search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிமக் நெவெரா"

    • ஆட்டோமோடிவ் டெஸ்டிங் பபென்பர்க் களத்தில் இதற்கான டெஸ்டிங் செய்யப்பட்டது.
    • நெவெராவை ரிவர்சில் முழு திறனை வெளிப்படுத்தும் வகையில் இயக்கப்பட்டது.

    ரிமக் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஹைப்பர்கார் நெவெரா கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறது. ரிவர்சில் அதிவேகமாக செல்லும் கார் என்ற சாதனையை ரிமக் நெவெரா படைத்திருக்கிறது. ஜெர்மனியில் உள்ள ஆட்டோமோடிவ் டெஸ்டிங் பபென்பர்க் களத்தில், இதற்கான டெஸ்டிங் செய்யப்பட்டது.

    முன்னதாக இதே களத்தில் 20-க்கும் அதிக அக்செல்லரேஷன் மற்றும் பிரேக்கிங் சாதனைகளை நெவெரா முறியடித்து இருந்தது. சிமுலேஷன் எனப்படும் இயந்திர பரிசோதனையில் மணிக்கு 241 கிலோமீட்டர் வேகத்தை எட்ட முடியும் என்று தெரியவந்தது. இதனை பரிசோதிக்க முடிவு செய்த குழு, நெவெராவை ரிவர்சில் முழு திறனை வெளிப்படுத்தும் வகையில் இயக்கியது. அதன்படி ரிமக் நெவெரா ரிவர்சில் மணிக்கு 275.74 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளது.

    "சோதனையின் போதே, அது கிட்டத்தட்ட பழகியதை போன்ற அனுபவத்தை கொடுத்தது. எடுத்த எடுப்பில், பின்புறம் பார்க்க வேண்டும், அப்போது காரின் வேகம் அதிகரித்துக்கொண்டே போகும் போது காட்சிகள் நிழலாடுவதை போன்று தெரியும். இந்த நிலையில், உங்களது கழுத்து- காரை வேகமாக வந்து பிரேக்கிங் செய்யும் போது முன்புறம் செல்வதை போன்று தள்ளப்படும்," என்று காரை ரிவர்சில் இயக்கிய டெஸ்ட் ஓட்டுனர் கோரன் ரென்டக் தெரிவித்தார்.

    நெவெராவில் உள்ள புதுமை-மிக்க டிரைவ்-டிரெயின் காரணமாக இந்த சாதனை சாத்தியமானது. வழக்கமாக கார்களில் உள்ள டிரான்ஸ்மிஷன் இந்த காரில் இல்லாததால், நெவெராவை முன்புறம் மணிக்கு 411 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கிய அதே மோட்டார்கள் இந்த காரினை ரிவர்ஸ்-இலும் இத்தகைய வேகத்தில் இயக்க வழி செய்தது.

    முன்னதாக கேட்டர்ஹாம் 7 ஃபயர்பிலேடின் டாரென் மேனிங் 2001-ம் ஆண்டு ரிவர்சில் காரினை மணிக்கு 165.08 கிலோமீட்டர்கள் வேகத்தில் இயக்கியது கின்னஸ் உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×