என் மலர்
நீங்கள் தேடியது "லிப் பாம்"
- ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரித்தல்.
- இளமை பொலிவைத் தக்கவைக்க உதவும்.
இயற்கையான அணுகுமுறைகளை உங்கள் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலம், உங்களை அழகாகக் காட்டலாம். உங்கள் சருமத்தைப் பாதுகாத்தல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரித்தல், மன அழுத்தத்தை நிர்வகித்தல் மற்றும் சீரான தோல் பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றுதல் ஆகியவை உங்கள் இளமை பொலிவைத் தக்கவைக்க உதவும். என்றும் இளமையுடன் அழகாக இருப்பதற்கு உதவும் இயற்கை முறைகளை குறித்து இங்கு காணலாம்.
* பப்பாளி பழத்தை எடுத்து துருவிக்கொள்ள வேண்டும். அதில் காபி தூள் கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், தேன் கால் டீஸ்பூன் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து மிதமான தண்ணீரில் கழுவ வேண்டும்,
* ஒரு பவுலை அடுப்பில் வைத்து அதில் 100 கிராம் பாலை ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அந்த கலவை கெட்டியானதும் இறக்கி வைத்து அதில் கால் டீஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் கற்றாலை ஜெல் சேர்த்து நன்றாக கலக்கி பயன்படுத்தலாம்.
முகத்தில் உள்ள கருமை நீங்கவும், முகம் பொலிவு பெறவும், சருமம் வறண்டு விடாமல் இருப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம். முகத்திற்கு நல்ல பளபளப்பு கிடைக்கும்.
* 2 ஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்து ஒரு வாணலியில் போட்டு அதனை நன்றாக நிறம் மாறி வருகிற அளவுக்கு வறுத்து எடுக்க வேண்டும். அது பார்ப்பதற்கு மஞ்சள் நிறம் மாறி காபி பொடி கலரில் இருக்கும். இதனை ஒரு கின்னத்தில் போட்டு அதில் ஒரு ஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ள வேண்டும். இதனை முகம், கை, கழுத்து பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து நன்றாக கழுவ வேண்டும். இது ஒரு சிறப்பான டீடேன் பேக்காக இருக்கும். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது வெயிலினால் ஏற்படும் கருமை மற்றும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மாறி முகம் மென்மையாக இருக்கும்.
* உதடு கருமை நீங்க பீட்ருட்டை மிக்சி ஜாரில் போட்டு அதில் சிறிதளவு பால் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை வடிகட்டி அதில் நெய் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். இந்த கலவை கெட்டியானதும் அதனை ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் ஃப்ரீசரில் வைக்க வேண்டும். இப்போது இயற்கையான முறையில் லிப் பாம் தாயார்.
* முதலில் உதட்டை ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து இதனை உதட்டில் ஸ்க்ரப்பாக பயன்படுத்தி தேய்த்து எடுக்க வேண்டும். அதன்பிறகு தயார் செய்து வைத்துள்ள லிப் பாமை பயன்படுத்தலாம்.
* முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகளை அகற்றுவதற்கு ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், காய்ச்சாத பால் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் மாதிரி தயார் செய்து அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து ஒரு ஈரமான துணிகொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகள் நீங்கி விடும்.
- குளிர்காலம் தொடர்பான சரும பிரச்சினைகள் கவலைக்கு காரணமாக இருக்கும்.
- சருமத்தில் க்ரீம் பூசுவதால் ஈரப்பதமான சருமமாக மாறாது.
குளிர்காலம் நெருங்க நெருங்க, சரும பராமரிப்பு குறித்த கவலைகள் பெண்களை ஆட்கொள்ளும். வறண்ட சருமம், மெல்லிய தோல், உதடு வெடிப்பு உள்பட குளிர்காலம் தொடர்பான பல்வேறு சரும பிரச்சினைகள் அந்த கவலைக்கு காரணமாக இருக்கும். இதற்கிடையே குளிர்கால சரும பராமரிப்பு பற்றி பல கட்டுக்கதைகளும் உலவுகின்றன. அத்தகைய கட்டுக்கதைகள் குறித்தும், உண்மை நிலவரம் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
சருமத்தில் அதிக கிரீம் தடவினால் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்
உண்மை: உதடோ, சருமமோ எந்த அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவதாக இருந்தாலும் குறைவாகவே பூச வேண்டும். அதிகம் பூசுவதால் ஈரப்பதமான சருமமாக மாறாது. மாறாக தோல் சுவாசிக்க முடியாமல், இறுதியில் சருமம் சேதமடையக்கூடும். குறிப்பாக குளிர்காலத்தில் சருமங்களை பராமரிப்பதற்கு இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அடர் தன்மை கொண்ட கிரீம்களை பயன்படுத்துவதை விட லோஷன்களை பயன்படுத்துவது ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும்.

