என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிறுகோள்"
- பொதுவாக பூமிக்கு அருகில் செல்லும் பல சிறுகோள்களை விட இது பெரியது.
- சிறுகோளின் பாதையில் சிறிய விலகல் ஏற்பட்டால் கூட அது பூமியைப் பாதிக்கக்கூடும் என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள நாசாவின் ஜெட் புராபல்ஷன் ஆய்வகம் (ஜே.பி.எல்.) விண்வெளியில் பூமிக்கு அருகில் உள்ள வான்பொருட்களை குறிப்பாக சிறுகோள்களின் நகர்வுகளைக் கண்காணிப்பதிலும், பகுப்பாய்வு செய்வதிலும் முன்னணியில் உள்ளது. தற்போது, மேம்பட்ட ரேடார் மற்றும் ஆப்டிகல் தொலைநோக்கிகளை பயன்படுத்தி '2024-ஓன்' என்ற சிறுகோளை முதன்முதலில் கண்டறிந்துள்ளது. இதனுடைய அளவு, வடிவம் மற்றும் நகர்வு பற்றிய விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த சிறுகோள் 720 அடி விட்டம் கொண்டது. பொதுவாக பூமிக்கு அருகில் செல்லும் பல சிறுகோள்களை விட இது பெரியது. 60 மாடி கட்டிடத்தின் உயரம் கொண்டிருப்பதுடன், இதன் வேகம் மணிக்கு சுமார் 25 ஆயிரம் மைல்கள் (சுமார் 48 ஆயிரம் கிலோ மீட்டர்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
சிறுகோளின் அளவு மற்றும் வேகம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் மைல் தொலைவில் பூமியைக் கடந்து செல்லும். பூமிக்கும், நிலவுக்கும் இடையில் உள்ள தொலைவைவிட 2.6 மடங்கு தூரமாகும்.
இந்த சிறுகோள் நேற்று பூமியை கடந்து சென்றது. இந்த சிறுகோளின் பாதையில் சிறிய விலகல் ஏற்பட்டால் கூட அது பூமியைப் பாதிக்கக்கூடும் என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதுகுறித்து, டெல்லி விஞ்ஞான் பிரசார் நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான த.வி.வெங்கடேஸ்வரன் கூறும்போது, 'விண்வெளியில் '2024 ஓஎன்' சிறுகோள் பூமியை கடந்து சென்றது. இது 720 அடி பெரியது. அதாவது 2 கிரிக்கெட் மைதானத்தின் அளவு போன்றது. இந்த சிறுகோள் திட்டமிட்டப்படி இன்று (அதாவது நேற்று) பகல் 3.49 மணிக்கு பூமிக்கும், நிலவிற்கும் நடுவில் பூமியில் இருந்து 10 லட்சத்து 44 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் கடந்து சென்றது. குறிப்பாக, பூமியுடன் ஒப்பிடும்போது வினாடிக்கு 8.88 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. அடுத்து இதே சிறுகோள் வருகிற 2035-ம் ஆண்டு நவம்பர் 7-ந் தேதி மீண்டும் பூமியை கடந்து செல்ல இருக்கிறது.
இந்தமுறை பூமிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமலும், ஆபத்துகள் இல்லாமலும் சிறுகோள் கடந்து சென்றது.
விண்வெளியில் சமீப காலமாக பூமிக்கு அருகில் வரும் சிறுகோள் (விண்கற்கள்), அதுபற்றி கண்காணித்து ஆராய்ச்சி செய்வதற்காக சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் அமைப்பு ஒன்றை தொடங்கி உள்ளனர். உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் உள்ள தொலைநோக்கிகளை பயன்படுத்தி இதுபோன்ற ஆராய்ச்சிகள் நடக்கிறது.
அதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் ஒரு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பூமியிலிருந்து 2,850,000 மைல்கள் தொலைவில் இந்த JV33 என்ற இந்த சிறுகோள் கடக்கவுள்ளது.
- 1 மணிநேரத்திற்கு 24,779 மைல் வேகத்தில் இந்த சிறுகோள் பயணித்து வருகிறது.
620 அடி உயரமான கட்டிடத்தின் அளவுள்ள ஒரு சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை நாசா தெரிவித்துள்ளது.
பூமியிலிருந்து சுமார் 2,850,000 மைல்கள் தொலைவில் இந்த JV33 என்ற இந்த சிறுகோள் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 மணிநேரத்திற்கு 24,779 மைல் வேகத்தில் பயணித்து வரும் இந்த சிறுகோள், நிலவை விட 3 மடங்கு தொலைவில் இருந்தாலும் ஒப்பீட்டளவில் பூமிக்கு மிக நெருக்கத்தில் வரவுள்ளது. இந்த சிறுகோளை நாசா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
- சிறுகோள்களில் ஒன்றாக 'சைக்' விளங்குகிறது.
- சைக்கில் இறங்கி ஆய்வுகள் மேற்கொள்ளும் என நாசா ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
பால் வெளி மண்டலத்தில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடைப்பட்ட தூரத்தில் சிறுகோள்கள், விண்கற்கள் ஆகியவை அதிக அளவில் குவிந்து காணப்படுகின்றன. அங்கு அமைந்துள்ள சிறுகோள்களில் ஒன்றாக 'சைக்' விளங்குகிறது. முழுக்க முழுக்க இரும்பு, நிக்கல் போன்ற உலோகங்களாலான அந்த சிறுகோளை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டது. அதன்படி ஸ்பெக்ஸ்-எக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து அந்த சிறுகோளுக்கு விண்கலனை ஏவி உள்ளது. புளோரிடா மாகாணம் கேப் கேனவேரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்கலன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளது.
பூமியில் இருந்து 50 கோடி கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சைக் சிறுகோளை ஆறு ஆண்டுகளுக்குள் சென்றடையும்படி நாசா வடிவமைத்துள்ளது. நாசா கணிப்பின்படி செவ்வாய் கிரகத்தை அடைந்த பின்னர் குறைந்த உந்துதல் கொண்ட மின்சார உந்துவிசை என்னும் நவீன முறையை பயன்படுத்தி சிறுகோள் குவியலை கடந்து பயணித்து சைக்கை நெருங்கும். பின்னர் 4 நிலை சுற்றுப்பாதையை அமைத்து கொண்டு பயணித்த பின்னர் சைக்கில் இறங்கி ஆய்வுகள் மேற்கொள்ளும் என நாசா ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்