என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "12 ராசிகள்"
- புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்.
- புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் சில கோளாறுகள் ஏற்படும்.
மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். இவர் நரம்பிற்கு அதிபதி என்பதால் புதன் பலம் பெற்றால் உடலில் நரம்புகள் சிறப்பாக இயங்கி அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறார்கள்.
புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். இத்தகைய புதன் தனது சொந்த வீடான கன்னியில் 23. 9.2024 முதல் 10.10.2024 வரை உச்சம் பெற்று கேதுவுடன் இணைகிறார். இதனால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்கு புதன் 3, 6-ம் அதிபதியான புதன், ராசிக்கு 6-ல் உச்சம் பெறுவதால் உத்தி யோக மாற்றம் ஏற்படலாம். வேலை இல்லாத வர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். விண்ணப்பித்த வீடு, வாகன, தொழில் முன்னேற்ற கடன் கிடைக்கும். முக்கிய ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் அகலும். ஆரோக்கியத்தை உடல் நலத்தை பேணுவது நல்லது.
பரிகாரம்: புதன்கிழமை சக்ரத்தாழ்வாரை வழிபடவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு 2, 5-ம் அதிபதியான புதன் ராசிக்கு 5-ல் உச்சம் பெறுவதால் புத்திர பிராப்த்தம் உண்டாகும். பிள்ளைகளால் பூர்வீகத்தால், பூர்வீகச் சொத்தால் பயன் உண்டு. மூளையை மூலதனமாகக் கொண்ட ஏஜென்சி, கன்சல்டிங் நிறுவனங்கள், பங்கு வர்த்தகத்தில் மிகுதியாக சம்பாதிப்பார்கள். கவுரவப் பதவி கிடைக்கும். கற்ற கல்வி பயன் தரும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபடவும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு 1,4-ம் அதிபதியான புதன் உச்சம் பெறுவதால் வாகனம், பூமி லாபம், அரசுவகையில் ஆதாயம், உயர்ந்த பதவி அமையும். செல்வச் செழிப்பு உண்டு. சுய உழைப்பில் சொத்துச் சேர்க்கை உண்டு. ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலில் சாதனை படைப்பார்கள். ஆரோக்கியம் மேம்படும். கல்வி ஆர்வம் கூடும்.
பரிகாரம்: புதன் கிழமை மகா விஷ்ணுவை வழிபடவும்.
கடகம்
கடக ராசிக்கு 3,12-ம் அதிபதியான புதன் உப ஜெய ஸ்தானமான 3-ம்மிடத்தில் உச்சம் பெறுவதால் ஞாபக சக்தி அதிகமாக இருக்கும். காணாமல் போன ஆவணங்கள், நகைகள், கை மறதியாக வைத்த பொருட்கள் திரும்ப கிடைக்கும். சகோதர ஒற்றுமை மேம்படும். வெளிநாட்டு வேலை, பயணம் உறுதியாகும்.
பரிகாரம்: திங்கட்கிழமை அம்மன் வழிபாடு செய்யவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு தன, லாப அதிபதியாகிய புதன் தன ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் சாதகமான பலன் உண்டு. தொட்டது துலங்கும்.வழக்கறிஞர், அரசியல்வாதிகள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை போன்ற வற்றில் இருப்பவர்களுக்கு சுப பலன்கள் இரட்டிப்பாகும். சாதாரண நிலையில் இருப்ப வர்கள் கூட உயர் நிர்வாக பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள்.
பரிகாரம்: சூரிய நாராயணரை வழிபடவும்.
கன்னி
கன்னி ராசிக்கு 1, 10-ம் அதிபதியாகிய புதன் லக்னத்தில் உச்சம் பெறுகிறார். செல்வாக்கு, புகழ், அந்தஸ்து கவுரவம் உயரும்.தொழில் தந்திரம் கூடும்.பல தொழில் துறை பற்றிய அறிவு கூடும். தொழில் ஞானத்தை பயன்படுத்தி பிறருக்கு ஆலோ சனை கூறி சம்பாதிப்பார்கள். கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். அதிகார பலமிக்க அரசாங்க பதவி, அரசியல் செல்வாக்கு ஆதாயம் உண்டு.
