என் மலர்
நீங்கள் தேடியது "பாஜக. சிவசேனா"
- பா.ஜனதாவை ஜெயிக்க வைத்தால், ராமர் கோவிலில் இலவச தரிசனம்.
- தோற்றகடிக்கப்பட்டால் மத்திய பிரதேச மக்கள் சாமி தரிசனம் செய்ய மறுக்கப்படுவார்களா?.
சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியை சேர்ந்த தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் கூறியதாவது:-
அமித் ஷா மற்றும் பா.ஜனதா தலைவர்கள் மத்திய பிரதேச மாநில தேர்தல் பிரசாரத்தின்போது, பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைத்தால் மத்திய பிரதேச மக்கள் ராமர் கோவிலில் இலவசமாக தரிசனம் பெறலாம் எனக் கூறியதாக கேட்டறிந்தேன். மேலும், அறிக்கைகளை படித்தேன்.
கடவுள் ராமர் ஒட்டுமொத்த இந்தியா, உலகத்திற்குரியவர். மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா தோல்வியடைந்தால், அதன்பின் அங்குள்ள மக்கள் சாமி தரிசனம் செய்ய மறுக்கப்படுவார்கள் என்று அர்த்தமாகுமா?. நம் நாட்டில் என்ன விதமான அரசியல் சென்று கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.