என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டயட் புட்"
- வாரத்திற்கு ஒரு முறை டைட்டனிங் ஃபேஷியல் செய்ய வேண்டும்.
- டைட்டனிங் மாஸ்க்கை பெண்கள் வீட்டிலேயே தயாரிக்க முடியும்.
உடல் எடையை குறைத்தாலே உடலில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் குறைந்து முகம், கை, கழுத்து, கைவிரல் போன்ற பகுதிகளில் சுருக்கங்கள் தோன்றும். இதனை போக்குவதற்கு வாரத்திற்கு ஒரு முறை டைட்டனிங் ஃபேஷியல் செய்ய வேண்டும்.
இந்த டைட்டனிங் மாஸ்க்கை பெண்கள் வீட்டிலேயே தயாரிக்க முடியும். முட்டையின் வெள்ளைக்கரு, முல்தானிமட்டி, தேன் மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் தேய்த்து வந்தாலே போதும். வறண்ட சருமமாக இருந்தால் பால் சேர்த்துக்கொள்ளலாம்.
டைட்டனிங் மாஸ்குகளும், ரைட்டனின் ஃபேஷியல்களும் சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்க உதவுகின்றன. சருமத்தின் அழகை பாதுகாக்க கார்போ ஹைட்ரேட், புரோட்டின், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு போன்ற உணவுகள் தேவை.
முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய், கீரை வகைகள், முளைவிட்ட பயறு வகைகள் போன்றவை சருமத்திற்கு இளமையையும், மினுமினுப்பையும் தரும். அதோடு மட்டுமில்லாமல் தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தாலும் வறண்ட சருமம் சுருக்கம் இல்லாமல் பொலிவாக இருக்கும்.
புரோட்டின் கலந்த உணவுகளை எடுத்துக்கொள்வது மட்டுமல்லாமல் ஆயில் மசாஜ், ஹென்னா, ஸ்பா சிகிச்சைகளும் செய்வது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது. பெண்கள் டீன் ஏஜ் வயதில் இருந்தே உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
- புரோட்டின் உள்ள உணவுகளாக தேர்வு செய்து கொடுப்பது அவசியம்.
- பருப்பு வகைகளில் புரோட்டின் சத்துக்கள் அதிகப்படியாக இருக்கும்.
நம் குழந்தைகள் வளரும் காலங்களில் அவர்களுக்கு அதிகம் தேவைப்படும் சத்து புரோட்டின். அதற்காக முக்கியமாக நாம் புரோட்டின் உள்ள உணவுகளாக தேர்வு செய்து கொடுப்பது அவசியம். குழந்தைகளுக்கு புரோட்டின் உள்ள காய்கறிகள் போன்றவற்றை உணவாக கொடுக்கும் பொழுது அவர்கள் முதலில் உணவுகளை தவிர்க்கத் தான் பார்ப்பார்கள். ஆனால் புரோட்டின் சத்தை அவர்களுக்கு விரும்பிய படி நாம் கொடுக்கலாம்.
பருப்பு வகைகளில் புரோட்டின் சத்துக்கள் அதிகப்படியாக இருக்கும். அந்த பருப்புகளை எல்லாம் அரைத்து அதில் இருந்து நாம் லட்டு தயாரித்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் போது அவர்கள் லட்டை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
நெய்- 4 ஸ்பூன்
நிலக்கடலை- ஒரு கப்
உலர் திராட்சை- 100 கிராம்
முந்திரி- 50 கிராம்
பாதம்- 50 கிராம்
பிஸ்தா- 50 கிராம்
பூசணி விதை- 50 கிராம்
ஏலக்காய்- 6
பேரிச்சம் பழம்- 150 கிராம்
செய்முறை:
முதலில் கடாயை அடுப்பில் வைத்து நாம் எடுத்து வைத்திருக்கும் நிலக்கடலையை காடாயில் போட்டு எண்ணெய் இல்லாமல் வறுத்துக் கொள்ளுங்கள். கடலை வறுபட்டு பொன்னிறமாக வந்ததும் அதை தாம்பூல தட்டில் ஓரமாக கொட்டிக் கொள்ளுங்கள்.
