search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதாகர் ரெட்டி"

    • நடிகை கஸ்தூரியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    • பாஜகவின் சுதாகர் ரெட்டி தெலுங்கிலேயே பேசி கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய நடிகை கஸ்தூரி,

    "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தபுரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழகர்கள் என... அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யார்ங்க தமிழர்கள். அதனால்தான் உங்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து.." எனப் பேசினார்.

    நடிகை கஸ்தூரியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் தெலுங்கு மொழி பேசுபவர்கள் குறித்து நடிகை கஸ்தூரி கூறிய சர்ச்சை கருத்துக்கு தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பாஜகவின் சுதாகர் ரெட்டி தெலுங்கிலேயே பேசி கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தனது கருத்தை கஸ்தூரி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

    • ஜனநாயக உரிமைகளை முடக்குவது அரசியல் சாசனத்துக்கு எதிரான செயல்.
    • தமிழகத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சி தி.மு.க.வை அதிர வைத்துள்ளது.

    சென்னை:

    பா.ஜனதா கொடிக்கம்பம் அகற்றப்பட்டதற்கும், கட்சியினர் கைது செய்யப்பட்டதற்கும் பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக தமிழக பா.ஜனதாவின் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை புறநகரில் உள்ள தமிழ்நாடு பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இல்லம் அருகே வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்றி பா.ஜனதா தொண்டர்களை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது.

    தி.மு.க. அரசின் பழி வாங்கும் அரசியலின் ஒரு பகுதிதான் இது. ஜனநாயக உரிமைகளை முடக்குவது அரசியல் சாசனத்துக்கு எதிரான செயல்.

    தமிழகத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சி தி.மு.க.வை அதிர வைத்துள்ளது. குறிப்பாக அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை தி.மு.க.வினரை அதிரவிட்டுள்ளது.

    தி.மு.க. அரசின் இந்த மாதிரி மிரட்டல்களுக்கு பா.ஜனதா பயப்படாது. ஆளும் தி.மு.க. அரசின் பல்வேறு ஜனநாயக விரோத கொள்கைகள் மற்றும் தவறான ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

    ×