குளிர்காலத்தில் சருமத்திற்கு ஈரப்பதத்தை தக்க வைக்க எண்ணெய் உதவும், மாய்ஸ்சுரைசர் தேவையில்லை
உண்மை: வறண்ட மற்றும் எண்ணெய் பசை கொண்ட சருமங்களுக்கு இடையே ஒருசில மாறுபாடுகள்தான் இருக்கிறது. வறண்ட சருமத்தை ஒப்பிடும்போது எண்ணெய் பசை கொண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தை தக்கவைக்க மென்மையான தன்மை கொண்ட லோஷன் தேவைப்படும். ஒவ்வொரு சரும வகையும் வானிலை மாற்றங்களால் பாதிக்கப்படும். குளிர்ந்த காற்று சருமத்தை வறண்டு போகச் செய்துவிடும். இதற்கு எண்ணெய் சருமமும் விதிவிலக்கல்ல.
அதனால் குளிர்காலத்தில் எண்ணெய் பசை கொண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தை தக்க வைக்க எதுவும் பயன்படுத்த வேண்டியதில்லை என்பது தவறானது. சருமத்தின் தன்மைக்கு ஏற்ப சம நிலையை பராமரிக்கும் தன்மை கொண்ட மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துவது நல்லது. அவை ஈரப்பதத்தை பராமரிப்பதற்கும், புற ஊதாக்கதிர்களிடம் இருந்து சருமத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்கும் உதவும்.

குளிர்காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்க்கலாம்
உண்மை: பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த சீரான உணவை உண்பது சருமத்தின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. குளிர்காலத்திலும், இந்த உணவுகள் சருமத்தை பாதுகாக்கக்கூடிய அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகளை வழங்குகின்றன. எனவே அவற்றை தவிர்க்கக்கூடாது.
குளிர்காலத்தில் லிப் பாம்களை அதிகமாகப் பயன்படுத்துவது உதடு வெடிப்பு பிரச்சினையை சரி செய்யும். உண்மை: உதட்டுக்கு லிப் பாம்களை அதிகமாக போடுவது பிரச்சினைக்குத்தான் வித்திடும். உதடுகள் வறண்டு போயிருந்தால் அதன் மீது படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்றாமல் லிம் பாம் உபயோகிப்பது பயனற்றது. எப்போதும் லிப் பாமை ஒரு அடுக்கு மட்டுமே போடுவது போதுமானது. முதலில் இறந்த செல்களை நீக்க உதவும் 'லிப் ஸ்கிரப்'களை பயன்படுத்திவிட்டு அதன் பிறகு லிப் பாமை தடவ வேண்டும்.
பெரும்பாலான லிப் பாம்களில் சருமத்திற்கு தீங்கையும், நீரிழப்பையும் ஏற்படுத்தும் வண்ணங்கள் அல்லது வாசனை திரவியங்கள் கலந்திருக்கக்கூடும். குளிர்கால உதடு பராமரிப்புக்கு, இயற்கை எண்ணெய் கொண்டு தயார் செய்யப்பட்ட நெய் பயன்படுத்துவது நல்லது. தரமான லிப் பாமும் பயன்படுத்தலாம்.
குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதற்கு சிறந்த வழி
உண்மை: குளிர் சமயத்தில் சுடு நீர் குளியல் உடலுக்கு ஆறுதல் அளிக்கும். ஆனால் சருமத்தில் படர்ந்துள்ள இயற்கை எண்ணெய் பசைகளை அகற்றி சருமத்தை உலர்வடைய செய்துவிடும். சருமத்திற்கு எரிச்சல் உணர்வையும் உண்டுபண்ணும். அதிக சூட்டை உணரவைக்காத வெதுவெதுப்பான நீரில் குளிப்பது அதிகப்படியான ஈரப்பத இழப்பை தடுக்கும். இருப்பினும் சுடு நீர் குளியல் போடுவதாக இருந்தால் அதிக நேரம் குளிக்கக்கூடாது.
