என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவபூஜை"

    • வருடத்தில் ஒருநாள் மட்டும் சிவராத்திரி என்று நினைக்கக்கூடாது. அனைத்தும் சிவமயமே!
    • “நவராத்திரி பூஜை எல்லாம் சிவராத்திரி பூஜையே” என்கின்றார்கள் சித்தர்கள்.

    அழகில் சிறந்த சுகன்யா என்பவள், தன்னைவிட மிக அதிக வயதான ஸ்யவன மகரிஷியைத் திருமணம் செய்து கொண்டாள்.

    அவள் திருமணம் செய்து கொண்டதும் தன் கணவனை, நாம் இருவரும் வாழ்வதோடு மட்டுமல்லாமல் இவ்வுலகமும் வாழ வழி ஒன்று சொல்ல வேண்டும் என்றாள்.

    உடனே ஸ்யவன மகரிஷி "அம்மா, அதற்கு வழி நவராத்திரி பூஜை ஒன்று தான்" என்றார். அவர் மேலும் கூறியதாவது:

    "நவராத்திரி பூஜை பெண்களுக்கு மட்டுமே உரித்தானது.

    ஆண்களுக்கு அதில் எந்தவிதமான பங்கும் கிடையாது" என்று நினைப்பது தவறு.

    ஏனென்றால், "நவராத்திரி பூஜை எல்லாம் சிவராத்திரி பூஜையே" என்கின்றார்கள் சித்தர்கள்.

    கோணக்காதர், கரபாத்திரர். சித்தர் சுடர், ஜடாமினி கோரக்கர், கொல்லிமலை முருகன், தான்பிஸண்டர்,

    கொங்கண சித்தர், கள்ளிப்பால் சித்தர், பாம்பாட்டி சித்தர் அனைவருமே

    "நவாராத்திரியானது சிவ பூஜை செய்வதற்கே!" என்கின்றனர்.

    ஆகவே, நவராத்திரி எல்லாமே சிவராத்திரி தான்.

    நவராத்திரியில் வரும் அனைத்துப் பகல்களும், இரவுகளும் சிவனையே சாரும்.

    வருடத்தில் ஒருநாள் மட்டும் சிவராத்திரி என்று நினைக்கக்கூடாது. அனைத்தும் சிவமயமே!

    அனைத்தும் சிவனின் இரவுகளே!

    அனைத்து துர்க்கைகளும் பகலில் ஈசனை வணங்குகின்றனர்.

    பகலில் ஈசனை வணங்கியதால் கிட்டும் பலனைத்தான் இரவில் தம்மை வணங்கும் பக்தர்களுக்கு அம்பிகைகளின் அம்சங்கள் அளிக்கின்றனர்.

    எனரே தான், "ஈசனை வணங்குதல் மிக முக்கியம்" என்று பெரியவர்கள் சொல்லி வைத்தனர்.

    பகலில் நாம் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து, சிவ பூஜை செய்தால் தான், இரவில் துர்க்கை தரும் பலனைப் பெற முடியும்.

    இவ்வாறு ஸ்யவந மகரிஷியானவர் சுகன்யா தேவிக்கு நவராத்திரி பூஜைகளின் சிறப்பையும்,

    அவற்றை முறையாகக் கொண்டாடுகின்ற விதத்தையும் எடுத்துரைத்தார்.

    சுகன்யா தேவியும் தன் கணவர் அருளியபடியே நவராத்திரி பூஜைகளைக் கடைப்பிடித்து, நல்ல நிலையை அடைந்தாள்.

    • வன்னி, பலா, எலுமிச்சை, நார்த்தை, கோங்கு, மந்தாரை, கருஊமத்தை, மாவிலங்கு, நொச்சி, பன்னீர்
    • அனிச்சம், நந்தியா வட்டை, பஞ்ச வில்வங்கள் ஆகியவை ஏற்றவை என்று கூறப்படுகிறது.

