search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லோட்டஸ்"

    • லோட்டஸ் எலெட்ரெ எஸ்.யு.வி. மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய லோட்டஸ் எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 600 கி.மீ. ரேன்ஜ் வழங்குகிறது.

    பிரிட்டன் நாட்டு கார் உற்பத்தியாளரான லோட்டஸ் இந்திய சந்தையில் தனது முதல் வாகனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த வாகனம் முற்றிலும் எலெக்ட்ரிக் மூலம் இயங்கும் ஹைப்பர் எஸ்.யு.வி. ஆகும். இந்த மாடல் எலெட்ரெ, எலெட்ரெ S மற்றும் எலெட்ரெ R என மூன்று ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த மாடல் நாடு முழுக்க லோட்டஸ் விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

    காரின் வெளிப்புறம் லோட்டஸ் எலெட்ரெ மாடலில் பிரமாண்ட முகப்பு, மெல்லிய மற்றும் அம்பு வடிவிலான டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப், ஆக்டிவ் கிரில் மற்றும் அகலமான ஏர் டேம்கள் உள்ளன. பக்கவாட்டில் பிளாக் பெயின்ட் செய்யப்பட்ட ரூஃப், பிளாக்டு அவுட் வீல் ஆர்ச்கள் வழங்கப்பட்டு உள்ளன.

     

    பின்புறத்தில் ஃபுல் லென்த் எல்.இ.டி. லைட் பார் உள்ளது. இது டெயில் லைட்களுடன் இணையும் வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் ரூஃப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், ஏர் டேம்கள், ஸ்லோபிங் ரூஃப்லைன், பிளாக்டு-அவுட் ரியர் பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. லோட்டஸ் எலெட்ரெ மாடல் நேட்ரான் ரெட், காலோவே கிரீன், ஸ்டெல்லார் பிளாக், கைமு கிரே, பிளாசம் ரிபே மற்றும் சோலார் எல்லோ போன்ற நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இதன் உள்புறத்தில் 15.1 இன்ச் அளவில் மடிக்கக்கூடிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லோட்டஸ் ஹைப்பர் ஒ.எஸ்., 4-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 12 வழிகளில் எலெகெட்ரிக் அட்ஜஸ்ட வசதி கொண்ட முன்புற இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ADAS சூட், ஏர் பியூரிஃபையர், மல்டி-கலர் ஆம்பியண்ட் லைட்டிங், 15 ஸ்பீக்கர்கள் அடங்கிய சவுண்ட் சிஸ்டம் உள்ளது.

     

    இந்த எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் நான்கு மற்றும் ஐந்து பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இத்துடன் இன்டீரியர் தீம்-ஐ ஆறு விதமான ஸ்டைல்களில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    புதிய லோட்டஸ் எலெட்ரெ மாடலில் 112 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. எலெட்ரெ மற்றும் எலெட்ரெ S மாடல்களில் டூயல் மோட்டார் செட்டப் உள்ளது. இவை முழு சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன. செயல்திறனை பொருத்தவரை 600 ஹெச்.பி. பவர், 710 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

     

    எலெட்ரெ R மாடலில் டூயல் மோட்டார் செட்டப், 2 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 490 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இது 900 ஹெச்.பி. பவர், 985 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    விலை விவரங்கள்:

    லோட்டஸ் எலெட்ரெ ரூ. 2 கோடியே 55 லட்சம்

    லோட்டஸ் எலெட்ரெ S ரூ. 2 கோடியே 75 லட்சம்

    லோட்டஸ் எலெட்ரெ R ரூ. 2 கோடியே 99 லட்சம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ×