என் மலர்
நீங்கள் தேடியது "இடுக்குப் பிள்ளையார் கோவில்"
- அந்த இடுக்கை மேலோட்டமாகப் பார்த்தால், நாம் இதற்குள் நுழையவே முடியாது என்றுதான் தோன்றும்.
- நரம்புக் கோளாறுகள், ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட பல உபாதைகள் விலகிவிடும்.
இடைக்காட்டுச் சித்தர் கிரிவல பாதையில் உள்ள ஒரு மண்டபத்தில் மூன்று யந்திரங்களைப் பிரதிஷ்டை செய்துள்ளார்.
இவற்றை நாம் நெருங்கினாலே போதும், யந்திரங்களின் ஆகர்ஷண சக்தி நம்மீது பரவ,
நம் உடலில் உள்ள நரம்புக் கோளாறுகள், ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட பல உபாதைகள் விலகிவிடும் என்கிறார்கள்.
ஆனால் ஒரே ஒரு பிரச்சினை, சித்தர் பிரதிஷ்டை செய்த அந்த யந்திரங்களின் மீது ஒரு சிறிய கோபுரம் உள்ளது.
அதற்குள் நாம் நுழைந்து வரவேண்டும்.
அந்த இடுக்கை மேலோட்டமாகப் பார்த்தால், நாம் இதற்குள் நுழையவே முடியாது என்றுதான் தோன்றும்.
ஆனால் ஒருக்களித்துப் படுத்த நிலையில் இடுக்கின் ஒருபுறமாகத் தலையையும் ஒரு கையையும் உள்ளே நுழைக்க வேண்டும்.
பின்னர் மறுபுறமிருந்து உந்தித் தள்ளி வெளியே வரவேண்டும்.
வயிற்றுப் பகுதியில் லேசாக அழுத்தும், அவ்வளவுதான்! அடுத்த பக்கம் வந்து விடலாம்.