என் மலர்
நீங்கள் தேடியது "பாரத ராஷ்டிரீய சமிதி"
- தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 30-ம் தேதி சட்டசப்பைத் தேர்தல் நடைபெற உள்ளது.
- அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாரத ராஷ்டிரீய சமிதி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 30-ம் தேதி சட்டசப்பைத் தேர்தல் நடைபெற உள்ளது.
அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாரத ராஷ்டிரீய சமிதி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தனியார் டி.வி. நேரலை விவாத நிகழ்ச்சி சமீபத்தில் நடத்தியது. இதில் சந்திரசேகரராவ் கட்சி எம்.எல்.ஏ. விவேகானந்தர் மற்றும் பா.ஜ.க வேட்பாளரான குணா ஸ்ரீசைலம் கவுட் ஆகியோர் பங்கேற்றனர்.
பா.ஜ.க. வேட்பாளர் குணா ஸ்ரீசைலம் கவுட் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆத்திரமடைந்த விவேகானந்தர் எம்.எல்.ஏ, பா.ஜ.க வேட்பாளரின் கழுத்தை இறுக்கி பிடித்துக் கொண்டு முகத்தில் கையால் குத்தினார்.
இதனை நேரடியாக பார்த்த பல்லாயிரக்கணக்கானோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பா.ஜ.க. சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்நிலையில், தெலுங்கானா பா.ஜ.க. மாநில தலைவரும், மத்திய மந்திரியுமான கிஷன் ரெட்டி கூறுகையில், விவேகானந்தர் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவேண்டும். இல்லை என்றால் பா.ஜ.க. சார்பில் சட்டப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
- தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
- அங்கு ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிரிய சமிதி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாரத் ராஷ்டிரிய சமிதி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யான விவேக் வெங்கடசாமி, சென்னூர் தொகுதியில் தனது மகன் போட்டியிட வாய்ப்பு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கோரிக்கையை பா.ஜ.க. ஏற்கவில்லை. இதனால் அவர் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்துள்ளார்.
இந்நிலையில், முன்னாள் எம்.பி.யான விவேக் வெங்கடசாமி பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக மாநில தலைவர் கிஷண் ரெட்டிக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, அவர் தாய்க்கட்சியான காங்கிரசில் இணைந்துள்ளார்.