    வன்னி, பலா, எலுமிச்சை, நார்த்தை, கோங்கு, மந்தாரை, கருஊமத்தை, மாவிலங்கு, நொச்சி, பன்னீர்,

    அகில், மாதுளை, அசோகு, பாதிரி, வெள்ளெருக்கு, இலந்தை, பலாசு, நுணா, நறவம், புன்னை, விளா,

    மருது, கொன்றை, நெல்லி, குரா, செருந்தி, பொன்னாவரை, கிளுவை, குருந்து, வில்வம், நாவல்,

    கொடிப்பூக்கான நாட்டு மல்லிகை, முல்லை, மௌவல், வெற்றிலை, தாளி, கருங்காக் கொன்றை,

    வெண்காக்கொன்றை, குருக்கத்தி, இருவாட்சி, கோகுடி, பிச்சி, நிலாப்பூக்களான பட்டி, நாயுருவி,

    நன்குப்பூ, பச்சை சிவந்தி, தும்பை, வெட்டி வேர், மருக்கொழுந்து, சிவகரந்தை, விஷ்ணு கரந்தை, துளசி

    செங்கீரை, கருஊமத்தை, அனிச்சம், நந்தியா வட்டை, பஞ்ச வில்வங்கள் ஆகியவை ஏற்றவை என்று கூறப்படுகிறது.

    • தாமரை ஏழு நாட்கள், அரளி மூன்று நாள், வில்வம் ஆறுமாதம், துளசி ஒரு வருடம் வைத்து பூஜிக்கலாம்

    தாமரை ஏழு நாட்கள், அரளி மூன்று நாள், வில்வம் ஆறுமாதம், துளசி ஒரு வருடம் வைத்து பூஜிக்கலாம் என்றும்,

    ஒருமுறை அர்ச்சித்த துளசி, வில்வம், கருஊமத்தை, நீலோத்பல் ஆகியவற்றைப் பொன் மலரைப் போல கழுவிச் சாற்றலாம் என்றும் சிவபூஜா பத்ததி என்ற நூல் கூறுகிறது.

    எடுத்தபின் மலர்ந்த பூ, பழம், எருக்கு மற்றும் ஆமணக்கு இலையில் கட்டிவைத்த பூ,

    கட்டிய ஆடையிலும் கையிலும் வைத்த பூ, கீழே உதிர்ந்த பூ, இடுப்புக் கீழ் உள்ள உறுப்புகளில் பட்ட பூ,

    புழுகடித்த பூ, சிலந்தி மற்றும் பறவைகள் எச்சமிட்ட பூ, மயிர்பட்ட பூ, இரவில் எடுத்த பூ, நீரில் மூழ்கிய பூ, அசுத்தரால் எடுக்கப்பட்ட பூ முதலானவை பூஜைக்கு ஏற்காதவை.

    • அபிஷேகம்- பாவம் அகலும், பீட பூஜை-சாம்ராஜ்யம் சித்தரிக்கும்,
    • நமஸ்காரம்- நான்கு புருஷார்த்தங்களையும் தரும், ஜபம்-அஷ்ட ஐஸ்வர்யம் தரும்,

    ஆவாகனம், ஆசனம், பத்யம், அர்க்யம், ஆசமனம், மதுவர்க்கம், ஸ்நானம், வஸ்த்ரம், யக்ஞோபவீதம், கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம், தாம்பூலம், நீராஞ்சனம்.

    பலன்கள்

    அபிஷேகம்- பாவம் அகலும், பீட பூஜை-சாம்ராஜ்யம் சித்தரிக்கும்,

    கந்தம்- சகல சவுபாக்கியத்தையும் அளிக்கும், புஷ்பம்- சவுக்கியம் தரும்,

    தூபம்- நல்ல வாசனை தரும், தீபம்- தேக காந்தியைத் தரும்.

