என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெய்வபக்தி"

    • விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர்.
    • மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான்.

    விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர்.

    மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான்.

    ஒவ்வொரு விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.

    1. திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவனின் பரிபூர அன்பைப் பெறலாம்.

    2. செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீங்கி வாழலாம்.

    3. புதன் கிழமை விரதம் இருந்தால் நோய்கள் தீரும்.

    4. வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறலாம்.

    5. வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறலாம்.

    6. சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

    7. ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறலாம், நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

    ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால்

    எல்லா நன்மைகளும் கிட்டும்.

    எனவே உங்கள் நிலைக்கு ஏற்ப விரதம் இருங்கள்.

    • சிவபெருமானுக்கு சிறப்பாக உள்ள நாட்கள் மூன்றாகும்.
    • ஆறு காலங்களுக்கும் அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறும்.

    சிவபெருமானுக்கு சிறப்பாக உள்ள நாட்கள் மூன்றாகும்.

    அவை மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகியவை ஆகும்.

    அதில் சிவராத்திரி தினங்களில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்புடையதாகும்.

    அன்றைய தினம் சிவன் கோவில்கள் இரவு முழுவதும் திறந்திருக்கும்.

    ஆறு காலங்களுக்கும் அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறும்.

    அன்று ஈசனை நினைத்து விரதம் இருந்து ஆறு காலங்களையும் அபிஷேக ஆராதனையுடன் தரிசிப்பது மிகவும் புண்ணிய பலன்களை தரும்.

    முக்தி கிடைக்கும்.

    சிவராத்திரியில் யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று ஐந்து வகைகள் உண்டு.

    மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் மகா சிவராத்திரி வரும்.

    அன்றைய தினத்தில் உபவாசமிருந்து அவரவர்களுக்கு உகந்ததைப் பாராயணம் செய்தால் ஈசன் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

    ×