என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காவாலா"
- டீன்ஸ்' படத்தின் புரோமோசனுக்காக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பார்த்திபன் பேசியுள்ள கருத்து தற்போது வைரலாகி வருகிறது.
- . எனவே பார்த்திபன் மறைமுகமாக ரஜினி படத்தை தாக்கிப் பேசுகிறாரா என்று ரசிகர்கள் கடுங்கோபத்தில் உள்ளனர்.
பார்த்திபன் இயக்கிய 'டீன்ஸ்' திரைப்படம் கடந்த ஜூன் 12 ஆம் தேதி 'இந்தியன் 2' படத்துடன் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் 'டீன்ஸ்' படத்தின் புரோமோசனுக்காக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பார்த்திபன் பேசியுள்ள கருத்து தற்போது வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் பேசிய பார்த்திபன், "இப்போதெல்லாம் ஒரு படம் ஹிட் ஆகவேண்டும் என்றால் கதை சரியாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. தமன்னாவை ஆட வைத்தால் போதும் கதை சரியாக இல்லை என்றாலும் கூட படம் ஹிட் ஆகிவிடும்" என கூறியுள்ளார்.
சமீப காலமாக வெளியாகி வரும் ஒரு சில படங்களில் நடிகை தமன்னா நடனமாடிய பாடல்கள் படத்திற்கு வலு சேர்ப்பதாக இருந்தது.நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் படத்தில் தம்மன்னாவின் துள்ளலான நடனத்துடன் இடம்பெற்ற 'காவலா' பாடல் பெரும் ஹிட் அடித்தது. எனவே பார்த்திபன் மறைமுகமாக ரஜினி படத்தை தாக்கிப் பேசுகிறாரா என்று நெட்டிஸின்கள் கடுங்கோபத்தில் உள்ளனர்.
கடைசியாக சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த 'அரண்மனை 4' படத்தில் ராஷி கண்ணா மற்றும் தமன்னா இணைந்து நடனமாடிய 'அச்சசோ' பாடலும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ''இந்தியன் ௨ படம் குறித்து யாரும் நன்றாக சொல்லவில்லை அதனால் இன்னும் படம் பார்க்கவில்லை'' என்று பார்த்திபன் கூறியது விவாதப் பொருளானதையும் கவனிக்க வேண்டியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'.
- இப்படம் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் 'ஜெயிலர்'. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து ஹிட்டடித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்றுள்ள 'காவாலா' பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்