என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இன்ஃபோசிஸ்"
- மோதிலால் நேரு இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
- சீனா போன்ற நடுகளை இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அவர்களிடம் தனிநபர் நில இருப்பு அதிகமாக உள்ளது.”
சர்வதேச தொழில்நுட்ப நிறுவனம் இன்ஃபோசிஸ். இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் நாரயண மூர்த்தி, இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருவது பற்றி பேசியுள்ளார்.
மோதிலால் நேரு இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் "இந்தியா மக்கள் தொகை, தனிநபர் நில இருப்பு மற்றும் சுகாதார வசதிகள் தொடர்பாக குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கிறது."
"இந்த அவசர காலக்கட்டத்தில் மக்கள் தொகை கட்டுபாட்டை பற்றி நாம் கவலைப்படுவது இல்லை. இதே போன்ற சூழ்நிலை இன்னும் சில வருடங்களுக்கு தொடர்ந்தால், இந்தியாவில் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். அமெரிக்கா, பிரேசில், சீனா போன்ற நாடுகளை இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அவர்களிடம் தனிநபர் நில இருப்பு அதிகமாக உள்ளது."
"இதை கருத்தில் கொண்டு அனைவரும் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். இது நம் அனைவரின் கடமை மற்றும் பொறுப்பும் கூட. ஒரு தலைமுறை இவ்வாறு தியாகம் செய்தால் தான் அடுத்து வரும் தலைமுறையின் வாழ்வாதாரம் அதிகரிக்கும். என பெற்றோர்கள், சொந்தங்கள், ஆசிரியர்கள் செய்த தியாகத்தினால் தான் நான் இன்று உங்கள் முன் சிறப்பு விருந்தினராக நிற்கிறேன்," என்றார்.
- 2017 - 2022 வரை இந்த வரி ஏய்ப்பு நடந்ததாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் தகவல்.
- இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்று 1% சரிவை சந்தித்தன.
இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், ரூ.32,000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
2017 ஜூலையில் இருந்து 2022 மார்ச் மாதம் வரை அந்நிறுவனத்தின் வெளிநாட்டு கிளைகளில் இருந்து சேவைகளை இறக்குமதி செய்ததில் இந்த வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இன்ஃபோசிஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "அனைத்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகையையும் தனது நிறுவனம் செலுத்தியுள்ளது என்றும் இந்திய நிறுவனத்திற்கு வெளிநாட்டு கிளைகள் வழங்கும் சேவைகள் ஜிஎஸ்டி வரி விதிமுறைகளுக்குள் வருவதில்லை" என்றும் தெரிவித்துள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக அறிக்கை வெளியான நிலையில், அந்நிறுவனத்தின் பங்குகள் இன்று 1% சரிவை சந்தித்துள்ளன.
- ஏஐ தொழில்நுட்பம் உலகளவில் பன்மடங்கு வளர்ச்சியடைந்து வருகிறது.
- ஐஎஸ்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது.
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை வழங்கும் நிறுவனங்களாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளன. எனினும், ஏஐ சார்ந்த திட்டங்களை கையாள்வதில் இரு நிறுவனங்களும் பின்னடைவில் இருப்பதாக இன்ஃபர்மேஷன் சர்வீஸ் குரூப் (ஐஎஸ்ஜி) வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
2024 ஜூன் மாதத்திற்கு முந்தைய 12 மாத காலங்களில் ஏஐ சார்ந்த சுமார் 2250 திட்டங்களில் அக்சென்ச்சர் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே காலக்கட்டத்தில் டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் முறையே 300 மற்றும் 200 ஏஐ சார்ந்த திட்டங்களை கைப்பற்றி இருக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு என்ப்படும் ஏஐ தொழில்நுட்பம் உலகளவில் பன்மடங்கு வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், முன்னணி ஐடி நிறுவனங்கள் இது தொடர்பான திட்டங்களில் எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது தொடர்பாக தகவல்கள் தான் ஐஎஸ்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது.
அதன்படி அக்சென்ச்சர் மற்றும் ஐபிஎம் நிறுவனங்கள் கிட்டத்தட்ட 1000 ஏஐ திட்டங்களை முடித்துள்ளது. ஏஐ சார்ந்த திட்டங்களை கையாள்வது தொடர்பாக முன்னணியில் உள்ள ஐந்து நிறுவனங்கள் பட்டியலில் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் கார்ப் மற்றும் கேப்ஜெமினி எஸ்இ உள்ளிட்டவை முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன.
