search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிவிஎஸ் நிறுவனம்"

    • டி.எஸ்.சீனிவாசன் நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
    • அப்போது, தமிழக தொழில்துறையில் டி.வி.எஸ் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் டி.எஸ்.சீனிவாசன் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    டி.வி.எஸ். என்ற மூன்றெழுத்தின் நிறுவனத்தை வாழ்த்த தி.மு.க. என்ற மூன்றெழுத்தின் தலைவர் வந்திருக்கிறேன்.

    டி.வி.எஸ். முக்கிய நிறுவனம் என்பதை யாரும் மறைக்க முடியாது. இன்று இருசக்கர வானங்கள் எது வந்தாலும், ஏழை எளிய மக்களின் வாகனமாக திகழ்ந்தது டி.வி.எஸ்.தான்.

    வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு வேணு சீனிவாசன் உள்ளிட்டோர் திகழ்கின்றனர்.

    வாரிசு என்றதும், ஏதோ அரசியல் பேசுவதாக நினைக்க வேண்டாம். தொழிலாளர்களின் மீது அக்கறை கொண்டவராக விளங்கினார்.

    டி.வி.எஸ். நிறுவனம் போன்று அனைத்து நிறுவனங்களும் கிராமப்புறங்களுக்கு உதவ வேண்டும். டி.வி.எஸ். போன்ற பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உருவாக வேண்டும். வேணு சீனிவாசனை போன்ற பல தொழிலதிபர்கள் நமக்கு தேவை. தமிழக தொழில்துறையில் டி.வி.எஸ். நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.

    உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை பெரிய அளவிற்கு நடத்த திட்டமிட்டுள்ளோம். உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வேணு சீனிவாசன் பொறுப்பேற்று பணியாற்ற வேண்டும். நம்ம ஸ்கூல் திட்டத்திற்கு இதுவரை ரூ.150 கோடி நிதி வந்துள்ளது என தெரிவித்தார்.

    ×