குளிர்காலத்தில் இறந்த செல்களை அகற்றும் செயல்முறையை தவிர்க்க வேண்டும்
உண்மை: கோடைகாலம் சரும பராமரிப்புக்கு சிறந்த நடவடிக்கையாக கருதப்படுகிறது. குளிர்காலத்திற்கும் முக்கியமானது. இருப்பினும் அடிக்கடி எக்ஸ்போலியேட் செய்வது சருமத்திற்கு வறட்சி மற்றும் எரிச்சலை உண்டாக்கும். சருமத்தின் இயற்கையான எண்ணெய்களை அகற்றாமல் இறந்த சரும செல்களை அகற்றும் தன்மை கொண்ட மென்மையான எக்ஸ்போலியண்ட்களை தேர்வு செய்யவும்.
குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் அவசியம் இல்லை
உண்மை: சன்ஸ்கிரீன் புற ஊதா கதிர்வீச்சிலிருந்து சருமத்தை பாதுகாக்கும். இந்த கதிர்கள் சருமத்தின் தோலை நேரடியாக பாதிக்கும். குளிர்காலத்தில் கருமேகங்கள் உலவும் என்றாலும் புற ஊதாக்கதிர்கள் வெளிப்படாமல் இருக்காது. அது மேகங்கள் வழியாக ஊடுருவி சருமத்தை பாதிக்கவே செய்யும். எனவே குளிர்கால சரும பராமரிப்பு வழக்கத்திலும் சன்ஸ்கிரீன் இடம் பெறுவதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.
அடர் தன்மை கொண்ட மாய்ஸ்சுரைசர்கள் எப்போதும் சிறந்தவை
உண்மை: குளிர்காலத்தில் ஈரப்பதத்தை பராமரிப்பதற்கு உதவும் மாய்ஸ்சுரைசர் அடர் தன்மை கொண்டிருந்தால் சிறந்தது என்பது சரியானது அல்ல. அத்தகைய மாய்ஸ்சுரைசர்கள் சில சமயங்களில் சரும துளைகளை அடைத்துவிடும். வேறு சில சரும பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். அதற்கு பதிலாக, உங்கள் சரும வகைக்கு ஏற்ற ஈரப்பதமூட்டும் மாய்ஸ்சுரைசரை தேர்ந்தெடுப்பது சரியானது. ஹைலூரோனிக் அமிலம், கிளிசரின் அல்லது செராமைடுகள் போன்ற சேர்மங்கள் கொண்ட மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தலாம்.
- ஒருவரின் அழகை வெளியில் காட்டுவது சிரிப்பு.
- சிரிப்பு தான் முகத்திற்கு அழகை சேர்க்கிறது.
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதீத ஆசை இருக்கும். அதற்காக வீட்டில் இருந்துக்கொண்டே பல விஷயங்களை முயற்சி செய்து பார்ப்பதும் உண்டு.
சருமத்திற்கு தரும் அதே அக்கரையை உதட்டிற்கும் கொடுக்க வேண்டும். காரணம், ஒருவரின் அழகை வெளியில் காட்டுவது சிரிப்புதான். சிரிப்பு தான் முகத்திற்கு அழகை சேர்க்கிறது. அந்த சிரிப்பிற்கு முக்கியமாக இருப்பது உதடு. ஆகவே உதட்டை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும்.
சிலருக்கு உதடு வறண்டு போய் இருக்கும். உதடுகள் வறண்டு விடாமல் அவற்றை பளபளப்பாக வைத்திருக்க பல முயற்சிகளை செய்யலாம். அதில் ஒன்று தான் லிப் ஆயில். இதை எப்படி எளிதான முறையில் வீட்டிலேயே செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கோகோ எண்ணெய் - அரை ஸ்பூன்
வர்ஜின் தேங்காய் எண்ணெய் - அரை ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - ஒரு ஸ்பூன்
லாவண்டர் ஆயில் - 5 துளிகள்
ஆரஞ்சு எண்ணெய் - 5 துளிகள்
தேன் மெழுகு (பீஸ் வாக்ஸ்) - அரை தேக்கரண்டி
வைட்டமின் ஈ டேப்ளட்ஸ் - 5 லிப்
ஆயில் டியூப் - 3
ரோஸ் பவுடர் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், கோகோ எண்ணெய் மற்றும் தேன் மெழுகு எண்ணெய் சேர்க்க வேண்டும்.
