search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லம்போர்கினி ரிவால்டோ"

    • லம்போர்கினி ரிவால்டோ மாடலில் 6.5 லிட்டர் வி12 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த கார் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 2.5 நொடிகளில் எட்டிவிடும்.

    லம்போர்கினி நிறுவனத்தின் முற்றிலும் புதிய சூப்பர் கார் ரிவால்டோ இந்திய சந்தையில் அடுத்த மாதம் 6-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது அந்நிறுவனத்தின் மிகவும் பிரபலமான அவென்டடார் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். ஹைப்ரிட் சூப்பர்கார் என்ற முறையில், இந்த காரில் வி12 ரக என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    லம்போர்கினி ரிவால்டோ மாடலில் 6.5 லிட்டர் வி12 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 825 ஹெச்.பி. பவர், 725 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜினுடன் மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் 3.8 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த சூப்பர்காரில் உள்ள என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்கள் ஒருங்கிணைந்து 1015 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆல் வீல் டிரைவ் செட்டப் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் இறக்குமதி செய்யப்படும் என்பதால், புதிய லம்போர்கினி ரிவால்டோ விலை ரூ. 8 கோடியில் இருந்து துவங்கும் என்று தெரிகிறது. இதன் ஆன் ரோடு விலை கிட்டத்தட்ட ரூ. 10 கோடி வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்த மாடலுக்கான முன்பதிவு தற்போதைக்கு துவங்காது என்றே தெரிகிறது. முன்னதாக இந்த ஆண்டுக்கான யூனிட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததாக லம்போர்கினி அறிவித்தது.

    ×