search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துர்காதேவி"

    • பூஜை செய்யும் அறையை முதலில் சுத்தமாக கழுவிவிட்டு, அங்கே சக்தி மாகோலமிட வேண்டும்.
    • அதனை சுற்றி செம்மண் இட்டு அதன்மீது தலை வாழையிலையை போடவேண்டும்.

    துர்க்கை அன்னையை வீட்டிலேயே தீப பூஜை செய்ய விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் முறையில் அனுசரித்து வழிபட வேண்டும்.

    பூஜை செய்யும் அறையை முதலில் சுத்தமாக கழுவிவிட்டு, அங்கே சக்தி மாகோலமிட வேண்டும்.

    அதனை சுற்றி செம்மண் இட்டு அதன்மீது தலை வாழையிலையை போடவேண்டும்.

    வாழை இலையில் பச்சரிசியைப் பரப்பி அதன் நடுவில் ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.

    மஞ்சள் நிறமுடைய பத்து எலுமிச்சம் பழங்களை வாங்கி, பழங்களை இரண்டு துண்டாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

    அந்த இருபது துண்டுகளில் இரண்டு துண்டுகளை மட்டும் எடுத்து சாறுபிழிந்து விட்டு& பிழிந்த முடிகளை உள்பக்கம் வெளிப்பக்கம் வருமாறு திருப்பி குழிவான கின்னம் போல் செய்து கொள்ள வேண்டும்.

    அந்த எலுமிச்சம் பழக் கிண்ணத்தில் நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட துர்க்கா தேவியின் படத்தின் முன்போ, அல்லது சிலையின் முன்போ வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

    துர்க்காதேவிக்கு நிவேதனைப் பொருளாக தயிர் சாதம், உளுத்துவடை, அவல், பாயாசம், எலுமிச்சம் பழச்சாதம் ஆகியவற்றை படைத்து பூஜை செய்ய வேண்டும்.

    இரண்டு துண்டாக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தின் சாற்றைப் பிழிந்து அதில் வெல்ல சர்க்கரை கலந்து பானமாக்கி நிவேதனம் செய்ய வேண்டும்.

    பின்னர் துர்க்கா தேவியின் பாமாலைகள், துதிப்பாடல்கள், ராகு காலத்தில் பாடவேண்டிய பாடல்கள் ஆகியவற்றைப் மனம் உருகிப்பாட வேண்டும்.

    பூஜையின் முடிவில் பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பானகத்தைக் கொடுத்து தாங்களும் பருகலாம்.

    துர்க்கா தேவி பூஜையை வீட்டிலேயே செய்வதால் குடும்பம் என்றென்றும் செல்வச் செழிப்புடன் இருக்கும்.

    • அரசலாறு ஆற்றங்கரையில் சரஸ்வதிக்கு கோவில் உள்ளது.
    • தாமரை மலரில் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

    திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்னும் ஊர் அருகே கூத்தனூர் என்னும் கிராமத்தில்

    அரசலாறு ஆற்றங்கரையில் சரஸ்வதிக்கு கோவில் உள்ளது.

    இந்த ஆலயத்தில் சரஸ்வதி தேவி நான்கு திருக்கரங்களுடனும், அருள் ஞானமுத்திரை ஆகியவற்றுடனும்

    தாமரை மலரில் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

    இங்கு சரஸ்வதி பூஜை நாளில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

    அந்நாளில் பூஜை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    கூத்தனூரில் ஆரம்பித்து ருத்ர கங்கை வரையிலான சுமார் இரண்டரை கிலோ மீட்டர் வரை வியாபித்துள்ள

    அரசலாற்றுக் கரையில் தர்ப்பணம் மற்றும் பித்ரு காரியங்கள் செய்வது மிகச் சிறப்பானதாகும்.

    இங்கு தர்ப்பணம் செய்யவும், குழந்தைகள் கல்வி மேன்மைக்கு வழிபாடு செய்யவும்,

    அவரவர் பாப கர்ம வினையிலிருந்து விடுபடவும் திரிவேணி சங்கம நீராடலுக்கும்,

    கணவன் மனைவி பிரிவிலிருந்து மீளவும் இது மிகச்சிறந்த பிராத்தனைத்தலம் என்று தலபுராணம் கூறுகிறது.

    மேலும் கம்பர் காலத்தில் அவைப்புலவர்களில் ஒருவராக இருந்த ஒட்டக்கூத்தர் கட்டிய கோவில் இது எனவும்

    இக்காரணம் தொட்டே இது கூத்தனுர் என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுவதுண்டு.

    இங்கு குடியிருக்கும் சரஸ்வதி தேவி பேச முடியாதவரையும் பேச வைக்கும் அருள் உள்ளம் கொண்டவள்.

    வாக்கு வன்மை யும் காவியம் இயற்றும், புலமையும் தருபவள்.

    நவராத்திரியின் போது பக்தர்கள் அம்மனைத் தொட்டு மலர்களால் அர்ச்சனை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    ×