டபுள் பாய்லிங் முறையில் அதாவது, அகலமான பாத்திரம் ஒன்றை எடுத்து தண்ணீர் ஊற்றி அதில் கண்ணாடி கிண்ணத்தை வைக்க வேண்டும். நீரில் மூழ்காதவாறு இருக்க வேண்டும். அதை சூடேற்ற வேண்டும். அப்போது கண்ணாடி கிண்ணத்தில் உள்ளவை உருகும்.
இவ்வாறு 10 முதல் 15 நிமிடங்கள் வரை சூடேற்றினால் போதும். அனைத்தும் உருகி விடும். அடுத்து வைட்டமின் ஈ மாத்திரைகளை சேர்க்க வேண்டும். அதன்பிறகு அடுப்பில் இருந்து இறக்கி, ரோஸ் பவுடர் சேர்த்துக் கலக்க வேண்டும்.
இறுதியாக லிப் ஆயில் டியூப்பில் ஊற்றி 30 நிமிடங்கள் வரை குளிர்ச்சிபடுத்த வேண்டும். இதை வறட்சியான உதட்டின் மேல் பூச வேண்டும். அதனால் உதட்டில் உள்ள வறட்சி நீங்கி அழகான மற்றும் மென்மையான உதடு கிடைக்கும்.

- உதடுகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் கருமை அடைகிறது.
- உமிழ்நீர் உலர்ந்தவுடன் உதடுகள் வறட்சி அடையும்.
சுற்றுச்சூழலில் உள்ள மாசு, பருவநிலை சுமாறுபாடு, ரசாயனங்களின் பயன்பாடு, உடலில் நீர்ச்சத்து குறைவது போன்ற பல்வேறு காரணங்களால் உதடுகள் வறட்சி அடைவது, உதட்டில் தோல் உரிவது போன்ற பாதிப்புகள் உண்டாகும். உதடுகள் மென்மையாகவும். பொலிவோடும் இருக்க அவற்றை தினசரி பராமரிப்பது அவசியமாகும். அதற்கான குறிப்புகள் இங்கே...
உதடுகள் அதிகமாக கருமை அடைவது ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறியாகும். புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த உணவை தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் கருமையை போக்க முடியும்.

உதட்டுச்சாயம் பூசிய பிறகு அடிக்கடி கைகளால் உதடுகளை தொட்டுபார்ப்பதை தவிர்க்கவும் உதட்டுச் சாயத்தில் எந்தவிதமான பாதுகாப்பு அம்சங்களும் இருக்காது நீங்கள் உதடுகளை தொடும்போது கைகளில் உள்ள கிருமிகள் உதடுகளில் தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும்
உதடுகள் வறட்சி அடையும்போது அடிக்கடி நாக்கினால் ஈரப்படுத்துவதைத் தவிர்க்கவும். உமிழ்நீர் உலர்ந்தவுடன் உதடுகள் மேலும் அதிகமாக வறட்சி அடையும். உமிழ்நீரில் உள்ள நொதிகள் உதடுகளின் மென்மையான தோலில் பாதிப்புகளை உண்டாக்கும்.
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றத்தோடு வைத்திருப்பதோடு, உதடுகளையும் ஆரோக்கியமாக பராமரிக்க உதவும்.
இரவு நேரத்தில் ஆழ்ந்து தூங்குவது முழு உடலுக்கும் தேவையான ஓய்வு அளித்து புத்துணர்ச்சியாக்கும். தூங்க செல்வதற்கு முன்பு உதடுகளில் பூசியுள்ள உதட்டுச்சாயத்தை நீக்குவது முக்கியமானது.
உதடுகளை ஆரோக்கியமாகவும், மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க அவற்றில் படித்திருக்கும் இறந்த செல்களை நீக்க வேண்டும். இதற்கு இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மென்மையான லிப் ஸ்கிரப்பர்களை பயன்படுத்துவது நல்லது.

தோல் உரிவதால் உதடுகளில் உண்டாகும் காயங்களை குணப்படுத்த தேன் மெழுகு உதவும். சிறிதளவு தேன் மெழுகை உதட்டில் சீராக பூசவும். அது உலர்ந்த பின்பு மீண்டும் ஒரு படலமாக தேன் மெழுகை பூசவும். சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் பஞ்சை தோய்த்து அதைக்கொண்டு உதடுகளை சுத்தமாக துடைக்கவும். தேன் மெழுகில் உள்ள ஊட்டச்சத்துகள் உதடுகளின் ஈரப்பதத்தை தக்கவைத்து, தோல் உரிவினால் ஏற்பட்ட காயங்களை எளிதில் குணமாக்கும்.
