என் மலர்
நீங்கள் தேடியது "தாய்லாந்து விசா"
- தாய்லாந்தின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை 20 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது.
- இலங்கை, இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பாங்காக்:
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. ஆண்டு தோறும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் தாய்லாந்துக்கு வருகிறார்கள்.
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து அதிக சுற்றுலா பயணிகளை கவரும் நடவடிக்கையாக இந்தியா மற்றும் தைவான் குடிமக்கள் தாய்லாந்து வர விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தாய்லாந்து சுற்றுலா துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "2023-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி முதல் 2024-ம் ஆண்டு மே 10-ம் தேதி வரை தாய்லாந்தில் பயணம் மேற்கொள்ள இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. தாய்லாந்து வரும் இந்தியர்கள் 30 நாட்கள் விசா இல்லாமல் தங்கியிருக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தாய்லாந்தின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை 20 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. அந்த நாட்டின் 7 கோடி மக்கள் தொகையில், சுமார் ஒரு கோடி பேர் சுற்றுலாவினால் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.
சமீபத்தில் இலங்கை, இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் 2.1 கோடி இந்தியர்கள் வெளிநாட்டில் சுற்றுப் பயணம் செய்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, அமெரிக்கா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிரிட்டன், கத்தார், குவைத், கனடா, ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் அதிக அளவில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
- தாய்லாந்து அரசாங்கம் இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவை அறிவித்துள்ளது.
- 2024-ஆம் ஆண்டின் நவம்பர் 11-ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த விசா தளர்வு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து செல்லும் இந்தியப் பயணிகள் முன்னதாகவோ தாய்லாந்தில் இறங்கிய பிறகோ விசா பெற வேண்டிய அவசியம் இல்லை. நவம்பர் 11-ம் தேதி நிறைவடைய இருந்த விசா சலுகையை காலவரம்பின்றி தாய்லாந்து அரசு நீட்டித்துள்ளது.
தாய்லாந்து அரசாங்கம் இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவை அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய குடிமக்கள் நீண்ட நாட்கள் விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்கி வரலாம். 2024-ஆம் ஆண்டின் நவம்பர் 11-ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த விசா தளர்வு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின் படி இந்தியர்கள் தாய்லாந்தில் விசா இல்லாமல் 60 நாட்கள் வரை தங்கி வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
உள்ளூரில் இருக்கும் இமிகிரேஷன் ஆபீஸில் விண்ணப்பித்து 30 நாட்களுக்கு உங்களுடைய வருகையை எக்ஸ்டென்ட் செய்து கொள்ளலாம். இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவை நீட்டித்திருக்கும் காரணத்தினால் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்ல திட்டமிடும் இந்தியர்களுக்கு சுற்றுலா செல்வது மிகவும் எளிதாக மாறியுள்ளது.
ஆவணங்களே இல்லாத புதிய நடைமுறையின் காரணமாக 2024-ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரையில் இந்தியா சுற்றுலா பயணிகளின் வரத்து 16.17 மில்லியனாக அதிகரித்துள்ளது. விசா இல்லாத நுழைவு காரணமாக வார இறுதி விடுமுறையை பயன்படுத்தி தாய்லாந்துக்கு செல்லும் இந்தியர்களும் அதிகரித்துள்ளனர்.