search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மிக உணர்வு"

    • விரதம் இருந்தும் வழிபாட்டில் ஈடுபடுவார்கள்.
    • பூண்டு, வெங்காயத்தையும் ஒதுக்கி வைப்பதுண்டு.

    நாடு முழுவதும் கொண்டாடப்டும் பண்டிகைகளுள் ஒன்று நவராத்திரி. பலரும் வீட்டில் கொலு வைத்து வழிபாடு நடத்துவார்கள். விரதம் இருந்தும் வழிபாட்டில் ஈடுபடுவார்கள். அதற்கு ஏற்ப உணவுக்கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பார்கள். சில உணவுப்பொருட்களை அறவே தவிர்ப்பார்கள். பெரும்பாலும் அசைவத்தை தவிர்க்கும் நிலையில் பூண்டு, வெங்காயத்தையும் ஒதுக்கி வைப்பதுண்டு.

    நவராத்திரியின் போது பூண்டு, வெங்காயத்தை தவிர்ப்பதற்கு காரணங்களும் இருக்கின்றன. இந்து மதத்தில் உணவுப்பொருட்கள் ராஜசம், தமாசம், சாத்வீகம் என மூன்று விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் சாத்வீக உணவுகள் ஆன்மிக உணர்வை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.

    பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், நட்ஸ் வகைகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், இறைச்சி அல்லாத புரத உணவுகள் சாத்வீக உணவுகளாக குறிப்பிடப்படுகின்றன. இவற்றை சாப்பிடுவதன் மூலம் மனதை அடக்க முடியும். சகிப்பு தன்மை, கருணை, மகிழ்ச்சி போன்ற உணர்வுகள் இயல்பாகவே வெளிப்படவும் செய்யும். உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியையும் அளிக்கும். உடலில் உள்ள நச்சுக்களை விரைவாக நீக்கும்.

    விரதத்தின்போது சாத்வீக உணவுகளை உட்கொண்டால் எளிதில் ஜீரணமாகும். அதனால் சாப்பிட்ட உணவுகள் செரிமானமாவதற்கு குறைந்த நேரமே செலவாகும். அதனால் குடல் இயக்கங்களுக்கு ஓய்வு கிடைக்கும். உடலும் சோர்வின்றி இருக்கும். மேலும் சாத்வீக உணவு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்யும். நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்தும். மன நலனையும் மேம்படுத்தும். அதனால்தான் நவராத்திரியின்போது சாத்வீக உணவுகளை சாப்பிடுவதற்கு பரிந்துரைக்கிறார்கள்.

    ஆயுர்வேதத்தின்படி வெங்காயம், பூண்டு இவை இரண்டும் தாமசம் வகை உணவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகை உணவுகள் மனம், ஆன்மாவிற்கு இடையூறு ஏற்படுத்ததக்கூடியவையாக குறிப்பிடப்படுகின்றன. உணர்ச்சிகள், ஆசைகளை தூண்டுவது, பேராசை கொள்ள வைப்பது, மந்தநிலை, மனச்சோர்வு அடைவது போன்ற குணங்களை தூண்டக்கூடியவையாக கருதப்படுகின்றன.

    வெங்காயத்தை பொறுத்தவரை உடல் உஷ்ணத்தையும் ஏற்படுத்தக் கூடியது. பூண்டு உணர்ச்சிகளை, ஆசைகளை கட்டுப்படுத்தும் விஷயத்தில் எதிர்மறையாக செயல்படக்கூடியது. அதனால் நவராத்திரி விரதத்தின்போது அவைகளை உட்கொள்வது நல்லதல்ல என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

    ×