தனசரி காலை, மாலை இருவேளையும் ரோஜா எண்ணெய்யை உதடுகளில் பூசி வரலாம். இது உதட்டில் ஏற்படும் வெடிப்புகளை குணப்படுத்துவதோடு, உதடுகள் விரைவில் வறட்சி அடைவதில் இருந்து பாதுகாக்கும்.

சிறிதளவு கோகோ, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து உதட்டில் பூசவும். இது கடினமான உதட்டின் தோலை மென்மையாக்கி, உதடுகள் வறட்சி அடைவதைத் தடுக்கும்.
உதடுகளின் ஈரப்பதத்தை தக்கவைக்க இயற்கையான பொருட்கள் கொண்டு தயரிக்கப்பட்ட 'லிப் பாம்' பூசவும். வெளியில் செல்லும்போது புறஊதாக்கதிர் தாக்கத்தை தடுக்கும் மூலக்கூறுகள் சேர்க்கப்பட்ட லிப் மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்தவும்.
- எந்த காரணத்துக்காக லிப் பாம் பயன்படுத்த விரும்புகிறீர்கள்.
- மாய்ஸ்ச்சரைசர் உள்ள லிப் பாம் பயன்படுத்தினாலே போதுமானது.
லிப் பாம் தேர்ந்தெடுப்பது எப்படி என்று பார்ப்பதற்கு முன், எந்த காரணத்துக்காக லிப் பாம் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அந்த காரணத்துக்கேற்ற லிப்பாம் வாங்கி பயன்படுத்துவதுதான் சரியாகவும் இருக்கும்.
சிலருக்கு உதடுகள் எப்போதும் வறண்டு காணப்படும். அவர்களுக்கு மாய்ஸ்ச்சரைசிங் தன்மை கொண்ட லிப் பாம் பயன்படுத்தினாலே போதுமானதாக இருக்கும். இன்னும் சிலருக்கு உதடுகள் வெடித்துப் போகும் பிரச்சினை இருக்கும். அவர்கள் அதற்கான காரணத்தை சரும மருத்துவரை அணுகி, உதடுகள் வெடித்துப்போவதற்கான காரணம் அறிந்து அதற்கேற்ற லிப் பாம் பயன்படுத்தலாம்.

இன்னும் சிலருக்கு உதடுகளின் இயல்பான நிறம் மாறி, கருமையாக இருக்கும். குறிப்பாக, புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும், அலர்ஜி உள்ளவர்களுக்கும் இப்படி இருக்கலாம். இவர்கள் லிப் பாமில் மாய்ஸ்ச்சரைசர் மட்டுமன்றி, சன் ஸ்கிரீனும் உள்ளதுபோல தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.
சரும மருத்துவரை அணுகினால், உதடுகளின் கருமையைப் போக்கும்படியான லிப் லைட்டனிங் தன்மை கொண்ட லிப் பாமை பரிந்துரைப்பார். இப்படி எந்த தேவையும் இல்லை... வெறும் அழகுக்காக மட்டுமே லிப் பாம் உபயோகிக்கிறேன் என்பவர்கள், மாய்ஸ்ச்சரைசர் உள்ள லிப் பாம் பயன்படுத்தினாலே போதுமானது. ஆனால், அதில் வாசனையோ, அலர்ஜியை ஏற்படுத்தும் விஷயங்களோ இல்லாதபடி பார்த்து தேர்ந்தெடுக்கலாம்.
- லிப்ஸ்டிக்குகளில் உள்ள டெக்ஸ்சர்கள் ஒவ்வொரு சீசனுக்கும் வேறுபடும்.
- செமி-மேட் முதல் கிரீம் வரை சீசனுக்கு மிகவும் சிறந்தவை.
லிப்ஸ்டிக்குகளில் உள்ள டெக்ஸ்சர்கள் ஒவ்வொரு சீசனுக்கும் வேறுபடும். செமி-மேட் முதல் கிரீம் வரை இந்த சீசனுக்கு மிகவும் சிறந்தவை. அதிக அளவு கிளாஸ், அதாவது ஜொலிக்கும் விதமான லிப்ஸ்டிக்குகள் கண்ணை பறிக்கும், ஆனால் எளிதில் கலைந்து விடும். முழுவதும் மேட் ஸ்டைலில் உள்ள லிப்ஸ்டிக் உங்கள் உதட்டை உலர்ந்ததாக, வயதானதாக காட்டும். ஒரு லிப் பாம் கொண்டு முதலில் உதடுகளை தயார் செய்யலாம், பின்னர் லிப் கலரை பயன்படுத்தலாம் அல்லது கிரீமி லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம். மேட் ஸ்டைல் பகலுக்கும், கிரீமி ஸ்டைல் இரவுக்கும் சிறந்தவையாக இருக்கும்.

