search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகன்யா ஸ்யவன மகரிஷி"

    • வருடத்தில் ஒருநாள் மட்டும் சிவராத்திரி என்று நினைக்கக்கூடாது. அனைத்தும் சிவமயமே!
    • “நவராத்திரி பூஜை எல்லாம் சிவராத்திரி பூஜையே” என்கின்றார்கள் சித்தர்கள்.

    அழகில் சிறந்த சுகன்யா என்பவள், தன்னைவிட மிக அதிக வயதான ஸ்யவன மகரிஷியைத் திருமணம் செய்து கொண்டாள்.

    அவள் திருமணம் செய்து கொண்டதும் தன் கணவனை, நாம் இருவரும் வாழ்வதோடு மட்டுமல்லாமல் இவ்வுலகமும் வாழ வழி ஒன்று சொல்ல வேண்டும் என்றாள்.

    உடனே ஸ்யவன மகரிஷி "அம்மா, அதற்கு வழி நவராத்திரி பூஜை ஒன்று தான்" என்றார். அவர் மேலும் கூறியதாவது:

    "நவராத்திரி பூஜை பெண்களுக்கு மட்டுமே உரித்தானது.

    ஆண்களுக்கு அதில் எந்தவிதமான பங்கும் கிடையாது" என்று நினைப்பது தவறு.

    ஏனென்றால், "நவராத்திரி பூஜை எல்லாம் சிவராத்திரி பூஜையே" என்கின்றார்கள் சித்தர்கள்.

    கோணக்காதர், கரபாத்திரர். சித்தர் சுடர், ஜடாமினி கோரக்கர், கொல்லிமலை முருகன், தான்பிஸண்டர்,

    கொங்கண சித்தர், கள்ளிப்பால் சித்தர், பாம்பாட்டி சித்தர் அனைவருமே

    "நவாராத்திரியானது சிவ பூஜை செய்வதற்கே!" என்கின்றனர்.

    ஆகவே, நவராத்திரி எல்லாமே சிவராத்திரி தான்.

    நவராத்திரியில் வரும் அனைத்துப் பகல்களும், இரவுகளும் சிவனையே சாரும்.

    வருடத்தில் ஒருநாள் மட்டும் சிவராத்திரி என்று நினைக்கக்கூடாது. அனைத்தும் சிவமயமே!

    அனைத்தும் சிவனின் இரவுகளே!

    அனைத்து துர்க்கைகளும் பகலில் ஈசனை வணங்குகின்றனர்.

    பகலில் ஈசனை வணங்கியதால் கிட்டும் பலனைத்தான் இரவில் தம்மை வணங்கும் பக்தர்களுக்கு அம்பிகைகளின் அம்சங்கள் அளிக்கின்றனர்.

    எனரே தான், "ஈசனை வணங்குதல் மிக முக்கியம்" என்று பெரியவர்கள் சொல்லி வைத்தனர்.

    பகலில் நாம் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து, சிவ பூஜை செய்தால் தான், இரவில் துர்க்கை தரும் பலனைப் பெற முடியும்.

    இவ்வாறு ஸ்யவந மகரிஷியானவர் சுகன்யா தேவிக்கு நவராத்திரி பூஜைகளின் சிறப்பையும்,

    அவற்றை முறையாகக் கொண்டாடுகின்ற விதத்தையும் எடுத்துரைத்தார்.

    சுகன்யா தேவியும் தன் கணவர் அருளியபடியே நவராத்திரி பூஜைகளைக் கடைப்பிடித்து, நல்ல நிலையை அடைந்தாள்.

    ×