search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்டுவெல்"

    • கால்டுவெல் பல மொழிகளை ஆராய்ந்து, சமஸ்கிருதத்திற்கு முன்பிருந்த மொழி தமிழ்மொழி என்றும், அதன் தொன்மையையும், சிறப்பையும் ஆய்வின் மூலம் உலகத்திற்கு உணர்த்தியவர்.
    • சங்க காலத்தில் இருந்தே தமிழர்கள் பிற நாட்டினருடன் தொடர்பில் இருந்தார்கள் என்று முதன் முதலில் அச்சில் ஏற்றியவர்.

    சென்னை:

    திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரித்தாளும் கொள்கைகளுக்காகவே கால்டுவெல் போன்றவர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்கள் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

    இதற்கு தமிழக சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் கு.செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்தா வது:-

    அறிஞர் ராபர்ட் கால்டுவெல் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன்பு இந்தியாவின் தொன்மையான, சிறப்பான மொழி சமஸ்கிருதம் என்றும், தமிழ்மொழி உட்பட அனைத்து மொழிகளும் அந்த மொழியில் இருந்து தான் தோன்றியது என்ற மாயை இந்தியாவில் நிலவியது. மொழியியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் பல மொழிகளை ஆராய்ந்து, சமஸ்கிருதத்திற்கு முன்பிருந்த மொழி தமிழ்மொழி என்றும், அதன் தொன்மையையும், சிறப்பையும் ஆய்வின் மூலம் உலகத்திற்கு உணர்த்தியவர்.

    சமஸ்கிருதம் இல்லாமல் தமிழ்மொழியால் இயங்க முடியும் என்றும் சங்க காலத்தில் இருந்தே தமிழர்கள் பிற நாட்டினருடன் தொடர்பில் இருந்தார்கள் என்றும் முதன் முதலில் அச்சில் ஏற்றியவர். தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் பண்டைய தமிழர்களின் நாகரிகம் குறித்தும் வெளியிட்டவர்.

    சமஸ்கிருதத்தின் முகமூடியை கிழித்து, தமிழ் மொழியின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டியவர்களை இழித்து பேசுவது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களில் மூழ்கியவர்களால் மட்டும்தான் முடியும்.

    தமிழ்நாட்டின் கவர்னர் தமிழ்மொழிக்கும், தமிழர்களுக்கும் எவர் நல்லது செய்தாலும் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவர்களை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு கொச்சைப்படுத்தும் வகையில் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×