    நைவேத்தியம்- மகாபோகத்தைத் தரும், தாம்பூலம்- லட்சுமி கடாசத்தைத் தரும்,

    நமஸ்காரம்- நான்கு புருஷார்த்தங்களையும் தரும், ஜபம்-அஷ்ட ஐஸ்வர்யம் தரும்,

    ஹோமம்- சர்வ காமஸ்கிருமிதியைத் தரும், அன்னதானம்- சர்வ தேவ திருப்திகரம்.

    • ஞாயிறு- சர்க்கரைப் பொங்கல்,
    • சிவபூஜைக்கு கத்திரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம்.

    ஞாயிறு- சர்க்கரைப் பொங்கல்,

    திங்கள்- பால் (அல்லது) தயிர் அன்னம்,

    செவ்வாய்- வெண்பொங்கல்,

    புதன்- கதம்பசாதம்,

    வியாழன்-சித்ரான்னம்,

    வெள்ளி-பால் பாயசம்,

    சனி-புளிசாதம்.

    சிவபூஜைக்கு கத்திரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம்.

    சிவபூஜைக்குப் பின்னர் இருபது சிவபக்தர்களுக்கு அன்னம் அளிப்பது மிகவும் விசேஷம்.

    108 ருத்ர காயத்ரி ஜபிப்பது விசேஷம்.

      சிவ பூஜைக்குரிய மலர்கள் நான்கு வகைப்படும். அவை

      1. கோட்டுப்பூ, 2. கொடிப்பூ, 3. நீர்ப்பூ, 4. நிலப்பூ.

      ஒவ்வொரு வகையிலும் இடம் பெற்றுள்ள பூக்கள் வருமாறு:

      1. கோட்டுப் பூ

      வன்னி, பலா, எலுமிச்சை, நார்த்தை, கோங்கு, மந்தாரை, கருஊமத்தை, மாவிலிங்கை, நொச்சி, பன்னீர், அகில், மாதுளை, அசோகு, பாதிரி, வெள்ளெருக்கு, இலந்தை, பலாசு, நுணா, நறவம், புன்னை, விளா, மருது, கொன்றை, நெல்லி, குரா, செருந்தி, பொன்னாவரை, கிளுவை, குருந்து, வில்வம், நாவல் இவைகள் கோட்டுப்பூ எனப்படும்.

      2. கொடிப்பூ

      நாட்டு மல்லிகை, முல்லை, மௌவல், வெற்றிலை, தாளி, கருங்காக்கொன்றை, வெண்காக்கொன்றை, குருக்கத்தி, இருவாட்சி (ஜாதிமல்லி), கொகுடி, பிச்சி இவை கொடிப்பூக்கள் எனப்படும்.

      3. நீர்ப்பூ

      செந்தாமரை, அதிக இதழில்லாத தாமரை, வெண்தாமரை, செங்கழுநீர், நீலோற்பவம், கருநெய்தல், செந்நெய்தல், வெண்நெய்தல் போன்றவை நீர்ப்பூ என்றழைக்கப்படுகிறது.

      4. நிலப்பூ

      பட்டி, நாயுருவி, கண்ணுப்பூ, பச்சை, சிவந்திப்பூ, தும்பை, வெட்டிவேர், மருக்கொழுந்து, சிவகரந்தை, விஷ்ணு கரந்தை, துளசி, செங்கீரை, கருஊமத்தை, செம்பரத்தை கொக்கிறகு, அனிச்சம், நந்தியாவட்டை இவை நிலப்பூ வகைகளாகும்.

      • புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும்.
      • சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும்.

      சிவராத்திரி அன்று கண் விழித்து விரதமிருந்து இறைவனை வணங்கும் போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.

      விரதம் கடைப்பிடிப்போர் முதல் நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும்.

      அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

      மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது.

      தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்த குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.


      இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்கு செல்கிறோம்.

      சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம் உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதே இல்லை.

      சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது உணர்வுகள் வெண்ணைபோல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழி வகுக்கிறது.

      ×