பரிகாரம்: கன்னி பெண்களுக்கு இயன்ற தானம் வழங்கவும்.
துலாம்
துலாம் ராசிக்கு புதன் 9, 12-ம் அதிபதியாகிய புதன் ராசிக்கு 12ல் உச்சம் பெறுகிறார். தொழில் உத்தியோகம், உயர் கல்வி நிமித்தமாக வெளியூர், வெளிநாடு செல்லலாம். முன்னோர்க ளின் நல்லாசி கிடைக்கும். பிறவிக் கடன், பொருள் கடன் தீர்க்க உகந்த காலம்.தந்தை வழி பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும். கண் அறுவை சிகிச்சை வெற்றி தரும்.
பரிகாரம்: மகாவிஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபடவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு அஷ்டமாதிபதி மற்றும் லாப அதிபதியான புதன் லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் வழக்குகளில் வெற்றி உண்டாகும். அவமானம், விபத்து, கண்டம், சர்ஜரியால் ஏற்பட்ட பாதிப்புகள் சீராகும். மூத்த சகோதரம், சித்தப்பாவால் ஆதாயம் உண்டு. மறுவிவாக முயற்சி நிறைவேறும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
தனுசு
தனுசு ராசிக்கு 7, 10-ம் அதிபதியாகிய புதன் 10-ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். கூட்டுத் தொழில் முயற்சி வெற்றி தரும். திருமணத் தடை அகலும். கல்வி, புகழ், அரசியல், லாபங்களும்,பூர்வீக வகையில் நன்மையும் கிட்டும். வாழ்க்கைத் துணையாலும் ஆதாயம் உண்டு.
பரிகாரம்: கோதண்ட ராமரை வழிபடவும்.
மகரம்
மகர ராசிக்கு 6, 9-ம் அதிபதியான புதன் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். தொழிலில் மேன்மையும், அரசியல் பதவியும். செல்வாக்கும், சட்டத்துறையில் மதிப்பும் கிடைக்கும். பித்ருக்களுக்கான நீத்தர் கடன் செய்ய உகந்த நேரம். சிலர் தந்தையின் கடனை சுமக்க நேரும். அல்லது தந்தைக்கு வைத்திய செலவு அதிகமாகும். விரும்பிய கடன் கிடைக்கும்.
பரிகாரம்: தாய் மாமாவின் நல்லாசி பெறுவது நல்லது.
கும்பம்
கும்ப ராசிக்கு 5, 8-ம் அதிபதியான புதன் ராசிக்கு 8ல் உச்சம் பெறுகிறார். சிலருக்கு வம்பு வழக்கான காதல் திருமணம் நடக்கும்.சிலருக்கு காதலால் அவமானம், வம்பு, வழக்கு உருவாகும். ஆரோக்கிய குறைபாடு அறுவை சிகிச்சையில் சீராகும். குழந்தைகளால் மனச் சங்கடம் ஏற்படும். சிலருக்கு பதவியில் நெருக்கடி இருக்கும். அல்லது வேலையில் மெமோ வாங்குவார்கள். சுபமும், அசுபமும் கலந்தே நடக்கும்.
பரிகாரம்: மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு உதவ வேண்டும்.
மீனம்
மீன ராசிக்கு 4,7-ம் அதிபதியான புதன் 7-ம்மிடத்தில் உச்சம் பெறுகிறார். திருமணத் தடை அகலும். நல்ல சொத்து சுகத்துடன் கூடிய வாழ்க்கைத் துணை அமையும். வாழ்க்கைத் துணைக்கு தாய் வழி சொத்து கிடைக்கும். கூட்டுத் தொழில் ஆர்வம் கூடும். தடைபட்ட கல்வியைத் தொடரும் வாய்ப்புகள் உள்ளது. தாயின் நல்லாசிகள் கிடைக்கும். கோட்சார புதன் உச்சமடையும். இந்த காலத்தில் உரிய வழிபாட்டு முறைகளை பயன்படுத்தி பயன்பெற வாழ்த்துக்கள்.
- அமாவாசை தானம் பல மடங்கு புண்ணியம் தரும்.
- சோமாவதி அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை திதி, வெவ்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. இதில் ஒரு சில மாதங்களில் வரும் அமாவாசை, தனிச்சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில், ஆவணி மாதம் வரும் அமாவாசை மிகவும் விசேஷமானதாக இருக்கிறது.
