என் மலர்
நீங்கள் தேடியது "நந்தி முக தரிசனம்"
- மலையே ஓர் அழகான நந்தி வடிவமாகத் தோன்றுவது கண்கொள்ளாக் காட்சி.
- இது மலை நந்தி என்றால், கிரிவலப் பாதையில் நிறைய சிலை நந்திகளும் உண்டு.
கிரிவலத்தின் தொடக்கத்தில், அதாவது அருணாசலேஸ்வரர் ஆலயப் பகுதியில் மலை ஒன்றாகத் தெரியும்.
பின்னர் அந்தப் பாதையின் வெவ்வேறு இடங்களில் இரண்டாக, மூன்றாகத் தெரியும்,
நிறைவாகக் கிரிவலத்தைப் பூர்த்தி செய்யும் நேரத்தில் ஐந்தாகத் தெரியும்.
உதாரணமாக, கவுதம ஆசிரமம் எதிரே மலை மூன்று பிரிவுகளாகத் தெரியும்.
பக்தர்கள் இதனைத் திரிமூர்த்தி தரிசனம் என்று அழைக்கிறார்கள்.
கிரிவலம் வருகிறவர்கள் இங்கே விழுந்து கும்பிடுகிற வழக்கம் உள்ளது.
அதேபோல், நிருதி லிங்கத்திலிருந்து சற்றுத் தொலைவில் உள்ளது நந்தி முக தரிசனம் என்ற இடம்.
இங்கே அறிவிப்புப் பலகை உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கவனித்தால்,
மலையே ஓர் அழகான நந்தி வடிவமாகத் தோன்றுவது கண்கொள்ளாக் காட்சி.
இது மலை நந்தி என்றால், கிரிவலப் பாதையில் நிறைய சிலை நந்திகளும் உண்டு.
அஷ்ட லிங்கங்கள், சூரிய, சந்திர லிங்கங்களுக்கு எதிரே உள்ள நந்திகளைத் தவிர,
மலையே சிவம் என்பதால் அதனைப் பார்த்தபடி ஆங்காங்கே நந்தி வடிவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.