என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டுக்குறிப்புகள் சமையல் டிப்ஸ்"

    • ஒரு கைப்பிடி ஓட்சை பொடித்து போடுங்கள். குருமா கெட்டியாகிவிடும்.
    • தோசைமாவில் நல்லெண்ணெய் கலந்து ஊற்றினால் தோசை மிருதுவாக இருக்கும்.

    * வெங்காய பக்கோடாவுக்கு அரை டீஸ்பூன் சோம்பு, கறிவேப்பிலை சிறிது சேர்த்து செய்தால் வாசனை, சுவை சூப்பராக இருக்கும்.

    * காய்ந்த மணத்தக்காளி, சுண்டைக்காய் வற்றலில் உப்பு அதிகமாகிவிட்டால் வற்றல் மூழ்கும் வரை நீர் ஊற்றி ஒரு நிமிடம் அப்படியே வைத்துவிட்டு வடிகட்டவும். பின்பு உலர வைத்தால் உப்பின் வீரியம் குறைந்துவிடும்.

    * முள்ளங்கி இலையை எண்ணெய் ஊற்றி வதக்கி, காய்ந்த மிளகாய், உளுந்து, பெருங்காயம், உப்பு சேர்த்து வறுத்து துவையல் செய்தால் சுவையாக இருக்கும்.

    * குருமா நீர்த்துவிட்டால், அதில் ஒரு கைப்பிடி ஓட்ஸை பொடித்து போடுங்கள். குருமா கெட்டியாகிவிடும்.

    * கொத்தமல்லி காம்பை புளியுடன் சேர்த்து வெயிலில் காயவைத்து லேசாக இடித்து எடுத்துக்கொள்ளவும். கொத்தமல்லித்தழை கிடைக்காத நேரத்தில் இதை கொண்டு ரசம் வைக்கலாம்.

    * முளைக்கட்டிய பச்சை பயிறை நைசாக அரைத்து கோதுமை மாவுடன் சேர்த்து பிசைந்து செய்யப்படும் சப்பாத்தி மிகவும் சத்துடன், சுவையாகவும் இருக்கும்.

    * உளுந்தம் பருப்பு வடை செய்வதற்கு மாவு அரைக்கும்போது, அதனுடன் சிறிது துவரம் பருப்பை சேர்த்து அரைத்தால் வடை மிருதுவாகவும், சுவையுடனும் இருக்கும்.

    * பருப்புப்பொடி அரைக்கும்போது 2 டீஸ்பூன் ஓமம் சேர்த்து அரைத்தால் மணத்துடன் சுவையாகவும் இருக்கும். உடலுக்கும் நலம் சேர்க்கும்.

    * தோசை மாவில் நான்கைந்து டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து ஊற்றினால் தோசை மிருதுவாக இருக்கும்.

    * தோசைக்கல்லில் சிறிது பெருங்காயத்தூளை பரவலாக தூவி துடைத்துவிட்டு மாவை ஊற்றினால் கல்லில் ஒட்டாமல் தோசை வார்க்கலாம்.

    * வெண்ணெய்யில் சிறிது பால் விட்டு நன்றாக குழைத்து பிரெட் துண்டுகளின் மேல் தடவுவது நல்லது. எல்லா பக்கமும் சுபலமாக படர்வதற்கு வழிவகை செய்யும்.

    * குலோப் ஜாமூன் மாவை பிசைந்து உருட்டிய பின்பு சிறிய ஊசியால் ஓட்டை இட்டு பொரித்து எடுத்தால் மாவு உள்ளே நன்றாக வெந்து இருக்கும்.

    * பச்சைக் காய்கறிகளில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து வேக வைத்தால் காய்கறிகளின் இயற்கை நிறம் மாறாது.

    * சேனைக்கிழங்கு நறுக்கும்போது கையில் நல்லெண்ணெய் தடவிவிட்டு நறுக்கினால் கையில் அரிப்பு ஏற்படாது.

    ×