ஆவணி மாத அமாவாசை, சிம்ம ராசியில் சூரியன் மற்றும் சந்திரன் ஒன்றாக சஞ்சரிக்கும் போது ஏற்படுகிறது. இந்த ஆண்டு திங்கட்கிழமையான இன்று அமாவாசை வருவதால், சோமாவதி அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது.
இன்று காலை 5.21 மணிக்கு அமாவாசை தொடங்கி நாளை காலை (செவ்வாய்க்கிழமை) 7.24 மணி வரை உள்ளது.
பொதுவாக, அமாவாசை நாளன்று சிவ வழிபாடும், பவுர்ணமி நாளன்று அம்மன் வழிபாடும் செய்வது வழக்கம். அதே போல, அமாவாசைக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது, பித்ரு தோஷம் போக்கும்.
இந்த ஆவணி அமாவாசை, சிவனுக்கு உகந்த நாள், சிவனுக்கு உகந்த திங்கட்கிழமையில் வருவது மிகச் சிறப்பானது.
இன்று அதிகாலை 5 மணிக்கே அமாவாசை தொடங்கி விடுவதால், நண்பகல் நேரத்துக்குள் அமாவாசை திதி கொடுப்பதோ தர்ப்பணம் செய்வதோ செய்து விடலாம்.
சோமாவதி அமாவாசை முடிந்த பிறகு, அவரவர் வசதிக்கு ஏற்ப, தானம் செய்யலாம். அமாவாசை தானம் பல மடங்கு புண்ணியம் தரும் என்பது ஐதீகம்.
பித்ருக்களின் சாபம், தோஷம் ஆகியவை நீங்கவும் வாழ்க்கையில் இருக்கும் பலவிதமான கஷ்டங்கள், பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு அமாவாசை மிகவும் ஏற்ற நாளாகும்.
இந்த சோமாவதி அமாவாசை நாளில் பிறருக்கு தானம் தர்மம் செய்தால் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும். அதுபோல கடந்த கால பாவங்கள் நீங்கும்.
இன்று செய்யப்படும் தானம் முன்னோர்களை மகிழ்ச்சி அடையச் செய்வதாகவும், அவர்களது ஆசிகளை பெறுவதாகவும் கருதப்படுகிறது.
அந்த வகையில் ராசியின் அடிப்படையில் சோமாவதி அமாவாசை நாளில் பிறருக்கு தானம் செய்வது இன்னும் பல நன்மைகளை தரும். அமாவாசை நாளில் எந்தந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை தானம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேஷம்- வெல்லம், கோதுமை மற்றும் பிற உணவுகள்.
ரிஷபம்- நெய் மற்றும் வெள்ளிப் பொருட்கள்.
மிதுனம்- வெண்கலம் மற்றும் பச்சை பயிறு.
கடகம்- வெள்ளை ஆடை மற்றும் பால்.
சிம்மம்- தங்க நகைகள், ஆடைகள் மற்றும் உணவு.
கன்னி- நெய், எண்ணெய் மற்றும் தானியங்கள்.
துலாம்- பால், நெய் மற்றும் தங்கப்பொருட்கள்.
விருச்சகம்- நெய் மற்றும் சிவப்பு ஆடைகள்.
தனுசு- உணவு, தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட பொருட்கள்.
மகரம்- தேங்காய்.
கும்பம்- நெய்.
மீனம்- நெய், தங்க பொருட்கள் தானம் செய்து வழிபடலாம்.
- கடன் வாங்கும் முன் யோசித்தாலே கடன் வாங்குவதில் இருந்து தப்பிக்கலாம்.
- ஆடம்பர தேவைக்காக கடன் வாங்கக் கூடாது.
சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும்பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால் இந்த கடனை உடனே திருப்பி செலுத்த முடியாமல் நிறைய பிரச்சினைகளில் மாட்டிக் கொள்கிறார்கள்.