புதிய தொழில்நுட்பங்களை முன்கூட்டியே பயன்படுத்த துவங்கியது மற்றும் போட்டியில் அதிகவனம் செலுத்துவது உள்ளிட்டவை தான் அக்சென்ச்சர் மற்றும் ஐபிஎம் நிறுவனங்கள் அதிகளவு ஏஐ திட்டங்களை கைப்பற்றுவதற்கு காரணம் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
"ஏஐ சார்ந்த திட்டங்களில் முன்கூட்டியே ஆர்வம் காட்டுவதன் மூலம் அதிக திட்டங்களை கைப்பற்றவோ அல்லது அதிக திட்டங்களில் பணியாற்றவோ முடியும். சர்வதேச நிறுவனங்கள் முன்கூட்டியே இதுதொடர்பான பணிகளில் ஈடுபட துவங்கியதன் விளைவு தான், அவர்கள் இத்தனை திட்டங்களை பெறுவதற்கு முக்கிய காரணம்," என்று கான்ஸ்டெலேஷன் ரிசர்ச் நிறுவனர் ரே வாங் தெரிவித்தார்.
- கலந்துரையாடலில் நாராயண மூர்த்தி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
- இவரது கருத்து சமூக வலைதளங்களில் புயலை கிளப்பியது.
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனம் இன்ஃபோசிஸ். இதன் இணை நிறுவனர்களில் ஒருவர் தான் 77 வயதான நாராயண மூர்த்தி. இந்த வயதிலும் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் நாராயண மூர்த்தி தெரிவித்த சமீபத்திய கருத்து சமூக வலைதளங்களில் புயலை கிளப்பியது.
யூடியூப் தளத்தில் வெளியான தி ரெக்கார்டு எனும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி இன்றைய இளைஞர்கள் தற்போது இருப்பதை விட கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார். இவரது கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. சிலர் இவரது கருத்து சரியானது என்று ஆதரவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கியூர்ஃபிட் நிறுவனர் முகேஷ் பன்சால், நாராயண மூர்த்தியின் கருத்துக்கு பதில் அளித்துள்ளார். இவரது கருத்துக்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து முகேஷ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அந்த பதிவில், "முதலில், இது தனிப்பட்ட விருப்பம். உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்று, குடும்பமும், வேலையும், அமைதியான மனநிலையும் முக்கியமானதாகும். மக்கள் தங்களுக்கு எது முக்கியம் என்பதை முடிவு செய்து, அதனை தேர்வு செய்து கொள்ள வேண்டும். வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை பார்க்க சொல்லும் நிறுவனங்கள், அதற்கான விகிதாசாரத்தை உருவாக்க வேண்டும்."
"40 மணி நேரத்திற்கான சம்பளத்தை கொடுத்துவிட்டு, 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று வலியுறுத்த முடியாது. இதில் எந்தவிதமான நியாமும் இல்லை. ஆனால், இளைஞர்கள் தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில், அதிக நேரம் உழைப்பது பற்றி முடிவு எடுக்கலாம்," என்று தெரிவித்துள்ளார்.
- கலந்துரையாடலில் அவர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
- கருத்து சமூக வலைதளங்களில் புயலை கிளப்பியது.
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனம் இன்ஃபோசிஸ். இதன் இணை நிறுவனர்களில் ஒருவர் தான் 77 வயதான நாராயண மூர்த்தி. இந்த வயதிலும் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் நாராயண மூர்த்தி தெரிவித்த சமீபத்திய கருத்து சமூக வலைதளங்களில் புயலை கிளப்பியது.
யூடியூப் தளத்தில் வெளியான தி ரெக்கார்டு எனும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் இன்ஃபோசிஸ் முன்னாள் தலைமை நிதி அலுவலர் மோகன்தாஸ் பை ஆகியோர் கலந்துரையாடினர். இந்த கலந்துரையாடலில் அவர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதில் பெரும்பாலானவை தேசத்தை கட்டியெழுப்புவது, தொழில்நுட்பம், இளைஞர்கள் போன்ற தலைப்புகளை சார்ந்து இருந்தது.
அந்த வகையில் பேசும் போது இன்றைய இளைஞர்கள் தற்போது இருப்பதை விட கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார். அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் தனது இலக்கு பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது, இந்தியாவில் உற்பத்தி திறனை அதிகப்படுத்தி, அரசாங்கத்தால் ஏற்படும் தாமதங்களை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், "உலகிலேயே இந்தியாவின் உற்பத்தித் திறன் மிகவும் குறைவாக இருக்கிறது. இதனை மேம்படுத்தவும், அரசாங்கத்தில் இருக்கும் ஊழலை ஓரளவுக்கு குறைக்கவும் முயற்சிக்க வேண்டும். ஊழல் பற்றி படித்தவரையில், உண்மை நிலவரம் எனக்கு தெரியாது. ஆனால், அரசாங்கத்தால் ஏற்படும் தாமதங்களை குறைக்காமல், அதிகளவு திறன் படைத்த நாடுகளுடன் நம்மால் போட்டியிட முடியாது."
"இதற்கு என்னுடைய வேண்டுகோள் ஒன்று மட்டும்தான். நம் நாட்டின் இளைஞர்கள், 'இது என்னுடைய நாடு, நான் வாரத்திற்கு 70 மணி நேரம் நிச்சயம் வேலை செய்ய விரும்புகிறேன்' என்று கூற வேண்டும்," என்று தெரிவித்து உள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தனது கருத்துடன் வரலாற்று எடுத்துக்காட்டுக்களையும் முன்வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்