search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிள்ளையார் சுழியின் தத்துவம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிள்ளையார் சுழி போட்ட பிறகு எழுதத் தொடங்குவார்கள்.
    • `உ' என்பது காத்தல்.

    சிலர் ஏதாவது எழுதுவதற்கு முன்பாக 'உ' என, பிள்ளையார் சுழி போட்ட பிறகு எழுதத் தொடங்குவார்கள். 'ஓம்' என்ற மந்திரத்திற்கு பிறகே 'கணேசாய நமஹ', 'நாராயணாய நமஹ', 'சிவாய நம' என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் 'ஓம்' என்பதை, அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது, அ, உ, ம் என்ற எழுத்துக்களை இணைத்தால் 'ஓம்' என்று வரும். 'அ' என்பது படைப்பதையும், 'உ' என்பது காப்பதையும், 'ம்' என்பது அழிப்பதையும் குறிக்கும்.

    'அ' என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது. 'உ' என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக்கொண்டால், ஆயுள் அதிகரிக்கும் என்பதும், ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் தொடங்கிய காரியம் தடையின்றி நடக்கும் என்பதும் தெரிந்த விஷயம்.

    மேலும், `உ' என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மைப் பாதுகாப்பதைக் குறிக்கிறது. நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால், நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காகவே 'உ' என எழுதுகிறோம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விநாயகர் தடைகளை அகற்றுபவர்.
    • பிள்ளையார் சுழி போட்டு செயலை தொடங்கு பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பது ஐதீகம்.

    முன்பெல்லாம் ஓலைச் சுவடியில்தான் நம்மவர்கள் எழுத்தாணி கொண்டு எழுதி வந்தார்கள். அந்த வகையில் `உ' என்ற எழுத்தை எழுதும் போது, ஓலைச்சுவடியின் வலிமையும், எழுத்தாணியின் கூர்மையும் தெரிந்து விடும்.

    செம்மை இல்லாத ஓலைச்சுவடி கிழிந்துவிடும். இதன் காரணமாகவே எழுதத் தொடங்குவதற்கு முன்பாக 'உ' என்ற எழுத்தை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தனர் என்பது அறிவுப்பூர்வமான கருத்து.

    இதற்கு ஆன்மிகக் கருத்தும் சொல்லப்படுகிறது. தமிழ் உயிர் எழுத்துகளில், 'உ'கரம் என்ற எழுத்து முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த எழுத்து விநாயகப் பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இதனை 'பிள்ளையார் சுழி என்றும் சொல்வார்கள்.


    விநாயகர் தன்னுடைய தாய், தந்தையரான உமையாள், உமையவனை துணையாகவும், முதன்மையாகவும் கொண்டிருக்கும் வகையில் சுருக்கமாக 'உ'என்ற எழுத்தை உருவாக்கியதாக சொல்வதுண்டு.

    விநாயகர் தடைகளை அகற்றுபவர். எனவே நம்முடைய காரியங்கள் அனைத்தும் தடைகள் இன்றி வெற்றிபெறுவதற்காக, விநாயகரைத் தொடர்ந்து நாமும் அவருடைய 'உ' என்ற பிள்ளையார் சுழியை பயன்படுத்தி வருகிறோம்.

    'உ' என்ற எழுத்தானது ஒரு சிறிய வட்டத்தில் தான் தொடங்கும். வட்டம் என்பதற்கு தொடக்கமும் இல்லை... முடிவும் கிடையாது. இறைவன் தொடக்கமும், முடிவும் இல்லாதவர் என்பது இதனைக் குறிக்கிறது.


    வட்டத்தைத் தொடர்ந்து, வளைந்து பின் நேர் கோடு செல்லும். இதனை 'ஆர்ஜவம்' என்பார்கள். இதற்கு 'நேர்மை' என்று பொருள். 'வாழ்க்கையில் வளைந்து கொடு, அதே சமயம் நேர்மையை கைவிடாதே' என்பதே இதன் தத்துவம். பிள்ளையார் சுழி போட்டு செயலை தொடங்கு பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பது ஐதீகம்.

    ×