என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளியறை பூஜை"
- புதன் கிழமை பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள பதவி உயர்வு கிடைக்கும்.
- பிள்ளைவரம் கிடைக்க சனிக்கிழமை பள்ளியறை பூஜையில் கலந்துகொள்ள வேண்டும்.
சிவாலயங்களில் இரவு நடை சாத்தும் முன்பாக, சுவாமி மற்றும் அம்பாளை பள்ளியறை ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு பாடி பூஜிப்பார்கள். இதனை பள்ளியறை பூஜை' என்பார்கள். தமிழ்நாட்டின்
44 ஆயிரம் பழமையான சிவாலயங்களில், 36 ஆயிரத்திற்கும் அதிகமான ஆலயங்களில் சுமார் 200
ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பள்ளியறை பூஜை நடைபெற்று வந்துள்ளது. இப்போது மிகக்குறைவான சிவன் கோவில்களில்தான் இந்த பள்ளியறை பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த பள்ளியறை பூஜையின் மகத்துவத்தை இங்கே பார்ப்போம்.

பிரிந்த வாழ்க்கைத் துணை சேரவும், காணாமல் போன துணைவர்கள் திரும்பி வரவும் அசுபதி நட்சத்திரம் சேர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் பள்ளியறை பூஜையில் பங்கேற்க வேண்டும்.
திங்கட்கிழமை பள்ளியறை பூஜையில் பங்கேற்போர் மகத்தான திட்டங்களை செயல்படுத்துவர். ஆயில்யம், கேட்டை, மூலம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் ஒரு வருட காலம் செவ்வாய் தோறும் இந்த பூஜையில் பங்கேற்றால் விரைவில் திருமணம் கைகூடி வரும்.
புதன் கிழமை பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள பதவி உயர்வு கிடைக்கும். அனைத்து விதமான சித்திகளும் கிடைக்க, அனுஷம் நட்சத்திரமும் வியாழக்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் பள்ளியறை பூஜையில் பங்கேற்க வேண்டும்.
கணவருடைய நீண்ட கால நோய் தீர விரும்பும் மனைவிகள், வெள்ளிக்கிழமை பள்ளியறை பூஜையில் பங்கேற்கலாம். பிள்ளைவரம் கிடைக்க சனிக்கிழமை நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொள்ள வேண்டும்.
பள்ளியறை பூஜைக்கு பால், நைவேத்தியங்கள் கொடுப்பவர்களுக்கு, ஒழுக்கமும் பக்தியும் நிறைந்த குழந்தை பிறக்கும். பள்ளியறை பூஜையில் கர்ப்பிணிப் பெண்கள் பங்கேற்று முடிவில் பசுவுக்கு பழங்கள் கொடுத்து வந்தால், அவர்களுக்கு சுகப்பிரசவம் நிகழும்.
குழந்தையும் இறை சிந்தனையுடன் பிறக்கும். பள்ளியறை பூஜையிலும், அதன் நிறைவுப் பகுதியிலும் அன்னதானம் செய்பவர்களுக்கு, தொழில் அமோக வளர்ச்சி காணும்.
பள்ளியறை பூஜைக்கு எண்ணெய், நெய் தொடர்ந்து தருபவர்களுக்கு முதுமைக் காலத்தில் கண் சார்ந்த வியாதிகள் வராது. வெகு காலமாக திருமணம் நடக்காமல் இருக்கும் இளைஞர்களும், இளம்பெண்களும் சுமார் ஒரு வருட காலம் இந்த பள்ளியறை பூஜையில் பங்கேற்று இறைவனை வழிபட்டால், இனிமையான மண வாழ்க்கை அமையும்.
வேலை அல்லது தொழிலில் இருக்கும் மந்தநிலை அகல, ஒரு வருட காலம் பள்ளியறை பூஜையில் பங்கேற்பது நல்லது.
பள்ளியறை பூஜை நடைபெறாத ஆலயங்களில் பள்ளியறை கட்டுவதும், மீண்டும் பள்ளியறை பூஜையைத் தொடங்க முயற்சி மேற்கொள்வதும் கோடி புண்ணியத்தைத் தரும்.

தன் கருவறையில் பல்லக்கில் புறப்படும் சிவபெருமானை, பக்தர்கள் பலரும் சுமந்து செல்வார்கள். அப்போது சிவபுராணம், பதிகங்கள் பாடுவர். பள்ளியறை முன்பாக வரும் சிவனை, அம்பாள் திருப்பாதங்களுக்கு பூஜை செய்து அழைத்துச் செய்வார்.
பின்னர் சுவாமி- அம்பாளுக்கு பால், பழங்கள் நைவேத்தியமாக வைத்து, ஊஞ்சல் சேவை நடத்தி, பாசுரங்கள் பாடி திருக்கதவுகள் மூடப்படும். இந்த பள்ளியறை பூஜையானது சுமார் அரை மணி நேரம் வரை நடைபெறும்.
இந்த பூஜையை காண்போருக்கு புண்ணியமும், வளமான வாழ்வும் அமையும். பூஜைக்கு ஈசனைச் சுமந்து வருவோர் மறுபிறவியில் கல்விக்கும், செல்வத்திற்கும் அதிபதியாவார்கள் என்பது ஐதீகம்.