அலுவலக மேக்கப்
அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஆர்ப்பாட்டமில்லாத மேக்கப்பே போதுமானது. நேர்த்தியான கூந்தல், அலங்காரமற்ற உதடுகள் தேவையான மந்திரஜாலத்தை உருவாக்கும்.
* ஃபவுண்டேஷன் மூலம் சருமத்தை சமமாக்குங்கள்.
* மென்மையான, நியூட்ரல் கலர் பிளஷை கன்னங்களில் பூசுங்கள்
* இயற்கையான பீஜ் ஷேடு அல்லது உங்கள் உதட்டு கலரோடு ஒத்துப்போகும் கலரை இடுங்கள்
* கருவளையங்களை குறைக்க கன்சீலர் இட்டு, உங்கள் கண் இமையில் நியூட்ரல் கலரை பூசுங்கள்
* கண்ணின் மேல் இமையின் உள்முனையில் இருந்து வெளிமுனை வரை லிக்விட் ஐலைனர் இடுங்கள். கூந்தலை தாழ்வான கொண்டையாக போட்டுக்கொள்ளவும். இறுக்கமாக முடிந்து வையுங்கள். பேங்க்ஸ் இருந்தால், அவை நெற்றியில் அழகாக விழட்டும்.
- உதடுகள் வறைசி அடையாமல் தடுக்க லிப் பாம் அவசியம்.
- வெடிப்பு அபாயம் ஏற்படாமல் தடுப்பதற்கும் லிப் பாம்கள் உதவுகிறது.
பொதுவாக குளிர்காலத்தில் தான் உதடுகள் வறைசி அடையாமல் தடுக்க லிப் பாம் அவசியம். ஆனால் கோடை காலங்களிலும் லிப் பாம் அவசியம் என்கிறார்களே என்றால், கோடை காலத்தில் உதடுகளில் ஏற்படும் வறட்சியை தடுக்க இந்த லிப் பாம் பெரிதும் உதவுகிறது.
குளிர் காலத்தில் உதடுகள் வறண்டு காணப்படும் என்பதால் பலரும் லிப் பாம் போடுவதற்கு மறப்பதில்லை. இதே பிரச்சினை கோடை காலத்தில் இருக்கும் என்பதாலும் லிப் பயன்படுத்தலாம்.
ஆனால் கோடை காலத்தில் பயன்படுத்தும் லிப் பாம் போல அதிக அடர்த்தி இல்லாமல் லேசாக இருக்கக்கூடிய மற்றும் சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்கக்கூடிய லிப் பாம்களை பயன்படுத்துவது நல்லது.

கோரமைட், ஹையாலரோனிக் ஆசிட் போன்றவை சேர்ந்த லிப் பாம்கள் நன்று வேலை செய்யும் என்றும் கூறப்படுகிறது.
சூரியனிடம் இருந்து காத்துக்கொள்ள மிகவும் முக்கியம். உடல் திடீரென தண்ணீர் வறட்சியால் வறண்டு போகும் போது அது நேரடியாக எதிரொலிப்பது உதட்டில் தான். எனவே உதடுகள் வறட்சி அடையாமலும், கருத்துப்போகாமலும், வெயிலினால் பாதிப்படையாமலும் பாதுகாப்பதற்கு இந்த லிப் பாம்கள் உதவுகின்றன.
சூரிய வெப்பக்காற்றினால் உதடுகள் பாதிக்கப்பட்டு வெடிப்பு அபாயம் ஏற்படாமல் தடுப்பதற்கும் லிப் பாம்கள் உதவுகிறது.
வயோதிகத்தை முதலில் சொல்வது உதடுகளும், சருமமும் தான். எனவே அவற்றை நல்ல முறையில் பராமரித்தால் தான் என்று இளமையாக இருக்க முடியும்.
மேலும் உதடுகளின் பராமரிப்புல் நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு முக்கியத்துவம் பெறுவதால் கோடைகாலத்தில் நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.