அதன்பிறகு கடாயில் கால் டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் உலர் திராட்சை பழங்களை சேர்த்து நன்றாக வறுத்து எடுங்கள். ஒரு நிமிடம் நன்றாக வறுத்து எடுத்த பின்னர் உலர் திராட்சையும் தாம்பூல தட்டில் ஒரமாக கொட்டி வைக்க வேண்டும்.
பின்னர் மறுபடியும் கால் டீஸ்பூன் நெய் ஊற்றி அதனுடன் முந்திரி பருப்புகளையும் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து அதையும் ஏற்கனவே வறுத்த பொருட்கள் உடன் சேர்த்து கொட்டிக் கொள்ளவும்.
அதன்பிறகு மறுபடியும் கால் டீஸ்பூன் நெய் ஊற்றி பாதாம் பருப்பு சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும், பாதாம் பருப்பு நன்கு வறுபட்டதும் அதையும் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்து வைத்து விடுங்கள். பின்னர் மீண்டும்பிஸ்தா பருப்பை கடாயில் சேர்த்து நன்கு வறுத்து விடுங்கள். பிஸ்தா பருப்பு வறுத்தெடுத்தபின், பூசணி விதையையும் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு ஏலக்காயையும் சேர்த்து ஒரு 10 வினாடிகள் வறுத்து, அதையும் மீதமுள்ள பொருட்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது நாம் வறுத்த பொருட்கள் அனைத்தும் ஆறியதும் தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.
நாம் வறுத்த பொருட்களில் உலர் திராட்சை மற்றும் நிலக்கடலை தவிர அனைத்து பொருட்களை எல்லாம் மிக்சி ஜாரில் போட்டு நன்றாக கொர கொரவன அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு நிலக்கடலையின் மேற்புறத்தோலை நீக்கிவிட்டு அதையும் மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த அரைத்த பொடியை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொண்டு மிக்ஸி ஜாரில் பேரிச்சம்பழம் பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு சேர்த்துக் கொள்ளுங்கள், இதனுடன் நாம் வறுத்து வைத்துள்ள உலர் திராட்சையையும் சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
நாம் அரைத்த பேரிச்சம் பழத்தை ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்து கைகளில் சிறிது நெய் தடவிக் கொண்டு நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்து பொருட்களையும் நன்றாக பிசைந்ததும் முடித்ததும் பின்னர் லட்டு போன்று உருண்டைகளாக பிடிக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான புரோட்டின் லட்டு தயார்.
- டயட் ஃபாளோ பண்றவங்க இதை கண்டிப்பாக உங்களது லிஸ்டில் சேர்க்கலாம்.
- கொலஸ்ட்ரால் சேமிப்பைத் தவிர்க்கும்.
ஓட்சில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட், ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் சேமிப்பைத் தவிர்க்கும். கொழுப்பு சேர்ந்தவர்களுக்கு அதைக் குறைப்பதற்கு கோதுமை ரவை ஒரு வரப்பிரசாதமாகும். இன்றைக்கு ஒரு ஹெல்த்தியான ஓட்ஸ் இட்லி மிருதுவாகவும், பஞ்சுபோலவும் சுவையாக எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ்- ஒரு கப்
கோதுமை ரவை- ஒரு கப்
தயிர்- ஒரு கப்
கடலைபருப்பு- ஒரு ஸ்பூன்
பச்சைமிளகாய்- 1 (நறுக்கியது)
கடுகு- கால் டீஸ்பூன்
சிரகம்- கால் டீஸ்புன்
உளுந்தப்பருப்பு- கால் டீஸ்பூன்
கேரட்- 1 துருவியது
முந்திரி- 2 ஸ்பூன்
இஞ்சி- கால் ஸ்பூன்
சோடா உப்பு
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து மிதமான தீயில் ஓட்சை போட்டு வறுக்க வேண்டும். அதில் கோதுமை ரவையையும் சேர்த்து வறுத்து எடுத்து வேறு ஒரு பிளேட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். இதில் நறுக்கிய பச்சைமிளகாய், கேரட், இஞ்சி, முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள ஓட்ஸ், கோதுமை ரவையை இதில் சேர்க்க வேண்டும். அதில் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் சோடா உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் மூடி போட்டு வைக்க வேண்டும். அதன்பிறகு இந்த கலவையை இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேகவைத்து எடுத்தால் ஓட்ஸ் இட்லி தயார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்