கடன் வாங்கும் முன் யோசித்தாலே நாம் கடன் வாங்குவதில் இருந்து தப்பிக்கலாம். ஆடம்பர தேவைக்காக கடன் வாங்கக் கூடாது. அடைக்க முடியும் என்றால் மட்டுமே அவசிய தேவைக்கு கடன் வாங்க வேண்டும். நம்முடைய கடன் பிரச்சினை தீர நம்முடைய முன்னோர்கள் பல பரிகாரங்களை கூறி வைத்துள்ளனர். அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்கும் கடன்களை தீர்க்கும் பரிகாரங்களை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
மேஷம்
தயிரை கொண்டு ஏதேனும் மஞ்சள் நிற இனிப்பு பண்டம் தயார் செய்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலையில் பசுவுக்கு கொடுத்துவர கடன் நீங்கி வளம் பெறலாம்.
ரிஷபம்
ஜவ்வரிசி கொண்டு இனிப்பு தயார் செய்து அதை வெள்ளிக்கிழமை அன்று பசுவிற்கு கொடுத்து வந்தால் கடன்களை அடைத்து சுகம் பெறலாம்.
மிதுனம்
தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வர வேண்டும். மாலை நேரத்தில் சூரியன் அஸ்தமனம் ஆவதற்கு முன் இதனை செய்து வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கடன் பிரச்சினை தீரும்.
கடகம்
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறிது வெல்லக்கட்டியை எடுத்து ஓடும் நீரில் விட வேண்டும். அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்று வெல்லக்கட்டியை எடுத்து குரங்குகளுக்கு கொடுத்துவர கடன் பிரச்சினைகள் தீரும்.
சிம்மம்
ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் மண் அகலில் செக்கு நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு நிற திரி போட்டு 8 விளக்குகள் ஏற்றிவர கடன்கள் தீர வழி பிறக்கும்.
கன்னி
சனிக்கிழமைகளில் உளுந்து வடை தானம் செய்ய வேண்டும். (நீங்கள் அதை உண்ணக்கூடாது) மேலும் துளசிக்கு தினசரி நீர்வார்த்து ஒரு மண் அகலில் செக்கு நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வர கடன் பிரச்சினைகள் தீரும்.
துலாம்
பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்ற வேண்டும். இதனை 24 வாரங்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நிச்சயமாக கடன்கள் தீரும். வெள்ளிக்கிழமை அன்று அரச மரத்தடியில் உள்ள விநாயகருக்கு 11 அகலில் தீபமேற்றி அதனை 11 முறை சுற்றி வந்து வழிபட்டால் கடன்கள் தீரும்.
விருச்சிகம்
ஓம் லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை மாலை நேரத்தில் 108 முறை சொல்ல வேண்டும். லட்சுமி நரசிம்மருக்கு காய்ச்சிய பசும்பால் அல்லது பானகம் பிரசாதமாக வைக்கலாம். 48 நாட்கள் தொடர்ந்து இந்த பூஜை செய்தால் கடன் தொல்லையில் இருந்து விடுபட வழி ஏற்படும்.
தனுசு
வீடு இல்லாதவர்களுக்கு வீடுகட்ட அல்லது கோவில் கட்ட செவ்வாய் கிழமைகளில் செங்கல்கள் முடிந்த அளவு வாங்கி கொடுக்க கடன்கள் அடைந்து வளம் பெருகும்.
மகரம்
சனிக்கிழமைகளில் எள்ளு உருண்டை செய்து தானமாக கொடுத்துவர கடன்தொல்லைகள் தீரும்.
கும்பம்
வியாழக்கிழமை மாலை 5 அல்லது 6 மணிக்கு குங்குமப்பூ சேர்த்த பாதாம் கீர் செய்து மகாவிஷ்ணுவுக்கு நிவேதனம் செய்து முதலில் தான் அருந்திவிட்டு பின்னர் மற்றவர்களுக்கு தானமாய் பிரசாதமாக கொடுத்துவர கடன்கள் அடைபடும்.
மீனம்
தொழுநோயாளிகளுக்கு சப்பாத்தியை தானமாக செவ்வாய்க்கிழமை மதியம் 1 அல்லது 2 மணி அல்லது இரவு 8 மணி அல்லது 9 மணிக்குள் கொடுத்துவர கடன்கள் வேகமாக அடைய ஆரம்பிக்கும். குறைந்தது 9 சப்பாத்திகள் கொடுப்பது நலம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்