீர்த்த யாத்திரையையெல்லாம் முடித்துக் கொண்டு தன் மனைவியை அழைத்துப் போக அவர் வந்தபோது தன்னுடைய மனைவியை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் அவளுடைய தங்கையை மனைவி என்று நினைத்து அழைத்து போக எண்ணினார்.

    மாமனார் அவள் உன் மனைவி அல்ல.

    இவளே உன் மனைவி என்று குருடியாக இருந்தவளைக் காட்டினார்.

    அதனை நம்ப மறுத்த அவர் மனைவியின் தங்கையே தன்னுடைய மனைவி என்றும்,

    தான் தீர்த்த யாத்திரை முடிந்து வந்து கேட்கும்போது யாரோ ஒருத்தியை என் தலையில் கட்டப் பாார்க்கிறார் என்றும் அவர் ஊர் நடுவே சென்று புகார் செய்தார்.

    பூஜை குருக்கள் வருந்தியபடி இறைவனை வேண்ட இறைவன் இடபாாரூடராக அங்கு தோன்றி உன் மனைவியாகிய அவளே இவள் என்று பாார்வையற்ற பெண்ணை அடையாளம் காட்டியருளினார்.

    மேலும் அந்த பெண்ணை அங்கிருந்த தீர்த்தத்தில் மூழ்கச் செய்து கண்ணைக் கொடுத்து அருள் புரிந்தார்.

    வைசூரியால் ஏற்பட்ட வடுக்கள் எல்லாம் மாறி அவள் முன்பு போலவே திகழ்ந்தாள்.

    யாத்திரை சென்றவர் மனம் தெளிந்து மனைவியை ஏற்றுக் கொண்ட தலம் இதுவேயாகும்.

    அவளே இவள் என்று இறைவனே அடையாளம் காட்டிய தலம் ஆதலால் இத்தலம் அவளிவணல்லூர் என்று ஆகியுள்ளது.

    இந்த வரலாற்றினை மனதில் நிறுத்தி எம்பெருமானை மனம் உருகி வேண்டினால் வைசூரி மற்றும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும் என்பது இங்கு பிரசித்தமாக விளங்கி வருகிறது.

    மேலும் வராக அவதாரம் எடுத்து பூமியினை அசுரனிடமிருந்து மீட்ட திருமால் அந்தப் பணி முடிந்த பிறகும் ஆவேசம் அடங்காமல் ஆர்ப்பாாட்டம் செய்தார்.

    அதன் காரணமாக உயிர்களுக்கு நாசம் ஏற்பட்டது.

    அப்போது எம்பெருமான் தோன்றி அந்த வராகத்தினை எம்பெருமானுக்கு வாகனமாக்கி கொண்டார்.

    இந்த ரிஷபாாருடராக எம்பெருமான் காட்சி தருவது தருமத்திற்கு வெற்றி தருவதற்காக என்கிற தத்துவத்தை முன்னிலைப்படுத்துவதாகும்.

    நோய்கள் விலகுவதோடு மனதிலே ஏற்பட்டிருக்கும் குழப்பங்களை தீர்த்தருளும் திருத்தலமாகவும் இது விளங்குகிறது.

    • வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும்.
    • இதில் இவர் காட்டுப்பன்றி அவதாரம் எடுத்தார்.

    வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும்.

    இதில் இவர் காட்டுப்பன்றி அவதாரம் எடுத்தார்.

    பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன், வராக அவதாரத்தில், விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்.

    பரிணாம வளர்ச்சியின் கொள்கைப்படி நீரிலும் நிலத்திலும் வாழ்ந்து கொண்டு இருந்தவை நிலத்தில் வாழ்பவையாக ஒரு காலக் கட்டத்தில் இருந்தவை முற்றிலும் நிலத்தில் வாழ்பவையாக மாறின என்று சொல்கிறார்கள்.

    அதற்கு ஏற்றபடி, இரணியாசுரன் எனும் அரக்கனிடமிருந்து பூமியை காப்பற்ற திருமால் எடுத்த மூன்றாவது அவதாரமாக வராக அவதாரத்தை புராணங்கள் கூறுகின்றன.

    • திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக் காண பூமியைக் குடைந்து சென்றார்.
    • பிரம்மன், முடியைக் கண்டதாக, தாழம்பூவிடம் பொய் சொல்ல சொல்லும்படி கூறினார்.

    படைக்கும் கடவுளாகிய பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளாகிய திருமாலுக்கும்,

    இருவருமே பெரியவர்கள் என்று தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு,

    சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க,

    சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக்கூற,

    திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக் காண பூமியைக் குடைந்து சென்றார்.

    அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார்.

    பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார்.

    முடியைக் காண இயலாமல் தயங்கி, பறக்கும்போது சிவன் தலைமுடியில் இருந்து தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டு, அதனிடம் சிவன் முடியை காண எவ்வளவு தூரம் உள்ளது என்று கேட்க,

    தாழம்பூ தான் சிவனாரின் சடையில் இருந்து நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டிருக்கிறேன் என்று கூற,

    பிரம்மன் முடியைக் காணும் முயற்சியை விடுத்து தாழம்பூவிடம் ஒரு பொய் சொல்லும்படி கூறினார்.

    திருமாலிடம், சிவன் முடியை பிரம்மன் கண்டதாக சாட்சி சொல்லும்படி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தாழம்பூ பொய் சாட்சி சொல்ல,

    முற்றும் உணர்ந்த சிவபெருமான், பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும்,

    பொய்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜைக்கு உதவாது என்றும் சாபமிட்டார்.

    திருமாலும், பிரம்மனும் தான் என்ற அகந்தை நீங்கிட உலகுக்கு உணர்த்த சிவபெருமான் அடியையும், முடியையும் காணமுடியாத ஜோதி பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை.

    அது மஹாசிவராத்திரி நாளாகும்.

    இங்குள்ள அண்ணாமலையானது கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும்,

    துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி வந்துள்ளது.

    ஜோதி பிழம்பாக இருந்த சிவபெருமானை,  திருமாலும், பிரம்மனும் பணிந்து பிரார்த்திக்க, அவர்களின் பிரார்த்தனைக்கு இறங்கி,

    சிவபெருமானே சிவலிங்க திரு உருக்கொண்டு மலையின் அடிப்பாகத்தில் அடைந்துள்ள இடமே இத்திருக்கோவில் ஆகும்.



    ×